கோடிகளுடன் வலம் வரும் உடன்பிறப்புக்கள்: அறிவாலயத்தில் பணப்பெட்டிகளுடன் குவிந்தனர்| DMK workers in Party head quarters with Ruppees | Dinamalar

'கோடி'களுடன் வலம் வரும் உடன்பிறப்புக்கள்: அறிவாலயத்தில் பணப்பெட்டிகளுடன் குவிந்தனர்

Added : மார் 07, 2014 | கருத்துகள் (16)
Share
'உங்களுக்கு, 'சீட்' கிடைத்தாலும் கிடைக்கும், எதற்கும், மூன்று கோடி ரூபாய் பணத்தை தயாராக வைத்திருங்கள்; டெபாசிட் பணத்தை கட்சி கேட்கும் போது, ஒப்படைக்க வேண்டும். சீட் கிடைக்கவில்லை எனில், பணம் திருப்பி தரப்படும்' என, தொகுதி வாரியாக, எம்.பி., வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களுக்கு, தி.மு.க., தலைமையகமான, அறிவாலயத்தில்இருந்து உத்தரவு பறந்து உள்ளது.அதனால், சீட்
 'கோடி'களுடன் வலம் வரும் உடன்பிறப்புக்கள்: அறிவாலயத்தில் பணப்பெட்டிகளுடன் குவிந்தனர்

'உங்களுக்கு, 'சீட்' கிடைத்தாலும் கிடைக்கும், எதற்கும், மூன்று கோடி ரூபாய் பணத்தை தயாராக வைத்திருங்கள்; டெபாசிட் பணத்தை கட்சி கேட்கும் போது, ஒப்படைக்க வேண்டும். சீட் கிடைக்கவில்லை எனில், பணம் திருப்பி தரப்படும்' என, தொகுதி வாரியாக, எம்.பி., வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களுக்கு, தி.மு.க., தலைமையகமான, அறிவாலயத்தில்இருந்து உத்தரவு பறந்து உள்ளது.

அதனால், சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், கட்சி கேட்ட பணத்துடன், கட்சி பிரமுகர்கள் பலர், அறிவாலயத்தை வலம் வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லோக்சபா தேர்தலின் போது, தேர்தல் கமிஷனுக்கு, 'டிமிக்கி' கொடுத்து விட்டு, பணத்தை தாராளமாக செலவு செய்ய, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் பலர் தயாராக உள்ளனர். அதுவும், 2011 சட்டசபை தேர்தலின் போது, ஒரு தொகுதிக்கு செலவு செய்த தொகையை விட, 10 மடங்கு அதிகமாக செலவு செய்ய தயாராக உள்ளனர்.தமிழகத்தின் பிரதான கட்சியான, தி.மு.க.,வில், தேர்தல் நிதியாக, 100 கோடி ரூபாய் வரை வசூலிக்கப்பட்டுஉள்ளது. அத்துடன், லோக்சபா தேர்த லில், தி.மு.க., சார்பில் போட்டியிட, விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம், நேர்காணல் நடத்திய போது, 'வேட்பாளராக நிறுத்தினால், உங்களால் எவ்வளவு செலவு செய்ய முடியும்?' என்பதே,முக்கிய கேள்வியாக கேட்கப்பட்டுள்ளது.

அத்துடன், சீட் கொடுத்தால், கட்சிக்கு டெபாசிட் தொகையாக, குறைந்தபட்சம், மூன்று கோடி ரூபாய் முதல், ஐந்து கோடி ரூபாய் வரை செலுத்த தயாராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைக்கு உட்பட்டு, கட்சிக்கு அதிகமாக டெபாசிட் பணம் கட்டுவோருக்கே, தேர்தலில் போட்டியிட, சீட் வழங்கப்படும் என்பது, எழுத்தப்படாத விதியாக வகுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், லோக்சபா தொகுதி வாரியாக போட்டியிட, சீட் கேட்டவர்களிடம், 'உங்களுக்கு சீட் கிடைத்தாலும், கிடைக்கும். எனவே, கட்சிக்கான பணத்தை டெபாசிட் செய்ய தயாராக வைத்திருங்கள்' என்ற உத்தரவு, அறிவாலயத்திலிருந்து, நேற்று முன்தினம்சென்றுள்ளதாக கூறப்படுகிறது.இந்த உத்தரவை அடுத்து, தங்களுக்கு சீட் கிடைத்து விடும் என்றநம்பிக்கையில், கட்சி பிரமுகர்கள் பலர் பணத்தை திரட்டிக் கொண்டு, பென்ஸ், பி.எம்.டபிள்யூ போன்ற சொகுசு கார்களில், சூட்கேசுடன் அறிவாலயத்தை நேற்று வலம் வந்தனர். கூட்டணி கட்சிகளுக்கு, கடைசி நேரத்தில், தொகுதிகள் மாற்றி கொடுக்கப்பட்டால், பணம் கட்டியவர்களுக்கு, திரும்ப அதே பணம் ஒப்படைக்கப்படும் என்பதால், பணத்தை பற்றி எந்த கவலையும் படாமல், சென்னையில் முகாமிட்டு, சீட்டுகளை கைப்பற்ற தி.மு.க.,வினர் தயாராகியுள்ளனர். பணம் கட்ட முடியாமல் தவிக்கும் கட்சி பிரமுகர்களுக்கு சீட் கிடைக்க வாய்ப்பில்லை என, கட்சி வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.

அதிகம் செலவழிப்பவர்களுக்கே தி.மு.க.,வில் 'சீட்'-செலவு செய்ய தயாராக இருப்பவர்களுக்கே 'சீட்':திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றிய, தி.மு.க., முன்னாள் செயலர், பாஸ்கர னின் தாயார் திருவுருவப் பட திறப்பு விழா, நேற்று நடந்தது.
முன்னாள் மத்திய அமைச்சர், மு.க.அழகிரி, புகைப்படத்தை திறந்து வைத்து பேசியதாவது: எனக்கு, தலைவர் பதவி மீதோ, பொதுச் செயலர் பதவி மீதோ, எவ்வித ஆசையும் கிடையாது. மத்திய அமைச்சர் பதவி வழங்கியபோது, நான் வேண்டாம் என, மறுத்தேன். கருணாநிதி தான் வற்புறுத்தி கொடுத்தார். அதே போல், தென்மண்டல அமைப்புச் செயலர்பதவியையும், அவரே கொடுத்தார்.எனக்கு கொடுக்கப்பட்ட பதவி, பொறுப்புகள் மூலம் கட்சிக்காக உழைத்தேன். தி.மு.க.,வில் தலைவர் பொறுப்புக்கு தகுதியானவர், கருணாநிதி மட்டுமே. தி.மு.க.,வை கட்டிக்காக்கும் வல்லமை, அவருக்கு மட்டுமே உள்ளது; வேறு யாருக்கும் கிடையாது.தி.மு.க., நேர்காணலின்போது,அ.தி.மு.க., - ம.தி.மு.க.,வில் இருந்து வந்தவர்களே, கருணாநிதியை சுற்றி லும் அமர்ந்து, கேள்வி கேட்கின்றனர். அதுவும், கட்சிக்கு என்ன செய்தாய் என, கேள்வி கேட்காமல், எவ்வளவு செலவு செய்வாய் என, கேட்கின்றனர். அதிகம் செலவு செய்ய தயாராக இருப்பதாக கூறியவர்களுக்கே, தி.மு.க.,வில், 'சீட்' வழங்கப்பட உள்ளது. இந்த விஷயத்தில், கருணாநிதியைபேச விடுவதே இல்லை.தற்போது, தி.மு.க.,வில் நடப்பது அனைத்தும், கருணாநிதிக்கு தெரியாமலேயே நடக்கிறது. தொண்டர்கள் அனைவரும், இன்னும் இரண்டு மாதங்கள், பொறுமையாக இருங்கள்.இவ்வாறு அழகிரி பேசினார். அழகிரி யுடன் அவரது மகன், தயாநிதி அழகிரி மற்றும் அழகிரியின் ஆதரவாளர்கள்மதுரையில் இருந்து வந்திருந்தனர்.பின்னர் சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்ற, திருவாலங்காடு ஒன்றிய, தி.மு.க., முன்னாள் செயலர், ரமேஷ்காந்த் வீட்டிற்கும், அழகிரி சென்று அவரிடம், உடல் நலம் விசாரித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X