ஊழலை ஒழிப்பதாக கூறும் ராகுல், மாட்டுத் தீவன ஊழலில் சம்பந்தப்பட்ட லாலு பிரசாத்துடன் கூட்டணி வைக்க முயற்சிப்பது, காங்கிரஸ் கட்சியின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துகிறது.
கே.சி.தியாகி, ஐக்கிய ஜனதா தள பொதுச் செயலர்
மோடி ஆளும் குஜராத் மாநில காவல் துறையினர் என்னை, உளவு பார்க்கின்றனர். நான் பேசும் நபர்களுக்கு தொல்லை கொடுத்தும், அவர்களை கேள்விகள் கேட்டும், மிரட்டியும் வருகின்றனர்.
மணிஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சித் தலைவர்
இரு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் போது, அந்த கூட்டணியானது, இரு கட்சிகளுக்கும் பரஸ்பரம் பலன் தரக்கூடியதாக இருக்க வேண்டும். அதை விடுத்து, கூட்டணி கட்சிகள் ஒன்றை ஒன்று மிரட்டினால், அது சரியல்ல.
நிதின் கட்காரி, பா.ஜ., முன்னாள் தலைவர்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE