வாசகர் கடிதம்| Dinamalar

வாசகர் கடிதம்

Added : மார் 08, 2014

தேர்தல் தேதி அறிவித்த பின்னரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவர், குழப்பமோ குழப்பம் என, எதுவும் பேசாமல் இருக்கிறார். கூட்டணி விவகாரத்தில், பத்திரிகைகள் உட்பட, அனைவரும் கிண்டல் செய்யும் அளவிற்கு, விஜயகாந்த், நடந்து கொள்ளலாமா ?
கே.காசிவிஸ்வநாதன், தே.மு.தி.க., தலைமை கழக பேச்சாளர், ஒட்டன்சத்திரம்.

ராஜிவ் மற்றும் அவருடன், 16 அப்பாவிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம், நாட்டு மக்களை உலுக்கியது என்பது மறுக்க முடியாதது. ஆனால், 10 ஆண்டுகளாக, ஆட்சியில் இருந்த காங்கிரஸ், தங்களது இளம் தலைவரை கொலை செய்தவர்களுக்கு ஏன் தண்டனை அளிக்கவில்லை அல்லது ஏன் ரத்து செய்யவில்லை? கருணாநிதிக்கு, வார்த்தை ஜாலங்களில், வாய்ப் பந்தல் போடுவது, கை வந்த கலை. ராஜிவ் கொலையாளிகள் மூவரையும், தமிழக அரசு,விடுவித்ததும், அதை வரவேற்று பேசிவிட்டு; பின், மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும் எனக்கூறி, பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டுகிறார்.

ஷியாமளா ரங்கநாதன், மந்தவெளி, சென்னை - 28 .

அரசியல் கட்சிகள், ஒவ்வொரு வேட்பாளருக்கும் பணம் கொடுக்க, காத்திருப்பது வேதனைக்குரிய விஷயம். ஒவ்வொரு அரசியல் கட்சியும், தேர்தல் பிரசாரத்தின் போது, எங்கள் கட்சி, வாக்காளர்களுக்கு பணம் வினியோகிக்க மாட்டோம் என, உறுதிமொழி அளிக்க வேண்டும்; வாக்காளர்களும், பணம் வாங்காமல், தகுதியான நபரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

வி. மணி, கீழக்கோட்டை, சின்னாளபட்டி.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X