காங்கிரசுக்கு சம்மட்டி அடி கொடுங்கள்!முதல்வர் ஜெ., ஆவேசம்

Added : மார் 07, 2014 | கருத்துகள் (43)
Share
Advertisement
''விவசாயிகளின் நலனுக்கு எதிரான மரபணு மாற்று பயிர்களின் கள ஆய்வுக்கு அனுமதி அளித்துள்ள மத்திய காங்., அரசுக்கு, வரும் தேர்தலில், சம்மட்டி அடி கொடுக்க வேண்டும்,'' என, முதல்வர் ஜெயலலிதா, தேர்தல் பிரசாரத்தின்போது ஆவேசமாக பேசினார்.அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து நாகபட்டினம், மயிலாடுதுறை தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:டெல்டா பகுதி
காங்கிரசுக்கு சம்மட்டி அடி கொடுங்கள்!முதல்வர் ஜெ., ஆவேசம்

''விவசாயிகளின் நலனுக்கு எதிரான மரபணு மாற்று பயிர்களின் கள ஆய்வுக்கு அனுமதி அளித்துள்ள மத்திய காங்., அரசுக்கு, வரும் தேர்தலில், சம்மட்டி அடி கொடுக்க வேண்டும்,'' என, முதல்வர் ஜெயலலிதா, தேர்தல் பிரசாரத்தின்போது ஆவேசமாக பேசினார்.

அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து நாகபட்டினம், மயிலாடுதுறை தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:டெல்டா பகுதி மக்களின் உயிர்நாடியாக விளங்குவது காவிரி நதி நீர். காவிரி நீரில் நமது பங்கைதர, கர்நாடகம் தொடர்ந்து மறுத்து வருகிறது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணை ????ல் வெளியிடப்பட்டது. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த கருணாநிதி, காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிட துரும்பையாவது கிள்ளி போட்டாரா? மத்திய அரசுதான் ஏதாவது நடவடிக்கை எடுத்ததா?இதற்காகவா 2004,2009ல் காங்கிரசுக்கும், தி.மு.க.,வுக்கும் வாக்களித்து ஆட்சியில் அமர்த்தினீர்கள். வரும் தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும்.


சுற்றுச்சூழல் கேடு


காவிரி பிரச்னையில் தமிழக விவசாயிகளுக்கு எதிராக நடந்து கொண்டது மட்டுமின்றி, தமிழகத்தின் நெற்களஞ்சியத்தை அழிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டது காங்., அரசு. தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் 691 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு ஆய்வு செய்து, மீத்தேன் வாயுவினை உற்பத்தி செய்யும் பணியை மேற்கொள்ளும் ஒப்பந்தத்தை, 'கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட்' என்ற தனியார் நிறுவனத்துக்கு, ????ல் மத்திய அரசு வழங்கியது. கடந்த 4.1.2011ல் அந்த நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தி.மு.க., அரசு செய்தது. இதைத்தொடர்ந்து நடந்த, கருத்துக்கேட்பு கூட்டத்தில், நிலத்தடிநீர் பாதிப்பு, சுற்றுச்சூழல் மாசடைதல் போன்ற பல்வேறு பிரச்னைகளை விவசாயிகளின் சார்பில் எழுப்பப்பட்டன. விவசாயிகளின் கருத்துகள் மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. அதை பொருட்படுத்தாமல், சுற்றுச்சூழல் அனுமதியை மத்திய அரசு வழங்கியது. ஆனாலும், ஆழ்துளை கிணறுகள் அமைத்து ஆய்வு பணிகளை துவங்குவதற்கான அனுமதியை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தான் வழங்க வேண்டும். 2011ல் நான் முதல்வரான பிறகு, இது நாள் வரை அந்த அனுமதியை வழங்கவில்லை.இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், நிலத்தடி நீர் அதல பாதாளத்துக்கு சென்றுவிடும். வளமான டெல்டா பகுதிகள் வறண்ட பாலைவனமாகி விடும் என்ற அச்சம் உள்ளது. இதுபற்றி ஆராய ஒரு குழுவை அமைக்க நான் ஆணையிட்டுள்ளேன்.


வேளாண் விரோதம்


நாகபட்டினம், மயிலாடுதுறை பகுதிகள் மீன் பிடித் தொழில் நிறைந்தது. இலங்கை கடற்படையின் அச்சுறுத்தல்களும், கொடுமைகளும், சிறைபிடிப்புகளும் அடிக்கடி நடக்கிறது. இச்செயல்கள் நிகழும்போதெல்லாம், உடனடியாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலமும், தூதரக நடவடிக்கைகள் மூலமும், தமிழக மீனவர்களை விடுவிக்க நான் நடவடிக்கை எடுத்து வருகிறேன். தமிழக - இலங்கை மீனவர்கள் இடையேயான அடுத்தகட்ட பேச்சு ??.?.????ல், இலங்கையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ள மீனவர்களை விடுக்க நடவடிக்கை எடுக்கும்படி, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்; பதில் இல்லை. நேற்றும், 24 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர். மத்திய அரசின் வேளாண் விரோத செயல் இத்துடன் நின்று விடவில்லை. மரபணு மாற்றம் செய்யப்பட்ட அரிசி, கோதுமை, சோளம், பருத்தி உள்ளிட்ட பயிர்களின் 200 வகைகளை தனியார் நிறுவனங்கள் மூலம் சோதித்து பார்க்க, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் சமீபத்தில் அனுமதி வழங்கியுள்ளது. மனிதர்களையும், விவசாய விளை நிலங்களையும் பாதிக்கும் மத்திய அரசின் இந்த கள ஆய்வு அனுமதி பன்னாட்டு விதை நிறுவனங்களை மகிழ்ச்சியுற செய்யுமே தவிர, விவசாயிகளுக்கு துன்பத்தையே தரும். மரபணு மாற்றுப்பயிர் மூலம் விளையும் பயிர்களில் இருந்து விதைகளை நாம் பெற முடியாது. மீண்டும் நாம் பயிரிட வேண்டுமென்றால், விதைகளை வழங்கிய தனியார் நிறுவனத்தை தான் நாடவேண்டும்.


ஏகபோக உரிமை


இதன் மூலம் உணவு தானிய உற்பத்தி என்பது ஒரு சில தனியார் நிறுவனங்களின் ஏகபோக உரிமையாகிவிடும். மேலும், பயிர் வகைகளிலும், காய்கறி மற்றும் பழ வகைகளிலும் மரபணுக்களை மாற்றி அமைப்பதன் மூலம் மனிதர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஆபத்து ஏற்படும் என, சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் விவசாயிகளும் கூறுகிறார்கள். இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. சுப்ரீம் கோர்ட் ஏற்படுத்திய, தொழில்நுட்ப வல்லுனர்கள் குழுவில் இடம் பெற்றிருந்த ஆறு பேரில் ஐந்து பேர், ஒழுங்குமுறை அமைப்பில் உள்ள குறைபாடுகளை களையப்படும் வரை இந்த திட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என தெரிவித்துள்ளனர்.


சம்மட்டி அடி


இந்த வழக்கில், மத்திய அரசு இன்னும் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. நாடாளுமன்ற நிலைக்குழுவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், மரபணு மாற்றப்பயிர்களின் கள ஆய்வுக்கு இவ்வளவு அவசரமாக மத்திய அரசு ஏன் அனுமதி அளிக்கிறது? விவசாயிகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஆபத்து விளைவிக்கும் இந்த திட்டத்தை மத்திய ஆட்சியில் இருந்து வெளியேறும் நிலையில் உள்ள காங்., அரசு ஆதரிப்பது வேதனையாக உள்ளது.விவசாயிகளின் நலனுக்கு எதிரான மரபணு மாற்று பயிர்களின் கள ஆய்வுக்கு அனுமதி அளித்துள்ள மத்திய காங்., அரசுக்கு, வரும் தேர்தலில் நீங்கள் சம்மட்டி அடி கொடுக்க வேண்டும்.


கை குலுக்குவதா?


கடந்த 2013 டிச., மாதம் இந்தோனேஷியாவில் உள்ள பாலியில் நடந்த உலக வர்த்தக மைய மாநாட்டில், இந்திய விவசாயிகளுக்கு எதிரான பல ஷரத்துகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. விவசாயிகளுக்கு துரோகம் செய்த மத்திய காங்., அரசுக்கும், இவ்வளவு காலம் அங்கம் வகித்த தி.மு.க.,வுக்கும், வரும் தேர்தல் மூலம் மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்.இந்நிலையில், மியான்மரில் நடந்த, வங்காள விரிகுடா நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு முயற்சிகள் மாநாட்டில், இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன், பிரதமர் மன்மோகன்சிங் கைகுலுக்கிய படம், பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது. இந்திய மீனவர்களை சிறை பிடிப்பதை நிறுத்துங்கள் என்று கண்டிப்புடன் சொல்வதை விட்டுவிட்டு, இலங்கை அதிபருடன் கைகுலுக்கும் இப்படிப்பட்ட பிரதமர் தேவை தானா, இப்படிப்பட்ட காங்., ஆட்சியை தூக்கி எறிய வேண்டாமா?மீனவர் பிரச்னைக்கு மூல காரணமாக விளங்குவது கச்சத்தீவு பிரச்னை. கச்சத்தீவில் நமக்குள்ள உரிமையை நிலைநாட்ட வேண்டும். இதனை நிறைவேற்ற எனக்கு வாய்ப்பு கொடுங்கள்.


தமிழகத்தின் ஆட்சி


வரும் தேர்தல், வெறும் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல. அண்டை நாடுகள், வெளிநாடுகளின் அச்சுறுத்தல்களில் இருந்து இந்தியாவை காக்கும் தேர்தல். கடந்த 52 ஆண்டுகளில், சமீபத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த, இடைக்கால பட்ஜெட்டில், முப்படையை நவீனப்படுத்தவும், புதிய ஆயுதங்கள், தளவாடங்கள் வாங்கவும் போதுமான நிதி ஒதுக்கவில்லை. மத்திய அரசின் அலட்சியத்தால், கடற்படை வசம் போதுமான கப்பல்களோ, நீர்மூழ்கி கப்பல்களோ இல்லை. விமானப்படை மற்றும் ராணுவத்திடமும் முக்கிய உபகரணங்கள் இல்லாத சூழல் நிலவுகிறது.மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகள் காரணமாக இந்திய பொருளாதாரமே சின்னாபின்னமாகி விட்டது. இதை சரி செய்ய தேவை மாற்றம். மத்தியில் மக்களாட்சி மலர்ந்தால் மட்டும் போதாது. அந்த ஆட்சி தமிழகத்தின் ஆட்சியாக அமைய வேண்டும்.இவ்வாறு, ஜெயலலிதா பேசினார்.

- நமது நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vinoth - chennai,இந்தியா
07-மார்-201412:48:05 IST Report Abuse
vinoth காங்கிரஸ் க்கு சம்மட்டி கொடுகிறது இருக்கட்டும். உங்க கேஸ் கத என்ன? நீங்க ரொம்ப நல்லவங்க அதான் காங்கிரஸ் க்கு சம்மட்டி அடி கொடுக்க சொல்றிங்களா? ஒரு நாலாவது நீதிமன்றத்திற்கு போயி இருகிங்களா? உங்க மேல இருக்கிற கேச விட தேர்தல் பிரச்சாரம் ரொம்ப முக்கியம் உங்களுக்கு. அப்புறம் எந்த முகத்த வச்சிக்கிட்டு காங்கிரஸ் க்கு சம்மட்டி கொடுக்க சொல்றிங்க?
Rate this:
Cancel
mirudan - kailaayam,இந்தியா
07-மார்-201411:08:25 IST Report Abuse
mirudan மோடி குஜராத்தை எப்படி வளம் பெற வைத்தேன் அதே போன்று இந்தியாவை வலப்படுத்துவேன் என்கிறார் இது நியாயமாக இருக்கு ? அம்மா என்ன செய்தார் 48 கோடிக்கு இலவச பொருட்களை இவர் வீட்டு பணத்தில் கொடுப்பது போல் இந்தியா முழுவது இலவசம் கொடுக்க போகிறேன் என்கிறார் ? இலவச பொருட்கள் வாங்க உலக வங்கியிடம் தான் கடன் வாங்க வேண்டும் ? ஆனால் அவர்கள் கொடுப்பார்களா ?
Rate this:
Cancel
Rajarajan - Thanjavur,இந்தியா
07-மார்-201410:50:17 IST Report Abuse
Rajarajan மின்சாரம் / விவசாயம் / தொழில் பிரச்சினைய தீர்க்க தெரியாத, இலவசம் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் விரயம் செய்யும் / தொழில் திட்டங்கள் தீட்டி செயல்படுத்த தெரியாத / சாலை விரிவாக்கம் செய்யாத / சொத்துகுவிப்பு வழக்கை ஆண்டுகணக்காக இழுத்தடிக்கும் / எதிர்கால திட்டங்கள் பற்றிய சிந்தனை இல்லாத / வீணாக கடலில் கலக்கும் நீரை, பாசன வசதிக்கு திருப்பும் திட்டங்களை நிறைவேற்றாத / சட்டசபையை ஜால்ரா மன்றமாக மாற்றிய / உதவாத அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களை உடைய, முந்தய ஆட்சியின் திட்டங்களை முடக்கிய, சென்னையின் பால வேலைகளை முடக்கிய / காலில் விழும் கேவலமான கலாசாரத்தை ஊக்குவிக்கிற, வாய்சொல்லில் வீரரான, etc ., etc ., உங்கள் ஆட்சிக்கு சம்மட்டி அடி ஏன் கொடுக்ககூடாது ???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X