பதிவு செய்த நாள் :
கருத்துகள் (73)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

சென்னை: பா.ஜ., - காங்கிரஸ் கூட்டணிகள் மற்றும் மூன்றாவது அணியில் இடம் பெறாத, மாநில கட்சிகள் ஒன்றிணைந்து, புதிய கூட்டணியை உருவாக்க முடிவு செய்துள்ளன. அதற்கு அச்சாரமாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன், தமிழக முதல்வர் ஜெயலலிதா, நேற்று, டெலிபோனில் பேசி உள்ளார். அப்போது, இருவரும், பிரதமர் பதவி வாய்ப்பு குறித்து, விவாதித்ததாக கூறப்படுகிறது.

'பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு, வரும் லோக்சபா தேர்தலில், ஆட்சி அமைப்பதற்கு, தேவையான இடங்கள் கிடைக்காது. மாநில கட்சிகளே, அதிக, 'சீட்'களைப் பெறும்' என, சில கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன.

40தொகுதிகளிலும்...:
அவ்வாறு நடந்தால், தேவகவுடா பிரதமரானது போல், அதிக, 'சீட்'களைப் பெறும், மாநில கட்சித் தலைவர்களுக்கு, பிரதமராகும் வாய்ப்பு உள்ளது.இதுகுறித்து, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்தில், மாநில கட்சிகளே, பிரதான கட்சிகளாக உள்ளன.எனினும், தற்போதுள்ள சூழ்நிலையில், உத்தர பிரதேசத்தில், பா.ஜ., அதிக இடங்களை கைப்பற்றும் என்பதால், அங்கு மாநில கட்சிகளான, சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ், கூடுதல் இடங்களை பெறும் வாய்ப்பு குறைவாக உள்ளது. மேற்கு வங்கத்தில், கம்யூனிஸ்ட்களை விட, திரிணமுல் காங்., தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி, அதிக இடங்களை பெற வாய்ப்புள்ளது. ஆனால், அவர் பிரதமராக விரும்பவில்லை எனக்கூறி விட்டார். எனவே, தமிழகம், புதுச்சேரி உட்பட, 40 தொகுதிகளிலும், அ.தி.மு.க., வெற்றி பெற்றால், முதல்வர் ஜெயலலிதா, பிரதமராக வாய்ப்பு உள்ளது.இவ்வாறு, அ.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன.

வருங்கால பிரதமர்:
இதை மனதில் வைத்து, கடந்த ஆண்டே, அ.தி.மு.க., வினர் தேர்தல் பணிகளை துவக்கி விட்டனர். அரசு விழா, கட்சி பொதுக்கூட்டம் என, அனைத்து இடங்களிலும், அமைச்சர் கள் மற்றும் அ.தி.மு.க., வினர் பேசும் போது, முதல்வர் ஜெயலலிதாவை, 'வருங்கால பிரதமர்' என்றே அழைத்து வருகின்றனர்.ஜெயலலிதாவும், தான் பிரதமராக வாய்ப்பு உள்ளதாக கருதுகிறார். அதற்கு, 40

தொகுதிகளிலும், வெற்றி பெற்றாக வேண்டும் என்பதால், அதற்கான பணிகளை முன்கூட்டியே துவக்கி விட்டார். அப்போது, அ.தி.மு.க., கூட்டணியில், கம்யூ., கட்சிகள் மட்டுமே இருந்தன.அக்கட்சிகளுக்கு, தலா, ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவி, அ.தி.மு.க.,வால் வழங்கப்பட்டது.இந்த சூழ்நிலையில், தேசிய அளவில், கம்யூனிஸ்ட் கட்சிகள், சில கட்சிகளை இணைத்து, மூன்றாவது அணியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டன. அவர்கள், ஜெயலலிதாவை சந்தித்து, அதில் சேரும்படி அழைத்தனர்.

ஜெ., சம்மதம்:
மூன்றாவது அணியில் இணைந்தால், பிரதமராகும் வாய்ப்பு பிரகாசமாகும் என நம்பி, அதில் சேர, ஜெயலலிதாவும் சம்மதம் தெரிவித்தார்.ஆனால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஒடிசா முதல்வர் பிஜு பட்நாயக், ஆந்திராவில் வலுவான நிலையில் உள்ள, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, ஆகியோர், மூன்றாவது அணியில், இணையாததால், அது பல மிழந்து காணப்படுகிறது.இதை உணர்ந்த ஜெயலலிதா, மூன்றாவது அணியில் இருந்து, விலக முடிவு செய்தார். எனவே, லோக்சபா தேர்தல் கூட்டணியில் இருந்து கம்யூனிஸ்ட்களை கழற்றி விட்டார். மூன்றாவது அணியில் இணையாத, திரிணமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகளை இணைத்து, 'பெடரல்' கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.இதற்கு, மம்தா பானர்ஜி, ஆதரவு தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம், பத்திரிகையாளர்களிடம் பேசியமம்தா பானர்ஜி, 'ஜெயலலிதா பிரதமராக

Advertisement

வாய்ப்பு , இருந்தால், அவருக்கு ஆதரவுஅளிப்பேன். பெண் தலைவர்களை ஒன்றிணைத்து, கூட்டணி அமைப்பது குறித்து முடிவு செய்யும் உரிமை, ஜெயலலிதா மற்றும் மாயாவதிக்கு உள்ளது' என்றார்.இது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெலிபோனில் பேச்சு:
இதன் தொடர்ச்சியாக, நேற்று, மம்தா பானர்ஜியை, முதல்வர் ஜெயலலிதா டெலிபோனில், தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, தேர்தல் குறித்து பேசியதாகவும், லோக்சபா தேர்தலில் வெற்றி பெற, இருவரும் பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.எனினும், இது குறித்து, அ.தி.மு.க., சார்பில், அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. மம்தா பானர்ஜியுடன், ஜெயலலிதா பேசியதை உறுதிப்படுத்திய, அ.தி.மு.க., நிர்வாகிகள், 'பேச்சு விவரம் தெரியவில்லை' என்றனர்.தேசிய அளவில், புது கூட்டணியை உருவாக்கும் பணியில், ஜெயலலிதா ஈடுபட்டிருப்பது, அரசியல் வட்டாரத்தில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (73)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamil Sena - Chennai,இந்தியா
09-மார்-201402:19:04 IST Report Abuse
Tamil Sena பெண்கள் வளர்ச்சியை சகித்துகொள்ளமுடியாத ஆணாதிக்கசமுதாயம் இவர்களை ஒழிக்க போராடுகிறது. தைரியம், தன்னம்பிக்கை, திறமையில் இவர்கள் மற்ற ஆண் தலைவர்களைவிட மேல். ஜெய் சக்தி ஜெய் பாரத மாதா..
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
09-மார்-201400:19:40 IST Report Abuse
மதுரை விருமாண்டி எத்தனுக்கு எத்தன் எங்கேயாவது இருப்பான். எத்திக்கு ஏத்தியும் இருப்பாள்.. மம்மிஜீ பா.ஜ.க மத்திய அரசை கவுத்து சந்தோஷப்பட்டார். இப்போ மம்தாஜீ மம்மிஜீயை கவுத்து கெக்கலித்து சிரிப்பார் போலிருக்கு..
Rate this:
Share this comment
Cancel
எம்.ஆர்.பி.குமார் - CHENNAI,இந்தியா
08-மார்-201410:18:56 IST Report Abuse
எம்.ஆர்.பி.குமார் புது கூட்டணியோ .. மூன்றாவது அணியோ .. மோடி என்ற சுனாமி அலையில் காணமல் போகும்.. .
Rate this:
Share this comment
SHivA - cheNNAi,இந்தியா
09-மார்-201400:09:12 IST Report Abuse
SHivAசுனாமி என்றாலே மிக வும் கொடுமையானது என்றுதான் நமக்கு தெரியும்..நல்ல உள்ளம் கொண்ட எல்லோரும் சேர்ந்து அது வராமல் இருக்க வேண்டுவோம்.....
Rate this:
Share this comment
Cancel
Venki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
08-மார்-201410:10:04 IST Report Abuse
Venki அம்மையார் இருப்பதை விட்டு பறப்பதை பிடிக்க ஆசை படுகிறார். எனவே தமிழக மக்கள் தெளிவான முடிவை எடுப்பார்
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
08-மார்-201410:05:15 IST Report Abuse
Pugazh V //மம்தா யாரிடமும் ஒத்து போகாதவர்,// - மிகத்தவறான கணிப்பு. 13 நாட்களில் வாஜ்பாயைக் கவிழ்த்த ஜெயலலிதா தான் யாரிடமும் ஒத்துப்போக மாட்டார். மம்தா கூட்டணி தர்மம், நாகரீகம் அறிந்தவர். அவரது மந்திரி சபையை இதுவரை மாற்றம் செய்யாதவர். மந்திரிகள் குனிந்து வளைந்து நெளிந்து கும்பிடு போட வேண்டும் என்று எதிர்பார்க்காதவர். திறமையான நிர்வாகி என்பதறிக. எளிமையே அவரது உயர்ச்சி ( Simplicity is Ms. Mamthaa's Greatness).
Rate this:
Share this comment
??????????????? - mumbai,இந்தியா
09-மார்-201401:46:53 IST Report Abuse
???????????????ரெயில் மந்திரி திரிவேதியை என்ன பாடு படுத்தினார் என்பது இவருக்கு தெரியாது ...பார்த்தால் படித்தவர் போல தெரியும் இந்த அறிவு ஜீவி யாரை திருப்தி படுத்த ஜெயாவை தூற்றுகிறார்...
Rate this:
Share this comment
Cancel
தி.இரா.இராதாகிருஷ்ணன் - நாக்பூர்....,இந்தியா
08-மார்-201409:52:50 IST Report Abuse
தி.இரா.இராதாகிருஷ்ணன் ஜெயா, மமதா இருவரும் சேர்ந்து ஆட்சி நடத்தினால் அந்த ஆட்சி கருப்பா பயங்கரமா இருக்குமா, இல்லை பயங்கர கருப்பா இருக்குமா தெரியலையே.........இந்தியாவை இலவசமா வித்துடுவாங்களே......
Rate this:
Share this comment
Cancel
rajen.tnl - tirunelveli,இந்தியா
08-மார்-201409:20:44 IST Report Abuse
rajen.tnl இதெல்லாம் நடக்க கூடியதா...ஆணவமும்,அகங்காரமும் ஒன்னு சேர்ந்ததாக சரித்திரம் இல்லை ...
Rate this:
Share this comment
Cancel
Cheenu Meenu - cheenai,இந்தியா
08-மார்-201409:13:46 IST Report Abuse
Cheenu Meenu அத்தைக்கு மீசை முளைத்தாலும் சித்தப்பாவாக முடியுமா ???? நாய் வீட்டை காக்கும் நாய் குடை எத்தனை நாளைக்கு நிலைத்து இருக்கும் ???
Rate this:
Share this comment
Cancel
Ayathuray Rajasingam - Scarborough ,கனடா
08-மார்-201409:13:01 IST Report Abuse
Ayathuray Rajasingam ஒரு குடும்பத்தில் மனைவி படித்திருந்தால் முழுக் குடும்பமுமே பயனடைகிறது. அதுபோல் ஒரு நாட்டில் பெண்கள் தலைமை ஏற்றால் முழு நாடும் பயனடையும். எதனையும் positive thinking இல் பார்க்க வேண்டும். இருவருமே நாட்டின் நலனுக்கே முன்னுரிமை அளிக்கின்றார்கள். இன்றைய நிலைமையில் இந்தியாவுக்கு ஒரு இந்தியப் பெண் பிரதமராவது உசிதமானது.
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
08-மார்-201409:07:49 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் இனம் இனத்தோடு சேரும்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X