பல்லடத்தில் பணம், ரெடிமேடு சட்டைகள் பறிமுதல் :பறக்கும் படை சோதனையில் சிக்கின

Added : மார் 08, 2014 | |
Advertisement
பல்லடம் : பல்லடத்தில், தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட ஆய்வின்போது, ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட, 1.75 லட்சம் ரூபாய் பணம், இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 360 ரெடிமேடு சட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம், பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில், போலீசார் மற்றும்

பல்லடம் : பல்லடத்தில், தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட ஆய்வின்போது, ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட, 1.75 லட்சம் ரூபாய் பணம், இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 360 ரெடிமேடு சட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம், பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில், போலீசார் மற்றும் அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
அக்குழுவினர், வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பல்லடம் பனப்பாளையம் பிரிவு அருகே, நகராட்சி கமிஷனர் நாராயணன், எஸ்.ஐ., குழந்தைவேல் தலைமையிலான குழுவினர் நேற்று ஆய்வு நடத்தினர்.
'ஸ்கோடா' காரில், முத்துாரை சேர்ந்த தியாகராஜன் வந்தார். அவரிடம், கணக்கில் வராமல், 75 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது; அப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மற்றொரு காரில், போதிய ஆவணங்கள் இல்லாமல், ஒரு லட்சம் ரூபாய் பணம் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்து, பணம் வைத்திருந்த, காங்கயம் அண்ணாதுரையிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
'நிசான்' காரில், எவ்வித ஆவணமும் இல்லாமல், இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 360 ரெடிமேடு சட்டைகள் இருந்தன. அவற்றையும் பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X