வர்த்தகர்கள் பணம் கொண்டு செல்ல தடை இல்லை: நிபந்தனைகளுடன் தேர்தல் கமிஷன் உத்தரவு| Election commission allows business man take Money | Dinamalar

வர்த்தகர்கள் பணம் கொண்டு செல்ல தடை இல்லை: நிபந்தனைகளுடன் தேர்தல் கமிஷன் உத்தரவு

Updated : மார் 10, 2014 | Added : மார் 10, 2014 | கருத்துகள் (6)
Share
புதுடில்லி:'வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள், எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும், கொண்டு செல்ல லாம். அதற்கு, கட்டுப்பாடு விதிக்கும் எண்ணம் எதுவும், தேர்தல் கமிஷனில் இல்லை. எனினும், அதிக தொகை கொண்டு செல்லும் போது, அதற்கான, முறையான ஆவணங்களை காண்பிக்க வேண்டும்' என, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் கூறியதாவது:கறுப்பு பண புழக்கத்தை கண்டறியவும், இது
 வர்த்தகர்கள் பணம் கொண்டு செல்ல தடை இல்லை: நிபந்தனைகளுடன் தேர்தல் கமிஷன்  உத்தரவு

புதுடில்லி:'வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள், எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும், கொண்டு செல்ல லாம். அதற்கு, கட்டுப்பாடு விதிக்கும் எண்ணம் எதுவும், தேர்தல் கமிஷனில் இல்லை. எனினும், அதிக தொகை கொண்டு செல்லும் போது, அதற்கான, முறையான ஆவணங்களை காண்பிக்க வேண்டும்' என, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் கூறியதாவது:கறுப்பு பண புழக்கத்தை கண்டறியவும், இது தொடர்பாக, வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஒவ்வொரு தொகுதியிலும், கிராம அளவிலும், வார்டு அளவிலும், குழுக்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


கறுப்பு பணம்:


ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், பத்திரிகையாளர்கள், சமூக நல ஆர்வலர்கள், கல்வி துறையுடன் தொடர்புடையோர், இந்த குழுவில் இடம் பெறுவர்.இவர்கள், அந்தந்த தொகுதியில் உள்ள வாக்காளர்களிடையே, கறுப்பு பண புழக்கம் குறித்து, அவ்வப்போது கலந்து ரையாடுவது, சூடான விவாதம் நடத்துவது ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடுவர். அப்போது, எந்த அரசியல் கட்சி அல்லது வேட்பாளராவது, கறுப்பு பணத்தை புழக்கத்தில் விடுவது குறித்து, தகவல் தெரிந்தால், அதுகுறித்து, இந்த குழுவினர், மாநில தேர்தல் அதிகாரிக்கு தகவல் தெரிவிப்பார்.இதேபோல், வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளையும், இந்த குழுவினர், மறைமுகமாக கண்காணிப்பர். பணப் புழக்கம் அதிகம் இருப்பதாக சந்தேகம் எழும் தொகுதிகளில், இந்த குழுவினர், கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வர். ஒவ்வொரு வேட்பாளரும், தேர்தலுக்கு செலவு செய்யும் விவரம் குறித்த பட்டியலையும், அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள், இந்த குழுவினரிடம் ஒப்படைக்கவும் உத்தரவிடப்படும். ஒவ்வொரு குழுவிலும், 10 பேர் இடம் பெறுவர். பணப் புழக்கம் குறித்து கண்காணிப்பதுடன், ஓட்டு போடுவதற்காக, பணமோ, பரிசோ, எந்த வித இலவச பொருட்களோ வாங்கக் கூடாது என்றும், வாக்காளர்களிடம் விளக்குவர்.


போலீஸ் உதவும்


இந்த குழுவில் உள்ள வர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக, அவர்கள் பற்றிய தகவல்களை ரகசியமாக வைக்கவும் உத்தரவிடப்படும். குழுவில் உள்ள ஒவ்வொருவரின் தொலைபேசி எண்களும், உயர் போலீஸ் அதிகாரிகள் வசம் கொடுக்கப்படும். அவர்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால், போலீசார், உடனடியாக உதவுவர்.அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள், வேட்பாளர்களுடன் எந்த தொடர்பும், உறவும் இல்லாதவர்கள் மட்டுமே, இந்த குழுவில் நியமிக்கப்படுவர்.இவ்வாறு, தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்தன.

பொதுமக்களுக்கு கட்டுப்பாடு இல்லை
*பொதுமக்கள், வர்த்தகர்கள், எவ்வளவு பணம் வேண்டுமானாலும், கொண்டு செல்லலாம், வைத்து
இருக்கலாம். இதற்கு, கட்டுப்பாடு இல்லை.
*யாராவது, 10 லட்ச ரூபாய்க்கு அதிகமாக வைத்திருந்தால், அதுகுறித்து, வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X