புதுடில்லி : மோடியின் கொள்கைகள் (மோடித்துவம்) இந்தியாவிற்கு மட்டும் அல்ல உலக நாடுகளுக்கும் பொருந்தக் கூடியது என மோடி குறித்து சித்தார்த் மஜூம்தர் எழுதிய புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மோடியின் கொள்கைகள் குறித்த புத்தகம் பற்றி தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் ரவீஸ் திவாரி கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ரவீஸ் திவாரி தனது கட்டுரையில் மோடியின் கொள்ளைகள் தொடர்பான புத்தகம் குறி்த்தும், அதில் இடம்பெற்றுள்ள சிறப்பு அம்சங்கள் குறித்தும் குறிப்பிட்டுள்ளார். கட்டுரை விபரம் : பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் 14 மேற்கோள்களை எடுத்துக் காட்டும் வகையில், புத்தகம் ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மோடித்துவம் என பெயரிடப்பட்டுள்ள இந்த புத்தகத்தை பா.ஜ., தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ளார். இந்த புத்தக வெளியீட்டு விழாவில் கிரண் பேடி, சுப்ரமணியசாமி உள்ளிட்ட பா.ஜ., பிரமுகர்களும் கலந்து கொண்டனர். குஜராத் முதல்வராக மோடியின் 13 ஆண்டு கால ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள், பிரச்னைகளுக்கு அவரால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், குறிப்பாக வறுமை இல்லாத இந்தியாவை உருவாக்க அவர் எடுத்துக் கொண்ட முனைப்புக்கள் உள்ளிட்டவைகள் பற்றி விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
மோடித்துவம் புத்தகத்தில் எடுத்துக்காட்டப்பட்டுள்ள ஒரு சிறந்த அரசு ஏற்படுவதற்கான மோடியின் 14 கொள்கைகள், குஜராத் தாண்டி அயர்லாந்து துவங்கி, தைவான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலக முழுவதிலும் உள்ள நாடுகளிலும் கையாளப்பட்டு வருகின்றன. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், பல்வேறு பரிமாணங்களில் மோடியின் பரிந்துரைகள் முன்உதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
மோடியின் மதசார்பின்மை என்பது இந்தியாவிற்கு முக்கியத்துவம் அளிப்பது என அந்த புத்தகம் எடுத்துரைக்கிறது. மதசார்பின்மை என்ற பெயரில் மக்கள் மனங்களில் உள்ள வெறுப்பு உணர்வை திருப்திகரமான உணர்வாக மாற்றுவதே. இது 1804ம் ஆண்டு, மாவீரன் நெப்போலியன் குறிப்பிட்ட திருப்திப்படுத்தும் கொள்கைகளால் முந்தைய பிரெஞ்சு சாம்ராஜ்யம் சரிந்த பிறகு, அவர் மேற்கொண்ட பொது கொள்கைகளின் குறியீடுகளை போன்றது.
மோடியின் ஆட்சி, ஓட்டு வங்கி அரசியலை விட வளர்ச்சிக்கான அரசியல் மீது அதிக நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளதாக அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது நடவடிக்கைகள், ஒருங்கிணைந்த அமெரிக்காவை உருவாக்குவதற்காக அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் ஏற்படுத்திய மரபுகளுக்கு சமமானது. பிளவுபட்டு கிடந்த தேசத்தில் தனது தொடர் முயற்சியின் காரணமாக லட்சியத்துடனான உள்கட்டமைப்பு திட்டங்களால் உலகளாவிய வளர்ச்சியை ஏற்படுத்தியதன் மூலம் மக்களின் இதயங்களை வெற்றி கொண்ட ஆபிரகாம் லிங்கனின் செயல்பாடுகளை ஒத்தது எனவும் அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொருளாதார பிரச்னைகளில் மோடியின் உறுதிமொழியானது, பிரதமர் மார்கரெட் தாட்சரின் பொருளாதார கொள்கை போன்று வர்த்தக துறையில் அரசின் வர்த்தகம் இருக்க கூடாது என்ற எதிரொலியாகும். பொருளாதாரம் என்பது அதிக அளவிலான உற்பத்தி சார்ந்ததாக இருக்க வேண்டும் என்பதே அவரது நம்பிக்கை. இது அவரது சிறப்பு துறை முதலீடுகளில் வெளிப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள், சீனாவின் மக்கள் குடியரசு கட்சியின் டெங் ஷியோபிங்கின் சீர்திருத்த நடவடிக்கை உள்வாங்கிய சிந்தனையாகும் என மோடித்துவம் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE