பதிவு செய்த நாள் :
கருத்துகள் (299)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

கூட்டணி தொடர்பான மெகா சீரியலில், முக்கிய திருப்பமாக, 'பா.ஜ.,வுடன் கூட்டணி பேச்சு துவங்கியுள்ளது' என, தே.மு.தி.க., சார்பில், நேற்று தான் முதன்முதலாக, அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.இதை வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்துள்ள, தமிழக பா.ஜ., தலைவர், பொன்.ராதாகிருஷ்ணன், இன்னும் இரண்டு நாளில், பா.ஜ., - தே.மு.தி.க., கூட்டணி முடிவாகி விடும் என்றும், பா.ஜ., தேசிய தலைவர், ராஜ்நாத் சிங் சென்னையில் இதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என்றும் தெரிவித்தார்.இதற்கிடையில், நிர்வாகக் குழுவை கூட்டி விவாதித்த, பா.ம.க., தலைவர், ராமதாஸ், பா.ஜ., கூட்டணியில் சேரும் முடிவை வெளியிட்டுள்ளார். தொகுதிகளின் எண்ணிக்கை, தே.மு.தி.க., வருகைக்கு பின் தெரியவரும் எனவும் கூறியுள்ளார்.இதனால், தி.மு.க.,வுடன் நேற்று காலையில், தே.மு.தி.க.,வினர் நடத்திய பேச்சுவார்த்தை கேள்விக்குறியாகி உள்ளது.

குழப்பம்:
தமிழகத்தில், தே.மு.தி.க., - பா.ம.க., - ம.தி.மு.க., அடங்கிய, பெரிய கூட்டணியை அமைக்க, பா.ஜ., ஆரம்பம் முதல் முயற்சி எடுத்து வருகிறது. அதற்கான பேச்சுவார்த்தை, தே.மு.தி.க., விஷயத்தில் மட்டும் இழுபறி நிலைக்கு வந்தது.தொடர்ந்து பேசிய பின்னும், உடன்பாட்டுக்கு தே.மு.தி.க., வரவில்லை. காங்கிரஸ், தி.மு.க., என, மறு பக்கத்திலும், அக்கட்சி திரைமறைவு பேச்சு நடத்தியது தான் குழப்பத்துக்கு காரணம் என தெரியவந்தது. இதையடுத்து, கூட்டணி பேச்சை முடித்து, உடன்பாட்டை வெளியிடப் போவதாக, பா.ஜ., எச்சரிக்கை விடுத்தது. ஆனாலும், தே.மு.தி.க., அசரவில்லை. நேற்று காலை வரை, யாருடன் கூட்டணி என்பதில் குழப்ப நிலையை நீடிக்க வைத்தது.நேற்று காலையில், தி.மு.க., நிர்வாகிகளுடன், தே.மு.தி.க., நிர்வாகிகள் பேச்சு நடத்தியதில், 10 தொகுதிகள் என பேசப்பட்டு உள்ளது. அதை தே.மு.தி.க.,வும் ஏற்றுக்கொள்ளும் என, தி.மு.க., நம்பிக்கையோடு இருந்தது. மாவட்ட

செயலர்களை எல்லாம் சென்னைக்கு அழைத்து, வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிடவும் அக்கட்சி ஆயத்தமானது.

வலியுறுத்தல்
இந்நிலையில், டில்லியில்முகாமிட்டுள்ள, தமிழக பா.ஜ., தலைவர்கள், பொன்.ராதா கிருஷ்ணன், இல.கணேசன், மோகன்ராஜுலு ஆகியோர், அவர்களது தேசிய தலைவர், ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேசினர்.அப்போது, 'தே.மு.தி.க.,வுடன் கூட்டணி பேசி வருவதாக, பா.ஜ., தரப்பில் இருந்து தான், தொடர்ந்து கூறி வருகிறோம். ஆனால், தே.மு.தி.க., தரப்பில் இருந்து இதுவரை, அதை ஆமோதித்து ஒரு அறிக்கை கூட வெளியிடப்படவில்லை. இதனால், கூட்டணி குறித்த குழப்பம், பா.ஜ.,வினர் மத்தியிலும் எழுந்துள்ளது. இதை தீர்த்து வைக்க வேண்டுமானால், பா.ஜ.,வுடன் கூட்டணி பேச்சு நடப்பதாக, தே.மு.தி.க., முதலில் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட வேண்டும்' என, வலியுறுத்தினர்.இந்த யோசனை குறித்து, நேற்று மாலையில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை ஏற்று, அவசர அவசரமாக, 'லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக, பா.ஜ.,வுடன் பேச்சு துவங்கியுள்ளது'

Advertisement

என, தே.மு.தி.க., சார்பில், அதிகாரபூர்வமாக அறிவிப்பு, அவர்களது கட்சி, 'டிவி'யில் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில்,
'தே.மு.தி.க.,வின் இந்த அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. கூட்டணி பேச்சு நல்ல விதமாக நடந்து வருகிறது. கூட்டணி அறிவிப்பை, பா.ஜ., தேசிய தலைவர் அறிவிப்பார். அதற்காக அவரை, சென்னை வரும்படி அழைத்துள்ளோம். இன்னும் இரண்டு நாளில் அவர் சென்னை வருவார்' என்றார்.

பா.ம.க.,:
இதற்கிடையில், திண்டிவனம் அருகே உள்ள, தைலாபுரத்தில், பா.ம.க.,வின் நிர்வாகக் குழு கூடியது. அதில் பேசிய, அக்கட்சியினர் நிறுவனர் ராமதாஸ், 'பா.ஜ.,வுடன் கூட்டணி பேசி முடிவாகி விட்டது. தே.மு.தி.க., கூட்டணியில் இருந்தால், ஏழு முதல் எட்டு சீட் கிடைக்கும். தே.மு.தி.க., வரவில்லை என்றால், 10க்கும் மேற்பட்ட தொகுதிகள் பெற முடியும். ஆனால், கூட்டணி முடிவை, இப்போதைக்கு அறிவிக்க வேண்டாம். அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி இல்லை என, உறுதியானதும், கூட்டணி குறித்து நாம் முறையாக அறிவிக்கலாம்' என, கூறியுள்ளதாக, பா.ம.க., வட்டாரம் தெரிவித்தது.
- நமது சிறப்பு நிருபர் -
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (299)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Wensaslaus Sahayaraj - Nagercoil,இந்தியா
14-மார்-201408:56:20 IST Report Abuse
Wensaslaus Sahayaraj கூட்டணி கட்சிகளுக்கு ஒரு வரைமுறை இல்லை, ஒரு கொள்கை இல்லை, தன்மானம் இல்லை. எனவேதான் சுயமாக முடிவு எடுக்க முடியவில்லை
Rate this:
Share this comment
Cancel
muthu Rajendran - chennai,இந்தியா
08-மார்-201401:08:41 IST Report Abuse
muthu Rajendran நடுநிலை மக்கள் குறிப்பாக படித்த , பணிபுரியும் நடுத்தர வர்கத்தினர் எப்படி ஆளுங்கட்சியை ஆதரிப்பர்களோ தெரியவில்லை. மாநகராட்சி ,அரசு அலுவலகங்களில் மக்கள் தங்கள் தேவைகளுக்கு அணுகினால் என்ன பாடு படவேண்டியுள்ளது ? என்பதெல்லாம் மக்கள் நினைவில் வைத்திருந்தால் என்ன ஆகுமோ ? மொத்தத்தில் மதிய மாநில ஆளுங்கட்சிகளுக்கு மக்கள் பாடம் தருவார்களா ? என்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Nagesh Perumal Mutharaiyar - Sembawang,சிங்கப்பூர்
08-மார்-201400:14:28 IST Report Abuse
Nagesh Perumal Mutharaiyar இவர்கள் எல்லாம் ஆளாளுக்கு வாக்குகளை பிரித்து அதிமுகவை அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற செய்ய போகிறார்கள்... இதுதான் நடக்கும்..
Rate this:
Share this comment
Cancel
Nandakumar - chennai,இந்தியா
07-மார்-201423:37:37 IST Report Abuse
Nandakumar ஜெயலலிதா 2013 சட்டசபையில் அறிவிதுதுபோல், நீர்ப்பாசன உள்கட்டமைப்பு வசதி மேம்பட முதல்–அமைச்சர் பல திட்டங்கள் அறிவித்து அதற்க்கு நிதி ஒதிக்கீடு செய்து 11 மாவட்டங்களில் அடிக்கல் நாட்டினார். அதன் மூலம் 1) தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ராமகொண்டஅள்ளி, சுஞ்சல்நத்தம், நெருப்பூர் மற்றும் நாகமரை ஆகிய மிகவும் வறட்சியான கிராமங்களில் நீரினைத் தேக்கி பாசன வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க மத்தளப்பள்ளம் ஆற்றின் குறுக்கே புதிய ஏரி 55.632 மில்லியன் கனஅடி நீரை சேமித்து, 700 ஏக்கர் நிலப்பரப்பிற்கு நேரடி முதல் போக பாசனமும், 400 ஏக்கர் நிலப்பரப்பிற்கு இரண்டாம் போக பாசன வசதியும் பெறும் வகையில் மத்தளப்பள்ளம் ஆற்றின் குறுக்கே 14 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஏரி 2)திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், ஜெகநாதபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 15-க்கும் மேற்பட்ட கிராமங்களின் நிலத்தடி நீர் செறிவூட்டுப் பெறவும், 0.12 மில்லியன் கனஅடி நீரை தேக்கி வைத்திடவும், இருளிப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே 6 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கலிங்கல் 3)வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், சித்தாத்தூர் கிராமம் அருகில் பாலாற்று பகுதியில் செல்லும் மோர் தானா வலதுபுறக்கால் வாய் பகுதியில் வெள்ளத்தினால் சேதமடைந்த கால்வாய் கட்டமைப்பினை நீக்கி, வெள்ள காலங்களில் அப்பகுதியில் கால்வாய் கட்டமைப்பு சேதம் ஏற்படா வண்ணமும், அப்பகுதியிலுள்ள சுமார் 20 கிராமங்களில் குடிநீர் வசதியை மேம்படுத்திடவும், 207 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றிடவும், 1 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கிணற்றுடன் கூடிய உள்வாங்கி மேலேற்றும் கால்வாய் 4)கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டத்திலுள்ள கீழப்பாலையூர், மருங்கூர், தேவங்குடி, காவனூர் மற்றும் பவழங்குடி ஆகிய வறண்ட பகுதிகளில் 1700 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றிடவும் 5 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள படுகை அணை விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், மு. நாகலாபுரத்தை சுற்றியுள்ள கிராமங்களில் அமைந்துள்ள 165 ஆழ்துளை கிணறுகள் 271 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் பொருட்டும், வைப்பாற்றின் குறுக்கே 5 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 320 மீட்டர் நீளம் கொண்ட தடுப்பணை 5)சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டத்தில் வைகை ஆற்றின் குறுக்கே 12 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள படுகை அணை 6)திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், ஓரத்தூர் கிராமத்தில் பாமணி ஆற்றின் குறுக்கே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 770 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் கட்டப்பட்டுள்ள தளமட்ட சுவர் திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டத்தில் 350 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் கூழையார் வடிகாலின் குறுக்கே 22 லட்சம் ரூபாய் மதிப் பீட்டில் அமைக்கப் பட்டுள்ள நீரொழுங்கி 7)திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் வட்டம், கலிங்கமுடையான்பட்டி கிராமத்திற்கு அருகே 117.62 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், கோவிந்தபுரம் கிராமம், வீரசோழன் ஆற்றின் குறுக்கே 724 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தள மட்டச்சுவர் 8)கோயம்புத்தூர் மாவட்டம், சொக்கனூர் கிராமத்தில் வரட்டாற்றின் குறுக்கே 30 மீட்டர் நீளம் மற்றும் 3.50 மீட்டர் உயரத்துடன், 295.07 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை 9)ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், அட்டவணைப்புதூர் கிராமம் சித்தாற்றின் குறுக்கே 47 மீட்டர் நீளம் மற்றும் 2.06 மீட்டர் உயரத்துடன், 65 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி உறுதி செய்திடவும், 16.50 ஏக்கர் நிலங்கள் புதிதாக பாசன வசதி பெற்றிடவும் 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை 10)திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி கிழக்கு வட்டத்தில் பொதுப் பணித்துறை தலைமைப் பொறியாளர் அலுவலக வளாகத்தில் 389.43 சதுர மீட்டர் பரப்பளவில், 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தரக்கட்டுப்பாடு ஆய்வகம், உட்கோட்டம் மற்றும் பிரிவு அலுவலகக் கட்டடங்கள் என மொத்தம் 49 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பாசன உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கட்டடங்களை 11 மாவட்டங்களில் பெப்ரவரி 14 2014ல் முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைதுள்ளார்.
Rate this:
Share this comment
soundararajan - Udumalaipettai,இந்தியா
24-ஏப்-201400:13:31 IST Report Abuse
soundararajanஇவை எல்லாமே வெறும் அறிவிப்புகளோடு மட்டுமே நின்று விடுகின்றன என்பதுதான் கொடுமையானது. ஜெயலலிதாவின் ஆட்சியில் எல்லா திட்டங்களுமே வெறும் அறிவிப்பு, அடிக்கல் நாட்டுவது என்பதுடன் முடிந்து விடுகிறது. எத்தனை திட்டங்கள் முடிவுற்றன என்பதுதான் கேள்வி....அறிவித்த padi நிதி ஒதுக்கீடு செய்து இருந்தால் அந்த நிதி எங்கே போனது ? பதில் undaa ?...
Rate this:
Share this comment
Cancel
Nandakumar - brussels,பெல்ஜியம்
07-மார்-201423:36:07 IST Report Abuse
Nandakumar குடிநீர் அபிவிருத்தித் திட்டகளுக்காக 2013 சட்டசபையில் ஜெயலலிதா அறிவிதுதுபோல் 1)திருவண்ணாமலை நகராட்சியில் 36 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், 2) கடலூர் மாவட்டம், பண்ருட்டி நகராட்சியில் 3 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் அபிவிருத்தித் திட்டங்கள் 3) காஞ்சிபுரம் நகராட்சியில் 17 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடைத் திட்டம் 4) தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் புதுப்பாளையம் ஒன்றியங்களைச் சார்ந்த 20,314 பேர் பயனடையும் வகையில் 40 குடியிருப்புகளுக்கு 1 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர்த் திட்டம் 5)நாகப்பட்டினம் மாவட்டம், குத்தாலம் ஒன்றியத்தைச் சார்ந்த குடிநீர் தரம் பாதிக்கப்பட்ட 18 குடியிருப்புகளைச் சேர்ந்த 14,547 பேர் பயனடையும் வகையில் 3 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர்த் திட்டம் 6 மாவட்டங்களிலுள்ள 9 பேரூராட்சிகளில் 2 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள 10 குடிநீர் வழங்கல் மேம்பாட்டுப் பணிகள் என மொத்தம் 64 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் மற்றும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளும் , 6) திருச்சி மாநகராட்சியில் நாள் ஒன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் ரூ.221.42 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்ட குடிநீர் அபிவிருத்தி திட்டங்கள் , 7)போளூர் ஒன்றியம் படவீடு மற்றும் கும்பகோணம், அனத்த நல்லூர் ஒன்றியங்களில் கூட்டு குடிநீர் திட்டங்களையும், மேலும் 8) தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் 1) கரூர் மாவட்டம், கரூர் ஊராட்சி ஒன்றியம், மண்மங்கலம் மற்றும் 71 குடியிருப்புகளுக்கு 2 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர் அபிவிருத்தித் திட்டம் 9)கோயம்புத்தூர் மாவட்டம், காரமடை ஊராட்சி ஒன்றியம், தேக்கம்பட்டி மற்றும் 31 குடியிருப்புகளுக்கு 3 கோடியே 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர் அபிவிருத்தித் திட்டம் 10)ஈரோடு மாவட்டம், அந்தியூர் பேரூராட்சிக்கான 3 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் அபிவிருத்தித் திட்டம் என 8 கோடியே 63 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் திட்டங்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா மக்கள் பயன்பாட்டிற்கு 2014 பெப்ரவரி 12 மற்றும் 20 தேதிகளில் திறந்து வைதுள்ளார்
Rate this:
Share this comment
Cancel
Nandakumar - brussels,பெல்ஜியம்
07-மார்-201423:35:42 IST Report Abuse
Nandakumar பாதுகாக்கப்பட்ட குடிநீர்காக 2012 சட்டசபையில் ஜெயலலிதா அறிவித்தது போல் 1) திருநெல்வேலி மாநகராட்சியில் 78,600 மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் 22 கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறை வேற்றப்பட்டுள்ள குடிநீர் மேம்பாட்டுத் திட்டம் 2) கரூர் மாவட்டம், புஞ்சைபுகளூர் பேரூராட்சியில் 20,300 மக்கள் பயனடையும் வகையில் நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 70 லிட்டர் வீதம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் பொருட்டு 2 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் அபிவிருத்தித் திட்டங்கள் 3),விழுப்புரம் நகராட்சி குடிநீர் அவிவிருத்தித் திட்டம் 9 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 90 லிட்டர் வீதம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கபடுகிறது , இதன் மூலம் 95,439 பேர் பயன் அடைதுள்ளர்கள். 4) மற்றும் ஈரோடு மாவட்டம், ஆப்பக்கூடல் பேரூராட்சியில் 10,772 பேர் பயனடையும் வகையில் 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 90 லிட்டர் வீதம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் குடிநீர் அபிவிருத்தித் திட்டம் 5) திருச்சிராப்பள்ளி மாவட்டம், உப்பிலியாபுரம் பேரூராட்சியில் 7,000 பேர் பயனடையும் வகையில் 24 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 70 லிட்டர் வீதம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் குடிநீர் அபிவிருத்தித் திட்டம் 6) திருவண்ணாமலை மாவட்டம், அனக்காவூர் ஒன்றியத்திற்குட்பட்ட சித்தாமூர் மற்றும் 27 குடியிருப்புகளில் 13,756 பேர் பயனடையும் வகையில் 1 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 40 லிட்டர் வீதம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் கூட்டுக் குடிநீர்த் திட்டம் 7) காஞ்சீபுரம் மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட மேலமையூர் மற்றும் 12 குடியிருப்புகளில் 7,357 பேர் பயனடையும் வகையில் 97 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 40 லிட்டர் வீதம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் கூட்டுக் குடிநீர்த் திட்டம் 8) வேலூர் மாவட்டம், வாலாஜா ஒன்றியத்திற்குட்பட்ட சுமைதாங்கி மற்றும் 13 குடியிருப்புகளில் 11,231 பேர் பயனடையும் வகையில் 99 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 40 லிட்டர் வீதம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் கூட்டுக் குடிநீர்த் திட்டம் 9) கன்னியாகுமரி மாவட்டத்தில், 1,86,347 பேர் பயனடையும் வகையில் 16 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 40 லிட்டர் வீதம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் மேல்புரம் ஒன்றியத்தைச் சேர்ந்த 79 குடியி ருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் மற்றும் 10) களியக்கா விளை, கொல்லங் கோடு, மேல்புரம் ஆகிய மூன்று கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்கான ஒருங்கி ணைந்த சுத்திகரிப்பு நிலையம் என மொத்தம் 21 கோடியே 47 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைத்த குடிநீர்த் திட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத் திலுள்ள மூன்று கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்கான குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் என்ன இப்படி பல குடிநீர் அபிவிருத்தித் திட்டngalai முதல்–அமைச்சர் ஜெயலலிதா டிசம்பர் 23 2013 காணொலிக் காட்சி மூலமாகத் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைதுள்ளார்.
Rate this:
Share this comment
Cancel
DDS - Belfast,யுனைடெட் கிங்டம்
07-மார்-201422:49:58 IST Report Abuse
DDS எனக்கொரு சந்தேகம் , எந்த கொள்கையும் இல்லாத விஜயகாந்துக்கு யார் ஒட்டு போடுகிறார்கள்.?. இலங்கையில் அப்பாவி மக்கள் லட்சம் பேர் கொல்லப்பட்டபோது , மௌனம் காத்த இவர் , காவேரி பிரச்னை பற்றி வாய் திறக்காத இவர் , முல்லை பெரியார் அணை பற்றி வாய் திறக்காத இவர் எப்படி தலைவராக செயல்படமுடியும்.. இந்த கட்சிக்கு 3 தொகுதிக்கு மேல் சீட் கொடுப்பது வீண்..
Rate this:
Share this comment
Cancel
KADER - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
07-மார்-201422:33:04 IST Report Abuse
KADER இது தொகுதி பேரம் இல்லை பண பேரம். இவர் கேட்கும் தொகை படியவில்லை இப்போது ஓரளவுக்கு படிந்திருக்கும். இவர் கட்சி நடத்துவதே மனைவிக்கும் மச்சினனுக்கும் வேண்டிதான். கிடைத்த எம்எல்ஏ க்களையே கூடவைக்க துப்பில்லை எம்பி ஆக்கபோஹிண்டாராம் நான் இந்த ஆள் சினிமாவில் உள்ளபோது நல்லவர் என்று நினைத்தேன் இப்படி கேனையனாக இருப்பார் நினைக்கவில்லை சொந்தமாக கல்லூரி வைத்து விட்டு மகனை எசறேம்மில் சேர்த்து விட்டு இவர் காலேஜே நல்லது என்று சொல்லுஹிண்டார் நல்லவேளை பிரதமர் கனவு காணவில்லை
Rate this:
Share this comment
Cancel
s.vijay krishnan - coimbatore,இந்தியா
07-மார்-201421:11:38 IST Report Abuse
s.vijay krishnan பிஜேபி விஜயகாந்த் கூட கூட்டணி வச்சா தமிழ்நாடுல அம்மா வின் பண்றது உறுதி. பிஜேபி க்கு ஒரு எடம் கூட கிடைகாது கண்டிப்பாக. வெற்றி அம்மாவுக்கே 40/40
Rate this:
Share this comment
Cancel
UNMAI SUDUM - TAMIL NADU,இந்தியா
07-மார்-201419:13:49 IST Report Abuse
UNMAI SUDUM BJP+DMDK +MDMK +PMK இந்த கூட்டணி யூகிக்க முடியாத கூட்டணி. ஆனால் தமிழ் அருவி மணியன் அவர்களின் சீரிய முயிற்சியால் இந்த கூட்டணி அமைந்துள்ளது. இந்த கூட்டணி வெற்றி பெற வேண்டும். ஏன் எனில் தி மு க மற்றும் அ தி மு க விற்கு மாற்று வேண்டும் எனில் முதலில் எதிரிகள் ஒன்று இணைய வேண்டும். இல்லையேல் மீண்டும் இரண்டு கட்சிகளே ஆட்சிக்கு வரும். இவர்களின் மாவட்ட, வட்ட நிர்வாகிகளின் செல்வாக்கு குறைய வேண்டும். அவர்கள் நடத்தும் சாராய நிறுவனங்கள் மூட பட வேண்டும். அதற்கு நாம் ஒன்றுபட்டு இந்த கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும். இதனால் இன்று எந்த பலனும் ஏற்படாவிட்டாலும் எதிர் காலத்தில் நல்ல பலன் உண்டு. சிந்திப்போம் செயல் படுவோம். விஜயகாந்த் நல்ல நிர்வாகி அல்ல என நாம் நினைக்கலாம். ஆனால் அவர் கொள்ளையர் அல்ல. ராமதாஸ் நல்ல மனிதர் அல்ல என நினைக்கலாம். ஆனால் அவர் நிழல் பட்ஜெட் மற்றும் தொலைநோக்கு கொள்கைகள் என்றுமே சிறப்பாக இருக்கும். வை கோ எப்பொழுதும் நல்லவர். ஆனால் வெற்றிபெறாதவர். மிக பெரிய வாய்ப்பு நமக்கு இப்பொழுது அமைந்துள்ளது. இதனை பயன்படுத்தாவிட்டால் நாம் எப்பொழுதும் இந்த இரு கட்சிகளில் பிடியில் இருந்து வெளியில் வரமுடியாது. தூங்க செல்வதற்கு முன் சிறிது நேரம் சிந்தியுங்கள் உங்கள் அருகில் உள்ள இந்த இரு (தி மு க, அ தி மு க ) கட்சிக்காரர்களின் சொத்துக்கள் எப்படி விரைவாக வளர்ச்சியுற்றது. ஆனால் காலை முதல் மாலை வரை உழைக்கும் உங்கள் நிலைமை எப்படி உள்ளது என. அன்புடன் உங்களில் ஒருவன்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X