காலையில் பா.ம.க., - மாலையில் தே.மு.தி.க.,: பா.ஜ., அணியில் விறுவிறுப்பு; யாருக்கு எத்தனை தொகுதிகள்?

Added : மார் 07, 2014 | கருத்துகள் (17)
Share
Advertisement
பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி யில், தொகுதி பங்கீடு குறித்து நேற்று பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது. சென்னையில் நேற்று காலையில், பா.ம.க., குழுவினர், பா.ஜ., அலுவலகம் வந்து, சம்பிரதாயப்படி, பேச்சுவார்த்தையை துவங்கினர். மாலையில், பா.ஜ., தலைவர்கள், தே.மு.தி.க., அலுவலகம் சென்று, கூட்டணியை உறுதி செய்தனர்.காத்திருந்தன:நீண்ட இழுபறிக்கு பின், பா.ஜ., தலைமையிலான கூட்டணி
காலையில் பா.ம.க., - மாலையில் தே.மு.தி.க.,: பா.ஜ., அணியில் விறுவிறுப்பு; யாருக்கு எத்தனை தொகுதிகள்?

பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி யில், தொகுதி பங்கீடு குறித்து நேற்று பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது. சென்னையில் நேற்று காலையில், பா.ம.க., குழுவினர், பா.ஜ., அலுவலகம் வந்து, சம்பிரதாயப்படி, பேச்சுவார்த்தையை துவங்கினர். மாலையில், பா.ஜ., தலைவர்கள், தே.மு.தி.க., அலுவலகம் சென்று, கூட்டணியை உறுதி செய்தனர்.


காத்திருந்தன:


நீண்ட இழுபறிக்கு பின், பா.ஜ., தலைமையிலான கூட்டணி முடிவாகி உள்ளது. தே.மு.தி.க., ஏற்படுத்திய தாமதத்தால், பா.ம.க., - ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளுடன் உடன்பாடு செய்ய முடியாமல், பா.ஜ., தவித்து வந்தது. அழைப்புக்காக, பா.ம.க., - ம.தி.மு.க.,வும் காத்திருந்தன. இந்நிலையில், நேற்று முன்தினம், தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த், பா.ஜ., கூட்டணியில் சேர்வது என்ற முடிவை அறிவித்தார். இதையடுத்து, பா.ஜ., கூட்டணியில் பேச்சுவார்த்தை விறுவிறுப்படைந்துள்ளது. டில்லியில் முகாமிட்டிருந்த, தமிழக பா.ஜ., தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், மோகன்ராஜுலு ஆகியோர், அவசரமாக சென்னை வந்தனர். நேற்று காலை, பா.ம.க., குழுவினரை அழைத்து, தொகுதி உடன்பாடு குறித்து பேசினர்.இதற்காக, பா.ம.க., தலைவர், கோ.க.மணி தலைமையில், ஏ.கே.மூர்த்தி, திருக்கச்சூர் ஆறுமுகம் உட்பட, ஆறு பேர் குழுவினர், நேற்று மதியம், கமலாலயம் சென்றனர். பா.ஜ., தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் உள்ளிட்டோர் அவர்களை வரவேற்று, முந்திரி பக்கோடாவும், காபியும் வழங்கி, உபசரித்தனர்.

இரு தரப்பு அறிமுகத்துக்கு பின், பொன்.ராதாகிருஷ்ண னும், கோ.க.மணியும் தனியாக பேசினர். இந்த பேச்சுவார்த்தையின் போது, பா.ம.க.,வின் தொகுதிகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. பா.ம.க., தரப்பில், ம.தி.மு.க.,வை விட, பா.ம.க.,வுக்கு தொகுதிகளை குறைத்து விட வேண்டாம் எனவும், ராஜ்யசபா எம்.பி., பதவி ஒன்று வழங்கப்பட வேண்டும் எனவும் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு, பா.ஜ., தலைவர்கள் அளித்த பதிலில், கூட்டணிக்கு முதலில் வந்த கட்சி என்ற அடிப்படையில், ம.தி.மு.க.,வுக்கு முக்கியத்துவம் உண்டு. அதேநேரத்தில், பா.ம.க.,வுக்கு அதன் ஓட்டு வங்கிக்கு உரிய தொகுதிகள் ஒதுக்கப்படும் என, உத்தரவாதம் அளித்துள்ளனர்.இதனால், திருப்தி அடைந்த பா.ம.க.,வினர், வரும் ஞாயிற்று கிழமை தங்கள் முடிவை அறிவித்து விடுவோம் எனக்கூறி, சென்றுள்ளனர். இந்த கூட்டணியில், பா.ம.க.,வுக்கு, எட்டு லோக்சபா தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவியும் கிடைக்கலாம் என, பா.ஜ.,வட்டாரத்தில் பேசப்படுகிறது.

நேற்று மாலையில், பா.ஜ., சார்பில், பொதுச் செயலர்கள் மோகன்ராஜுலு, வானதி சீனிவாசன், தேசிய செயலர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன், சரவண பெருமாள், கே.டி.ராகவன், ஆதவன், ஆசிம், முருகன் என, ஒன்பது பேர் கொண்ட குழுவினர், தே.மு.தி.க., அலுவலகம் சென்றனர்.தே.மு.தி.க., இளைஞரணி செயலர் சுதீஷ், சந்திரகுமார், உமாநாத், மோகன்ராஜ், முருகேசன், யுவராஜ், பாண்டியன், ஜாகீர் உசேன் உட்பட, ஒன்பது பேர் அடங்கிய நிர்வாகிகள், குழுவினரை சந்தித்துப் பேசினர். சமோசா, பிஸ்கெட், முந்திரி, ஸ்வீட், காபி வழங்கி உபசரித்தனர். ஒரு மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின், தே.மு.தி.க., கேட்கும் தொகுதி கள் பற்றிய விவரங்கள் தெரிய வந்துள்ளன.


விளக்கம்:


பா.ஜ., கூட்டணியில், 14 லோக்சபா தொகுதிகள், ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவி மற்றும் ஆலந்தூர் சட்டசபை தொகுதி ஆகியவற்றை தே.மு.தி.க., கேட்டுள்ளது. ஆனால், பா.ஜ., தரப்பில், 12 லோக்சபா, ஒரு ராஜ்யசபா மற்றும் ஆலந்தூர் சட்டசபை தொகுதி ஆகியவை வழங்கப்படும் என, கூறப்பட்டுள்ளது. மீதமுள்ள, 28 லோக்சபா தொகுதிகளை, பா.ம.க., - ம.தி.மு.க., - பா.ஜ., ஆகிய கட்சிகள், தலா எட்டு என, பிரித்துக் கொள்ளும் என்றும், மீதி நான்கை, என்.ஆர்.காங்கிரஸ் - ஐ.ஜே.கே., - கொ.ம.தே.க., - புதிய நீதி கட்சி ஆகியவைகளுக்குபங்கிடப்படும் எனவும், விளக்கம் தரப்பட்டுள்ளது.


பகிர்ந்து கொள்ளும்:


இதற்கு, தே.மு.தி.க., ஒப்புக்கொள்ளுமானால், இந்த, 'பார்முலா' செயலுக்கு வரும். இல்லையேல், தே.மு.தி.க.,வுக்கு, 13 ஆக உயரும்; ம.தி.மு.க.,வுக்கு ஏழாக குறையும் என்கிறது பா.ஜ., வட்டாரம். அப்படியொரு உடன்பாடு ஏற்பட்டால், பா.ம.க.,வுக்கான, எட்டு போக, மீதமுள்ள, 12 தொகுதிகளை, பா.ஜ., தன்னுடன் உள்ள கட்சிகளுடன் பகிர்ந்து கொள்ளும் நிலை வரும். அதில், என்.ஆர்.காங்கிரஸ் தவிர்த்து, ஐ.ஜே.கே., - கொ.ம.தே.க., - புதிய நீதி கட்சிகள், தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டியிருக்கும் என்றும், பா.ஜ., வட்டாரம் மேலும் தெரிவித்தது.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venki Raja - mahalapye ,போஸ்ட்வானா
09-மார்-201409:54:58 IST Report Abuse
Venki Raja ராமதாஸ் ஒரு சந்தர்ப்பவாதி விஜயகாந்த் அரசியல் நாகரிகம் தெரியாதவர் இவர்களோடு கூட்ட
Rate this:
Cancel
Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்
08-மார்-201406:26:34 IST Report Abuse
Sekar Sekaran நகைச்சுவைக்காக இந்த செய்தியா என்று தெரியவில்லை..பா ம க வின் கோரிக்கையான ராஜ்யசபா ஓர் சீட்டு என்கிறார்களே..இவர்களுக்கு தமிழகத்தில் எந்தவகையில் ராஜ்யசபா ஒட்டு கிடைக்கபோகிறதோ? இந்த நெல்லிக்கனி கூட்டணி ஓரிடத்திலாவது வெற்றிபெறுமா என்று பார்த்தால் அதற்க்கான சந்தர்ப்பமே இல்லை. பின்னர் ஏனிந்த மெகா கூட்டணி..ஒருவேளை "டெப்பாசிட்" பெற்றுவிட்டோம்..இதோ இரண்டாம் இடம் இங்கெங்கே பெற்றுவிட்டோம்..இனி அடுத்த 2024இல் நாங்களே மெஜாரிட்டி பெறுவோம் என்று சொல்லத்தானோ? எப்படிப்பார்த்தாலும் ஒருவிதத்தில் பெருமை பட்டுக்கொள்ளலாம்..தேர்தலில் போட்டியிட ஆட்களை பெற்றுவிட்டோம்..இனி அந்த பயம் இல்லை என்று சொல்லிகொள்ளலாம். முடிவாக சொல்லப்போனால் மோடியின் செல்வாக்கினையே குழி தோண்டி புதைக்கப்போவது இந்த சுயநல கூட்டம்தான். அசிங்கப்படப்போகிறார்கள்
Rate this:
Cancel
Tiruvannamalai Kulasekaran - AUSTRALIA  ( Posted via: Dinamalar Android App )
08-மார்-201406:16:21 IST Report Abuse
Tiruvannamalai  Kulasekaran இதுவும் கடந்து போம் ஃஎதுவும் நிலையில்லை என்னடா தேர்தல் இது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X