திருச்சி:
"நான் தான், முதல் மனைவி என, என்னை நம்ப வைத்து, நான்கைந்து முறை
கர்ப்பமாக்கி, தன் மாமியார் மூலம், என் கருவை கலைக்கச் சொல்லி, கொலை
மிரட்டல் விடுக்கும், என் கணவர், துணை மேயர், ஆசிக் மீரா மீது, நடவடிக்கை
எடுக்க வேண்டும்' என, எட்டு மாத கர்ப்பிணி பெண், திருச்சி மாநகர போலீஸ்
கமிஷனர் அலுவலகத்தில், நேற்று, புகார் அளிக்க வந்தார்.
கார் விபத்து
: திருச்சியை சேர்ந்த, மறைந்த, அ.தி.மு.க., அமைச்சர், மரியம்பிச்சை மகன்,
ஆசிக் மீரா. அமைச்சர் மரியம்பிச்சை, எம்.எல்.ஏ., பதவியேற்பு விழாவுக்குச்
செல்லும் வழியில், கார் விபத்தில் சிக்கி இறந்தார். அதையடுத்து,
அ.தி.மு.க., தலைமையின் கருணைப் பார்வையால், ஆசிக் மீராவுக்கு, திருச்சி
மாநகராட்சி துணை மேயர் பதவி கிடைத்தது. தற்போது, அப்பதவிக்கு, ஒரு பெண்
வடிவில், ஆபத்து காத்திருக்கிறது.
திருச்சி, சங்கிலியாண்டபுரம்,
மணல்வாரித்துறை ரோடு பகுதியைச் சேர்ந்த, ரஞ்ஜித் சிங் ராணா மகள்,
துர்கேஸ்வரி, 28. இவர் திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு, நேற்று,
புகார் அளிக்க வந்தார்.
அவரது மனுவில் கூறியிருப்பதாவது: நானும்,
துணை மேயர் ஆசிக் மீராவும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். அவரது
அப்பா, ஆசிக்கை துரத்தி விட்டார். அதனால், என்னுடன் சேர்ந்து வாழ்ந்தார்.
அவரது செலவுக்கு, வட்டிக்கு கடன் வாங்கி பணம் கொடுத்தேன். அவரால், மூன்று
முறை கருவுற்றேன். "இப்போது குழந்தை வேண்டாம்' என, மூன்று முறை
கருக்கலைப்பு செய்ய வைத்தார். அவரது அத்தை, மைமூன் நிஷாவின் மகள், சாஜிதா
பேகத்தை திருமணம் செய்து கொண்டார். இதுபற்றி கேட்டபோது, "எங்கள் இஸ்லாம்
மார்க்கத்தில், இரண்டாவது திருமணம் பெரிய விஷயம் இல்லை. கவலைப்படாதே... நீ
தான் என் முதல் மனைவி' என்றார். அவர் மீதான நம்பிக்கையால் அமைதியாக
இருந்தேன். மீண்டும் கருவுற்றேன். நண்பர்கள் மூன்று பேரை தூண்டிவிட்டு, 1
லட்ச ரூபாய் கொடுத்து, அவரது மாமியார், மைமூன் நிஷா, என்னை கொலை செய்ய
முயற்சித்தார். மாமியார் பேச்சைக் கேட்டு, கருவை கலைக்கும்படி
மிரட்டியதால், மனமுடைந்து, விஷம் அருந்தினேன். என் தாய் மதுமதி அளித்த
புகார்படி, தாங்கள் (கமிஷனர்) நடத்திய பேச்சில், தனிக்குடித்தனம் வைத்து,
பார்த்துக் கொள்வதாக ஆசிக் எழுதிக் கொடுத்தார். விஷமருந்தியதால், நான்காவது
முறை கரு கலைந்தது. தனிக்குடித்தனம் சென்ற பிறகு, மீண்டும் கருவுற்றேன்.
எட்டு மாத கர்ப்பிணியாக உள்ளேன். வாரிசு பிரச்னை வரும் எனக் கருதி, அவரது
மாமியார், என் கருவை கலைக்கும்படி மிரட்டுகிறார்.
"நீ தான் என் முதல்
மனைவி' என, நம்பவைத்து, நான்கைந்து முறை கர்ப்பமாக்கி, மாமியார் மூலம் என்
கருவை கலைக்கச் சொல்லி கொலை மிரட்டல் விடுக்கும், என் கணவர், ஆசிக் மீரா,
அவரது மாமியார் மைமூன் நிஷா மற்றும் நண்பர்கள் மூன்று பேர் மீது, நடவடிக்கை
எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பாக,
அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்துக்கு, கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ்
சென்றதால், பொன்மலை போலீசில், புகார் கொடுக்கச் சென்றார். ஆனால், போலீசார்
புகாரை வாங்கவில்லை.
யார் காரணம்? : இதுகுறித்து திருச்சி மாநகர
துணை மேயர் ஆசிக் மீரா கூறியதாவது: அப்பெண்ணை எனக்கு தெரியும். அவர்
கர்ப்பத்துக்கும், எனக்கும் சம்பந்தம் இல்லை. ஏற்கனவே இரண்டு
கர்ப்பத்துக்கும் யார் காரணம்? அவரது, "ஸ்டேட்மென்ட்' தவறாக உள்ளது.
அரசியலில் என் வளர்ச்சி பிடிக்காததால், அவரை தூண்டி விடுகின்றனர்.
இப்பிரச்னையை சட்டப்படி சந்திப்பேன். இவ்வாறு, அவர் கூறினார்.
பெண்
சர்ச்சையில் சிக்கும் "புள்ளிகள்' : ஏற்கனவே, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த
அமைச்சர், பரஞ்ஜோதி, டாக்டர் ராணி என்பவர், இரண்டாவது திருமணம் செய்ததாக
தொடர்ந்த வழக்கால், அமைச்சர் பதவி, கட்சிப் பதவி என, அனைத்தையும் பறி
கொடுத்தார். அதேபோல, துறையூர் யூனியன் சேர்மன் பொன்.காமாரஜ், ஆந்திரா
சிறுமியை கற்பழித்த வழக்கால், கட்சியிலிருந்தே தூக்கப்பட்டார். தற்போது,
ஆசிக் மீரா, பெண் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.