சென்னை: லோக்சபா தேர்தலில், போட்டியிட, 'சீட்' கேட்காமல், அ.தி.மு.க.,விற்கு ஆதரவு அளித்துள்ள கட்சிகளுக்கு, முதல்வர் ஜெயலலிதா, நன்றி தெரிவித்து, கடிதம் எழுதி உள்ளார்.
அ.தி.மு.க., கூட்டணியில், சரத்குமார் தலைமையிலான, சமத்துவ மக்கள் கட்சி; செ.கு.,தமிழரசன் தலைமையிலான, இந்திய குடியரசு கட்சி; தணியரசு தலைமையிலான, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை; ஜெய்னுலாபுதீன் தலைமையிலான, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்; அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சி ஆகியவை உள்ளன. இவர்களில், சரத்குமார், லோக்சபா தேர்தலில் போட்டியிட, 'சீட்' கேட்டார். ஆனால், வழங்கப்படவில்லை. எனிவும், அவர் ஆதரவை தொடர, முடிவு செய்துள்ளார். இது தவிர, பல்வேறு அமைப்புகள், அ.தி.மு.க.,விற்கு, ஆதரவு தெரிவித்துள்ளன. ஆதரவு தெரிவித்த கட்சி தலைவர்களுக்கு, முதல்வர் நன்றி தெரிவித்து, கடிதம் எழுதி உள்ளார். அதில், 'அ.தி.மு.க., வேட்பாளர்கள், அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறும் வகையில், முழு ஈடுபாட்டுடன் பணியாற்றுங்கள்' என, குறிப்பிட்டு உள்ளார். சம்மந்தப்பட்ட கட்சி தலைவர்கள், போயஸ் கார்டனில், முதல்வர் ஜெயலலிதாவை, நேற்று சந்தித்து, தங்கள் ஆதரவை தெரிவித்தனர். அவர்களுக்கு, முதல்வர் நன்றி தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE