டில்லியில் வலுவிழக்கிறது ஆம் ஆத்மி

Added : மார் 07, 2014 | கருத்துகள் (40)
Share
Advertisement
அரசியலில், அதிரடி மாற்றத்தை ஏற்படுத்திய அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, டில்லியில், மக்கள் செல்வாக்கை வேகமாக இழந்து வருவதாக, சமீபத்தில் வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பு தகவல் தெரிவிக்கிறது.தனியார் தொலைக்காட்சி நிறுவனமான சி.என்.என் - ஐ.பி.என்., மற்றும் சி.எஸ்.டி.எஸ்., இணைந்து, டில்லியில் நடத்திய கருத்துக் கணிப்பில், கடந்த ஜனவரி மாதம், ஆம் ஆத்மி கட்சிக்கு, 48 சதவீத
டில்லியில் வலுவிழக்கிறது ஆம் ஆத்மி

அரசியலில், அதிரடி மாற்றத்தை ஏற்படுத்திய அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, டில்லியில், மக்கள் செல்வாக்கை வேகமாக இழந்து வருவதாக, சமீபத்தில் வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பு தகவல் தெரிவிக்கிறது.

தனியார் தொலைக்காட்சி நிறுவனமான சி.என்.என் - ஐ.பி.என்., மற்றும் சி.எஸ்.டி.எஸ்., இணைந்து, டில்லியில் நடத்திய கருத்துக் கணிப்பில், கடந்த ஜனவரி மாதம், ஆம் ஆத்மி கட்சிக்கு, 48 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்தனர். அப்போது பா.ஜ.,வுக்கு, 30 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்து இருந்தனர். இந்த கால கட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி, டில்லியில் ஆட்சியில் இருந்தது என்பது, குறிப்பிடத்தக்கது. இதுவே, தற்போது, எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், ஆம் ஆத்மி கட்சிக்கான ஆதரவு, 13 சதவீத புள்ளிகள் குறைந்து 45 சதவீதமாக உள்ளது. அதே சமயம், பா.ஜ.,விற்கான ஆதரவு 13 சதவீத புள்ளிகள் கூடி, 43 சதவீதமாக உள்ளது. காங்கிரசுக்கு இதில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஆம் ஆத்மி கட்சிக்கும், பா.ஜ.,வுக்கும் இரண்டு சதவீதம் மட்டுமே வித்தியாசம் உள்ளதால், லோக்சபா தேர்தலை ஒட்டி, டில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ., தனிப்பெரும்பான்மை பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


ஆதரவு குறைந்ததற்கு காரணம் என்ன?


* மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய, டில்லி முதல்வர் பதவி வகித்த கெஜ்ரிவால், தொட்டதுக்கெல்லாம் போராட்டத்தில் குதித்தது.
* சோம்நாத் பார்தி போன்ற ஆம் ஆத்மி கட்சி அமைச்சர்கள் ரவுடிகள் போல், சட்டத்தை மதிக்காமல் நடந்து கொண்டது
* சாதாரண குறை கேட்பு கூட்டத்தைக் கூட சரியாக நடத்தத் தெரியாமல், கெஜ்ரிவால் ஓட்டம் பிடித்தது
* லோக் சபா தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதற்காக, சின்ன காரணத்திற்காக ஆட்சியை உதறியது
* மக்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்த முனையாமல், ஜன் லோக்பால் சட்டத்தை பிடித்துக்கொண்டு அரசியல் செய்தது.
ஆகிய காரணங்களால், ?கஜ்ரிவாலுக்கு டில்லி மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்துள்ளது. தற்போது, கெஜ்ரிவால், மும்முரமாக தேசிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளதால், அவர் இதைப் பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை. மாறாக 'குஜராத் முன்னேறவில்லை' என, கூறி, ஆங்காங்கே அடிவாங்கிக்கொண்டு இருக்கிறார்.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Paramasivam Ramasamy - Namakkal,இந்தியா
09-மார்-201409:16:49 IST Report Abuse
Paramasivam Ramasamy இங்கே பேசுகிற பெரும்பான்மையான முட்டாள்கள்..... ஆம் ஆத்மி ....செய்தது எந்த தவறும் இல்லை என்று தெரிந்தும் அது சரியில்லை இது சரியில்லை நொட்டம் சொள்வதிலியே காலம் கழிப்பவர்கள்..... இவர்களால் பக்கத்தில் இருப்பவர்களுக்கு கூட எந்த புண்ணியமும் இல்லை.... இவர்களை ஒரு சின்ன விசயத்திற்கு லஞ்சம் கொடுக்காமல்.... முடிக்க சொல்லுங்கள் பார்க்கலாம்.... இவர்கள் தான் பொறம்போக்குகள்.... பின்னாளில் கஷ்டப்பட போவது இவர்களின் வாரிசுகள் தானே தவிர... வேறு யாரும் அல்ல...
Rate this:
Cancel
Meto Enjoy - Singapore,சிங்கப்பூர்
07-மார்-201407:44:07 IST Report Abuse
Meto Enjoy இந்தியாவில் வலுவாகிகொண்டு வருகிறது
Rate this:
Cancel
SURESH SUBBU - Delhi,இந்தியா
07-மார்-201407:40:49 IST Report Abuse
SURESH SUBBU Congress is the problem for the country...at first Aap party have some issue now they r track lost insomniacs acting like druggist.... Why targeting Modi?? ..Hez noncorrupt instead of taregeting Sonia n rahul as kejri targeted Sheila in Delhi..wid his false wish to full fill public demand lyk electricity ..water etc... But not full fill ne instead ran aways frm his job... Cheap politics...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X