அரசியல் செய்தி

தமிழ்நாடு

அமைதி-வளம்-வளர்ச்சி பாதையில் இந்தியாவை அழைத்து செல்ல அ.தி.மு.க.வுக்கு ஒரு வாய்ப்பு

Updated : மார் 11, 2014 | Added : மார் 09, 2014 | கருத்துகள் (1)
Share
Advertisement
நாகர்கோவில் : அமைதி-வளம்-வளர்ச்சி பாதையில் இந்தியாவை அழைத்து செல்ல அ.தி.மு.க.வுக் ஒரு வாய்ப்பு தரவேண்டும் என்று நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெ., வேண்டுகோள் விடுத்தார். கன்னியாகுமரி அ.தி.மு.க. வேட்பாளர் ஜாண்தங்கத்தை ஆதரித்து நாகர்கோவில் பொருட்காட்சி திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது: வரும் மக்களவை தேர்தல் இந்தியாவின் தலைவிதியை மாற்றி
அமைதி-வளம்-வளர்ச்சி பாதையில் இந்தியாவை அழைத்து செல்ல அ.தி.மு.க.வுக்கு ஒரு வாய்ப்பு

நாகர்கோவில் : அமைதி-வளம்-வளர்ச்சி பாதையில் இந்தியாவை அழைத்து செல்ல அ.தி.மு.க.வுக் ஒரு வாய்ப்பு தரவேண்டும் என்று நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெ., வேண்டுகோள் விடுத்தார்.
கன்னியாகுமரி அ.தி.மு.க. வேட்பாளர் ஜாண்தங்கத்தை ஆதரித்து நாகர்கோவில் பொருட்காட்சி திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது: வரும் மக்களவை தேர்தல் இந்தியாவின் தலைவிதியை மாற்றி அமைக்கும் தேர்தல். மக்களின் துயரங்களை தீர்க்கும் தேர்தல். 2011 தேர்தலில் குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டும் என்று உங்களிடம் கோரிக்கை வைத்த போது அதை நிறைவேற்றி தந்தீர்கள். அதபோல மத்தியில் மக்கள் விரோத காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து அ.தி.மு.க. அங்கம் வகிக்கும் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்பதற்காக வந்துள்ளேன். எவ்வித தியாகத்தையும் செய்து மக்களை கொள்ளையடித்த இன வெறிபிடித்த வெள்ளையர் ஆட்சியை அகற்ற மக்கள் விரட்டியடித்தது போல, இந்த நாட்டின் வளத்தை சூறையாடி காங்கிரஸ் அரசை இந்த தேர்தலில் விரட்டியடிக்க வேண்டும். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் செய்யாத பல மக்கள் நல திட்டங்களை எனது அரசு நிறைவேற்றி வருகிறது. 2011-22-ம் ஆண்டில் வேளாண்உற்பத்தியில் தமிழ்நாடு அரசு சாதனை படைத்து மத்திய அரசின் விருதை பெற்றுள்ளது. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் துயர் துடைக்க 1328 கோடி ரூபாயை எனது அரசு மானியமாக வழங்கியது. மின்உற்பத்தியில் 2500 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் 3300 மெகாவாட் மின்சாரம் விலைக்கு வாங்கப்படுகிறது. மேலும் 5300 மெகாவாட் மின் உற்பத்திக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தொழில் துறையில் 31 ஆயிரத்து 762 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. தி.மு.க. தலைவர் கருணாநிதி தனக்கு தானே கேள்வி கேட்டு பதிலளிக்கும் அறிக்கையில் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் கோரிக்கையை பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்துக்கு அனுப்பி வைத்துள்ளதை குறைகூறியுள்ள அவர், அந்த கோப்புகளை உடனே வரவழைத்து அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியிருக்கலாம் என்றும், முஸ்லீம்களக்கு முதலில் இட ஒதுக்கீடு வழங்கியதே தி.மு.க.தான் என்றும் கூறியுள்ளார். திருடிக்குதான் பிறரை பார்க்கும் போது திருடி என்று தோன்றும். அதுபோலதான் கருணாநிதி நிலையும். இடஒதுக்கீடு தொடர்பாக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை திருத்தி அமைத்து பரிந்துரை செய்ததே எனது அரசுதான். 2006-ல் கருணாநிதி முதல்வராக பொறுப்பேற்ற போது இதே கோரிக்கைø பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அனுப்பி வைப்பதாக ஆளுநர் உரையில் தெரிவித்தது ஏன்? மக்களை ஏமாற்றுவதும், வஞ்சிப்பதும் கருணாநிதிக்கு கைவந்த கலை. மத்திய அரசின் கொள்கையால் ஏற்பட்டுள்ள விலைவாசி ஏற்றத்தை தவிர்க்க எனது அரசு நியாயவிலை கடைகள் மூலம் குறைந்த விலையில் பொருட்களை வழங்கி வருகிறது. போர் குற்றம் செய்தவர்களை ஐ.நா. மூலம் தண்டிக்க வேண்டும், இலங்கையை நட்பு நாடு என்று கூறக்கூடாது, காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக்கூாடது என்பது உள்ளிட்ட பல தீர்மானங்களை சட்டசபையில் நிறைவேற்றியுள்ளேன். கச்ச்தீவை மீட்க வேண்டும் என்று 2008-ல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அதற்கு எதிராக மத்திய அரசு வாக்குமூலம் அளித்தது. தி.மு.க.வும் அதற்கு துணை நின்றது. தமிழக மக்களுக்கு மட்டுமல்லாமல், தமிழக அரசுக்கும் மத்திய அரசு துரோகம் öய்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சி அங்கம் வகிக்கும் ஆட்சி மத்தியில் அமைந்தால் மக்களை பாதிக்கும் அனைத்து கொள்கைகளும் மாற்றி அமைக்கப்படும். பெட்ரோலிய விலை ஒரு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மாற்றப்படும். நாட்டின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கூடுதல் நிதி ஒதுக்கப்படும். முப்படை வீரர்களுக்கு அதிக சலுகைகள் வழங்கப்படும். மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படும். சுரண்டப்பட்ட அரசு பணம் மீண்டும் அரசுக்கே கொண்டுவரப்படும். சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழி வழக்காடு மொழியாக மாற்றப்படும். வெளிநாட்டு கருப்பு பணத்தை மீட்டு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். தனிநபர் வருமான உச்சவரம்பு ஐந்து லட்சமாக அதிகரிக்கப்படும். அமைதி-வளம்-வளர்ச்சி என்ற பாதையில் இந்தியாவை அழைதது செல்ல ஒரு வாய்ப்பு தாருங்கள். ஊழலற்ற ஆட்சி, நீடித்த வளர்ச்சி, மக்கள் வாழ்வில் மலர்ச்சி ஏன்ற நிலையை இந்தியாவில் ஏற்படுத்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chenduraan - kayalpattanam,இந்தியா
11-மார்-201402:59:05 IST Report Abuse
Chenduraan அமைதி-வளம்-வளர்ச்சி பாதையில் தமிழகத்தை அழைத்து செல்ல அ.தி.மு.க.வுக்கு கொடுத்த வாய்ப்பையே நழுவ விட்டுக்கொண்டிருக்கிற அல்லைகைகளுக்கு திரும்பவும் ஓட்டா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X