நாகர்கோவில் : பார்லிமென்ட் தேர்தலை முன்னிட்டு போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். இதன்படி குமரி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், நாகர்கோவில் துணை சூப்பிரண்டு ரத்தினவேலு ஆகியோர் மாற்றப்பட்டனர். பாலகிருஷ்ணன், திருச்சி மாவட்ட மதுவிலக்கு பிரிவுக்கும், ரத்தினவேலு மதுரை மாநகரத்துக்கும் மாற்றப்பட்டு உள்ளனர். இவர்களில் ரத்தினவேலுவுக்கு பதிலாக மதுரை துணை சூப்பிரண்டு பேச்சிமுத்துப்பாண்டியன் நியமிக்கப்பட்டு இருக்கிறார். மேலும், காலியாக இருந்த நில அபகரிப்பு பிரிவு துணை சூப்பிரண்டு பணியிடத்துக்கு மதுரை மாவட்டத்தில் பணியாற்றும் ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டு உள்ளார். இதுற்கான உத்தரவை டி.ஜி.பி.ராமானுஜம் பிரப்பித்தார். துணை சூப்பிரண்டு ரத்தினவேலுவை இடமாற்றம் செய்ய வேண்டும் என கடந்த வாரங்களுக்கு முனபு வக்கீல்கள் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE