பொது செய்தி

தமிழ்நாடு

நிதி நெருக்கடியில் தமிழக அரசு: சம்பளம் கேள்விக்குறி

Updated : மார் 09, 2014 | Added : மார் 07, 2014 | கருத்துகள் (23)
Advertisement
நிதி நெருக்கடியில் தமிழக அரசு: சம்பளம் கேள்விக்குறி

அரசு கருவூலத்தில், நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், அரசு ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், 12 லட்சத்துக்கும் அதிகமான, அரசு ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அரசின் மொத்த வருவாயில், 60 சதவீதம், அரசு ஊழியர் சம்பளத்திற்கும், ஓய்வூதியத்திற்கும் செலவிடப்படுகிறது.மத்திய, மாநில அரசுகள், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, அவ்வப்போது, அகவிலைப்படியை உயர்த்தி அறிவிக்கின்றன. மத்திய அரசு, அகவிலைப்படி உயர்வை அறிவித்த உடனே, மாநில அரசு, அறிவிக்கும்.லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும் என்பதால், முன்னதாகவே, மத்திய அரசு, கடந்த, 1ம் தேதி, அதன் ஊழியர்களுக்கு, அகவிலைப்படியை, 10 சதவீதம் உயர்த்தி அறிவித்தது; ஆனால், தமிழக அரசு, இதுவரை அறிவிக்கவில்லை.

தமிழகத்தில், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அடுத்தபடியாக, இலவச திட்டங்களுக்கு அதிகளவில் செலவு செய்கிறது. இதனால், நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.குறிப்பாக, கடந்த ஆண்டு, 35 லட்சம், இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி சப்ளை செய்த நிறுவனங்களுக்கு, 600 கோடி ரூபாயும், கூட்டுறவு சங்க ரேஷன் கடைகளுக்கு, 320 கோடி ரூபாயும் வழங்காமல், நிலுவை உள்ளது. இதேபோல், பல திட்டங்களுக்கும், நிதி ஒதுக்கவில்லை என, கூறப்படுகிறது.இதனால் தான், 'மத்திய அரசு, அகவிலைப்படி உயர்வை அறிவித்த பின்பும், தமிழக அரசு, அறிவிக்கவில்லை' என, அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

அரசு, கருவூலத்தில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், வரும் மாதங்களில், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, அரசு அதிகாரி ஒருவர் கூறும்போது, 'லோக்சபா தேர்தல் நடக்க உள்ள நிலையில், தமிழக அரசு, அகவிலைப்படியை உயர்த்தி வழங்காதது ஏமாற்றம் அளிக்கிறது. அரசு கஜானாவில், நிதி இல்லாதது தான் இதற்கு காரணம். தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று, அகவிலைப்படி உயர்வை அறிவித்தால், ஆண்டுக்கு, 2,000 கோடி ரூபாய் அளவில், தமிழக அரசு நிதி திரட்ட வேண்டும். அதற்கு, என்ன செய்யப் போகிறது எனத் தெரியவில்லை' என்றார்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
09-மார்-201400:54:54 IST Report Abuse
மதுரை விருமாண்டி வாங்குற லஞ்சத்தை ஒரு 2% கூட்டினால் போதும்.. சேவை வரி மாதிரி "சம்பள கிஸ்தி - கூடுதல் லஞ்சம் 2%" என்று பில் போட்டு சமாளித்து விடலாமே. ப.சி கேட்டா புல்லரிச்சுப் போயிடுவார்..
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
09-மார்-201400:52:33 IST Report Abuse
மதுரை விருமாண்டி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் தேவை தானா? வாங்குற கிம்பளம் பத்தாதா?
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
09-மார்-201400:51:30 IST Report Abuse
மதுரை விருமாண்டி ஐ.ஜி ராமானுசத்துக்கு மம்மி தான் சம்பளம் தருகிறார். இவரது சீனியர்களை புறன் தள்ளி விட்டு, ரிட்டையர் ஆன பிறகும் மம்மிஜீயின் விசிவாசி என்பதால் மட்டுமே இவருக்கு வேலை கொடுத்ததால், மத்திய ஆணையம், மம்மிஜீயின் ஆணையை இன்னும் கண்டு கொள்ளவே இல்லை. அதனால் இவருக்கு அரசு சம்பளம் தரமுடியாத குழப்பம் உள்ளது. ஆகையால் ராமானுசத்துக்கு இந்தம்மா தான் பிச்சை போடுறார். அது மாதிரி மத்த ஊழியர்களுக்கும் பிச்சை போடுவார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X