தடுமாறும் கம்யூனிஸ்ட் கட்சிகள் : குட்டையை குழப்புகிறது தி.மு.க.,

Updated : மார் 09, 2014 | Added : மார் 07, 2014 | கருத்துகள் (10)
Advertisement
தடுமாறும் கம்யூனிஸ்ட் கட்சிகள் : குட்டையை குழப்புகிறது தி.மு.க.,

ஆளுக்கு ஒரு தொகுதி தான் என, அ.தி.மு.க., கூறியதால், அதிருப்தி அடைந்துள்ள இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், கூட்டணியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளன. ஆனாலும், அடுத்தது என்ன, தனித்துப் போட்டியா என்பதை வெளியிடாமல், மவுனம் காக்கின்றன.அதற்கு காரணம், அ.தி.மு.க.,விடம் இருந்து அழைப்பு வரும் என்ற எதிர்பார்ப்பு நீடிப்பதாகவும், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தேசிய தலைவர்கள், அ.தி.மு.க., தலைமையுடன் பேசி வருவதால், அதுவரை அமைதியாக இருக்கும்படி, ஆலோசனை கூறியுள்ளதாகவும், கம்யூனிஸ்ட் வட்டாரத்தில் பேசப்படுகிறது,

அ.தி.மு.க., கூட்டணி யில், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. மார்க்சிஸ்ட் மூன்று தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட், 2 தொகுதிகளும் கேட்டுள்ளன. ஆனால், இக்கட்சிகளுக்கு ஏற்கனவே, தலா ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவியை, அ.தி.மு.க., அளித்துள்ளது. அதை காரணம் காட்டி, தேர்தலில், தலா ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்க முடியும் என, கறாராக கூறி விட்டது. கூட்டணியில் தொடர விரும்பிய இக்கட்சிகள், தலா இரண்டு தொகுதிகள் கேட்டன. அதை சட்டை செய்யாமல், 40 தொகுதி களுக்கும் வேட்பாளர்களை, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அந்த சூட்டோடு, பிரசாரத்திற்கும் கிளம்பி விட்டார்.

காத்திருந்த கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கடைசி வரை, ஒரு தொகுதி என்ற பதிலை தவிர வேறு எதுவும் கிடைக்கவில்லை. கடும் கோபத்தில் நேற்று முன்தினம், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூடிப் பேசி, கூட்டணியை முறிப்பதாக அறிவித்தன.இதையடுத்து, உடனடியாக, தி.மு.க.,விடம் இருந்து அழைப்பு வந்தது. இக்கட்சி தலைவர் கருணாநிதி விடுத்த அழைப்பை ஏற்று, நேற்று கம்யூனிஸ்ட் கட்சிகள், தி.மு.க., கூட்டணியில் சேரும் என்ற செய்திகள் வெளியாகின. ஆனால், அப்படி எதுவும் நடக்காத வகையில், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தொடர்ந்து அமைதி காத்து வருவதற்கு காரணம், அக்கட்சி மேலிட தலைவர்கள் கூறிய ஆலோசனை தான் என, தெரியவந்துள்ளது.

ஜெயலலிதாவிடம் பேசி, தலா இரண்டு தொகுதிகளுக்கு சம்மதிக்க வைக்கும் முயற்சி தொடர்கிறது. அது தோல்வியில் முடிந்தால், தி.மு.க., அழைப்பை பரிசீலிக்கும் முடிவுக்கு கம்யூனிஸ்ட்டுகள் வந்துள்ளனர்.

இதுகுறித்து, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர், டி.ராஜா, டில்லியில் அளித்த பேட்டியில், 'தி.மு.க., அழைப்பு குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறோம்' என, குறிப்பிட்டு உள்ளார்.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tiruvannamalai Kulasekaran - AUSTRALIA  ( Posted via: Dinamalar Android App )
08-மார்-201406:27:58 IST Report Abuse
Tiruvannamalai  Kulasekaran NOTE THE POINT YOUR HONOURஃ அம்மா காலடியில் வீழ்ந்துகிடந்தால்ஃஃஃ
Rate this:
Share this comment
Cancel
Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்
08-மார்-201406:17:41 IST Report Abuse
Sekar Sekaran தெளிவான முடிவை கூட எடுக்கும் அதிகாரம் இல்லாதவர்கள் இந்த கம்யுனிஸ்டுகள். மேலிடம் கண்ணசைவுக்கு ஏற்ப இங்கே முடிவினை எடுப்பார்களாம். இது ஓர் அடிமைத்தானம். சொந்த மாநிலத்தில் இவர்கள் சொல்லுவதைத்தான் மேலிடம் பரிசீலிக்கும் என்கிற மாதிரி அல்லவா இருத்தல் அவசியம். ஏன் என்றால் இங்கே உள்ளவர்களுக்கு அந்த அளவுக்கு அரசியலில் முடிவினை அகில இந்திய அளவுக்கு செல்லுபடியாகும் விதம் பற்றி தெரியவில்லை என்பது தானே அர்த்தம். ஆனால் பேட்டி கொடுக்கும்போது என்னமோ பரபரப்பாக..அகில உலக அரசியல் எல்லாம் பேசுவார்கள். சொந்த மாநிலத்தின் முடிவினை எடுக்க தில் இல்லாதவர்கள்..கட்சியை வளர்க்க தெரியாமல் அடுத்தவர்களின் முதுகில் ஏறி சுகமான பயணம் செய்ய ஆசைப்படுவோர்கள் இவர்கள். மேலிட அடிமைகள்..கொத்தடிமைகள்..இவர்களே இவர்களை அடகு வைத்துக்கொண்டவர்கள்..இவர்களை மீட்க 2 G பணக்கார கருணாதான் சரியான தேர்வு..ஏனென்றால் அவர்தான் சிறு மயிரிழையில் கம்ய்னுனிச்டாக வேண்டிய தருணத்தை கோட்டை விட்டவர்..முதியோர் மேடம் கம்யுனிஸ்டுகளின் கட்சி..
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
08-மார்-201405:58:16 IST Report Abuse
Kasimani Baskaran முட்டை போட வேண்டியவர்கள் ஒரு ஆளுக்கு ஒரு தொகுதி கேட்பது அதிகம். அ(ம்மா)ண்ணா திமுக மனது வைத்ததால் ஒன்றாவது கிடைக்கிறதே என்று சந்தோசப்பட்டுக் கொள்ளவதை விட்டுவிட்டு பேரம் பேசுவது அரிவாள் கட்சிக்கு அழகு அல்ல.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X