அரசியல் செய்தி

தமிழ்நாடு

மோடி கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு தடை : டீக்கடைகளில் பிரசாரம் செய்ய தமிழக அரசு எதிர்ப்பு

Updated : மார் 10, 2014 | Added : மார் 09, 2014 | கருத்துகள் (45)
Advertisement
மோடி கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு தடை : டீக்கடைகளில் பிரசாரம் செய்ய தமிழக அரசு எதிர்ப்பு

மக்களுடன் நேரடியாக கலந்துரையாடல் நடத்தும், பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் நிகழ்ச்சிக்கு, தமிழகத்தில், பல இடங்களில் அனுமதி அளிக்கவில்லை. "டீக்கடைகளில் நடக்கும் இந்த பிரசாரத்தை, தமிழக அரசு முடக்குகிறது' என, பா.ஜ., நிர்வாகிகள் குற்றஞ்சாட்டு கின்றனர்.


நல்ல நிர்வாகம் :

"மோடி டீக்கடை நடத்தியவர். அவர், பிரதமர் பதவிக்கு ஆசைப்படுவது நிறைவேறாது' என்ற, காங்., தலைவர் மணிசங்கர் அய்யரின் விமர்சனத்தை, தன் தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்த பா.ஜ., முடிவு செய்தது. டீக்கடைகளில் இருக்கும், சாதாரண மக்களுடன் கலந்துரையாடும், "வீடியோ கான்பரன்ஸ்' நிகழ்ச்சியை மோடி மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே, பிப்ரவரி, 12ல், "நல்ல நிர்வாகம்' என்ற தலைப்பில் அவர், கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தினார். நேற்று மகளிர் தினத்தை முன்னிட்டு, "மகளிர் முன்னேற்றம்' குறித்த, "வீடியோ கான்பரன்ஸ்' நிகழ்ச்சியில் மோடி பங்கேற்றார். மாலை, 6:00 மணி முதல் இரவு, 7:15 மணி வரை, இந்நிகழ்ச்சி நடந்தது.

அப்போது, மக்கள் கேட்ட கேள்விகளுக்கு, அவர் அளித்த பதில்:

இன்று, சர்வதேச மகளிர் தினம். நம் நாட்டில் வசிக்கும், ஒவ்வொரு பெண்களுக்கும், என் வாழ்த்துக்கள். இந்த நாட்டை கட்டமைத்ததிலும், வளர்ச்சியிலும், பெண்களுக்கு உள்ள முக்கிய பங்கை, யாராலும் மறுக்க முடியாது. குடும்பத்துக்குள்ளேயே, ஆண் குழந்தைக்கும், பெண் குழந்தைக்கும் இடையே, பாகுபாடு காட்டப்படுகிறது. பெண்களிடம் பாகுபாடு காட்டுவதே, சமூகத்தில் நடக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும் காரணமாக அமைகிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும்.

கல்வி, தொழில், திருமணம் ஆகியவற்றை தேர்வு செய்வதில், பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும். "ஒரு பெண் கல்வி கற்றால், இரண்டு குடும்பங்கள் கல்வி அறிவு பெற்று விடும்' என, தேசப்பிதா மகாத்மா காந்தி கூறினார்.

இந்த விஷயத்தில், ஒரு விஷயத்தை கூற விரும்புகிறேன். ஒரு பெண் கல்வி கற்றால், இரண்டு குடும்பங்கள் மட்டுமல்ல; இரண்டு தலைமுறையே கல்வி கற்று விடும்.

பெரும்பாலான பள்ளிகளில், பெண் குழந்தைகளுக்கு கழிப்பறைகள் இல்லை. இதனால் தான், பெண்கள், பாதியிலேயே, படிப்பை கைவிடுகின்றனர். இந்த நிலையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு, விரைவில் தண்டனை வழங்க வேண்டும். அப்போது தான், இதுபோன்ற குற்றங்களை மீண்டும் செய்யக் கூடாது என்ற பயம், அவர்களுக்கு ஏற்படும்.

புதிய தொழில்நுட்பங்களை கையாளுவதில், ஆண்களை விட, பெண்கள், வேகமாகவும், ஆர்வமாகவும் உள்ளனர். பொருளாதார ரீதியாக பெண்களுக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும். இதன் மூலம், அவர்களுக்கு அதிகாரம் அளிக்க முடியும். இவ்வாறு மோடி பேசினார்.

இந்நிகழ்ச்சியை மேற்கொள்ள, சென்னையில், 42 இடங்களில், பா.ஜ.,வினர் ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், பல இடங்களில், இதற்கான அனுமதியை போலீசார் அளிக்கவில்லை. தமிழகத்தின் பல பகுதிகளில், இதே நிலை தான் நீடித்தது.


"ஒடுக்க பார்க்கிறது' :

"பா.ஜ.,வுக்கு மக்களிடையே ஏற்பட்டுள்ள வரவேற்பை தாங்கிக் கொள்ள முடியாத, அ.தி.மு.க., அரசு, எங்களை ஒடுக்கப் பார்க்கிறது. ஆனால், இந்த அடக்குமுறையை மீறி, மக்கள் மத்தியில் ஊடுருவுவோம்' என, பா.ஜ., கட்சியினர் கூறினர்.

பா.ஜ.,வின் குற்றச்சாட்டு குறித்து, போலீஸ் கூறுகையில், "பொது இடத்தில் தேர்தல் பிரசாரத்தை நடத்த, முறையான அனுமதி பெற வேண்டும். அனுமதி பெற்றிருந்தால், நிகழ்ச்சி நடத்தலாம்; இல்லையேல் நடத்த முடியாது. அனைத்துக் கட்சிகளுக்கும் இது பொருந்தும்' என்றனர்.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
செந்தமிழ் கார்த்திக் - Namakkal to chennai,இந்தியா
09-மார்-201409:11:05 IST Report Abuse
செந்தமிழ் கார்த்திக் "பொது இடத்தில் தேர்தல் பிரசாரத்தை நடத்த, முறையான அனுமதி பெற வேண்டும். அனுமதி பெற்றிருந்தால், நிகழ்ச்சி நடத்தலாம் இல்லையேல் நடத்த முடியாது. அனைத்துக் கட்சிகளுக்கும் இது பொருந்தும்' // பல பாஜக கட்சியினர் இதை அரவிந்த் கெஜ்ரிவலுக்கு சொன்னதை நியாபக படுத்தி கொள்ளுங்கள்.
Rate this:
Share this comment
SURESH SUBBU - Delhi,இந்தியா
09-மார்-201409:38:44 IST Report Abuse
SURESH SUBBUபிரச்சாரம் பண்றதா இருந்தால் அனுமதி தரலாம்.. குரங்காட்டி வித்தை காட்டுவதற்கு தேர்தல் நேரத்தில் அனுமதி உண்டான்னு தேர்தல் விதிமுறையில் இருக்கா என்று தேர்தல் கமிஷன் தான் சொல்லணும்.....
Rate this:
Share this comment
Cancel
செந்தமிழ் கார்த்திக் - Namakkal to chennai,இந்தியா
09-மார்-201409:09:44 IST Report Abuse
செந்தமிழ் கார்த்திக் ஏங்கடா டேய்... அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத்தில் பொது இடத்தில பேரணி , கூட்டம் நடத்திய போது தேர்தல் விதிமுறைகளை காட்டி குஜராத் போலீசார் அவரை தடுத்து நிறுத்தியது சரியாம்.. ஆனால் முன் அனுமதி வாங்காமல், தமிழ்நாட்டில் பொது இடத்தில கூட்டம் கூட்டி பிரசாரம் செய்தால், அதனை தமிழக போலீசார் தடுத்தால் மட்டும் தவறாம் ??? நல்லாருக்குடா உங்க நியாயம். இப்போவே இந்த அராஜகம் பன்னுரிங்களே, நாளை நீங்கள் ஒருவேளை வெற்றி பெற்றுவிட்டால் இன்னும் என்ன என்ன அந்நியாயம் பண்ணுவிங்க ???
Rate this:
Share this comment
Shanthi Raj - Chennai,இந்தியா
09-மார்-201409:23:23 IST Report Abuse
Shanthi Rajகாங்கிரெஸ்ஸ விட மோசமா நடக்க மாட்டாங்க...
Rate this:
Share this comment
SURESH SUBBU - Delhi,இந்தியா
09-மார்-201409:36:18 IST Report Abuse
SURESH SUBBUஅம்மாஜி கும்புடு குருசாமிகள மரியாதை இல்லாமல் காலில் விழவைத்து அடிமையாக நடத்துற மாதிரியே எல்லாரையும் மரியாதையா பேசுறீங்க ... வாழ்க அம்மாஜி...
Rate this:
Share this comment
Ram Psa - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
09-மார்-201409:39:21 IST Report Abuse
Ram Psaதம்பி இங்க எவன் நாகரீகமா கருத்து சொல்றான்..நாகரீகம்ன்னா ஒரு கிலோ எவ்ளோ ன்னு கேட்குற நெலமையில தான சவ பெட்டி ஆளுங்க இருக்கானுவ......
Rate this:
Share this comment
Cancel
Vanavaasam - Dallas,Fort Worth,யூ.எஸ்.ஏ
09-மார்-201408:13:33 IST Report Abuse
Vanavaasam அதிமுகவுக்கு வேறு வழி இல்லை என்றாலும் ... மோடிக்கு ஆதரவு தர கூடாது .... பிஜேபி இல் வேறு யாராவது பிரதமர் என்றால் மட்டும் ஆதரவு தரலாம் .... இதுவே என்னை போன்ற அதிமுக அனுதாபிகளின் விருப்பம் ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X