வளர்ச்சி பாதையில் அழைத்து செல்ல ஒரு வாய்ப்பு: நாகர்கோவிலில் ஜெ., பேச்சு

Updated : மார் 10, 2014 | Added : மார் 10, 2014 | கருத்துகள் (9)
Share
Advertisement
நாகர்கோவில் : ''அமைதி, வளம், வளர்ச்சி பாதையில் இந்தியாவை அழைத்து செல்ல, அ.தி.மு.க., வுக்கு ஒரு வாய்ப்பு தரவேண்டும்,'' என, நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெ., வேண்டுகோள் விடுத்தார்.கன்னியாகுமரி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் ஜாண்தங்கத்தை அறிமுகப்படுத்தி, நாகர்கோவில் பொருட்காட்சி திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில், அவர் பேசியது:வரும் தேர்தல், இந்தியாவின் தலைவிதியை
வளர்ச்சி பாதையில் அழைத்து செல்ல ஒரு வாய்ப்பு: நாகர்கோவிலில் ஜெ., பேச்சு

நாகர்கோவில் : ''அமைதி, வளம், வளர்ச்சி பாதையில் இந்தியாவை அழைத்து செல்ல, அ.தி.மு.க., வுக்கு ஒரு வாய்ப்பு தரவேண்டும்,'' என, நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெ., வேண்டுகோள் விடுத்தார்.

கன்னியாகுமரி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் ஜாண்தங்கத்தை அறிமுகப்படுத்தி, நாகர்கோவில் பொருட்காட்சி திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில், அவர் பேசியது:வரும் தேர்தல், இந்தியாவின் தலைவிதியை மாற்றி அமைக்கும் தேர்தல்; மக்களின் துயரங்களை தீர்க்கும் தேர்தல். கடந்த 2011 சட்டசபை தேர்தலில், 'குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டும்' என, உங்களிடம் கோரிக்கை வைத்த போது, அதை நிறைவேற்றி தந்தீர்கள். அதேபோல மத்தியில், மக்கள் விரோத காங்., ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து, அ.தி.மு.க., அங்கம் வகிக்கும் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும்.நாட்டின் வளத்தை சூறையாடிய காங்., அரசை விரட்டியடிக்க வேண்டும். எந்த மாநிலத்திலும் செய்யாத, பல மக்கள் நல திட்டங்களை, எனது அரசு நிறைவேற்றி வருகிறது. 2011-12 ஆண்டில் வேளாண் உற்பத்தியில், தமிழக அரசு சாதனை படைத்து மத்திய அரசின் விருதை பெற்றுள்ளது. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் துயர் துடைக்க, 1328 கோடி ரூபாயை, எனது அரசு மானியமாக வழங்கியது.

மின் உற்பத்தியில் 2500 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டுஉள்ளது. நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில், 3300 மெகாவாட் மின்சாரம் விலைக்கு வாங்கப்படுகிறது. மேலும் 5300 மெகாவாட் உற்பத்திக்கான பணிகள் நடந்து வருகின்றன. தொழில் துறையில், 31 ஆயிரத்து 762 கோடி ரூபாய் முதலீடு செய்ய்யப்பட்டுள்ளது.தி.மு.க., தலைவர் கருணாநிதி, தனக்கு தானே கேள்வி கேட்டு பதிலளிக்கும் அறிக்கையில், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் கோரிக்கையை, பிற்பட்டோர் நல ஆணையத்துக்கு அனுப்பி வைத்துள்ளதை குறைகூறி உள்ளார். மேலும், 'அந்தகோப்புகளை உடனே வரவழைத்து, அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியிருக்கலாம்; முஸ்லிம்களுக்கு, முதலில் இட ஒதுக்கீடு வழங்கியதே தி.மு.க., தான்,'' என, கூறியுள்ளார்.திருடிக்கு, பிறரை பார்க்கும் போது திருடி என்று தோன்றும்; அதுபோலதான் கருணாநிதி நிலையும். இடஒதுக்கீடு தொடர்பாக பிற்பட்டோர் ஆணையத்தை திருத்தி அமைத்து, பரிந்துரை செய்ததே எனது அரசுதான்.

கடந்த 2006 ல், கருணாநிதி முதல்வராக பொறுப்பேற்ற போது இதே கோரிக்கையை, பிற்பட்டோர் ஆணையத்துக்கு அனுப்பிவைப்பதாக, கவர்னர் உரையில் தெரிவித்தது ஏன்? மக்களை ஏமாற்றுவதும், வஞ்சிப்பதும், கருணாநிதிக்கு கைவந்த கலை.மத்திய அரசின் கொள்கையால் ஏற்பட்டுள்ள விலைவாசி ஏற்றத்தை தவிர்க்க, ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலையில் பொருட்களை வழங்கி வருகிறோம்.போர் குற்றம் செய்தவர்களை ஐ.நா., மூலம் தண்டிக்க வேண்டும்; இலங்கையை நட்பு நாடு என்று கூறக்கூடாது; காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது என்பது உள்ளிட்ட தீர்மானங்களை, சட்டசபையில் நிறைவேற்றினேன். கச்சத்தீவை மீட்க வேண்டும் என, 2008 ல் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். அதற்கு எதிராக, மத்திய அரசு வாக்குமூலம் அளித்தது; தி.மு.க., வும் அதற்கு துணை நின்றது. தமிழகமக்களுக்கு மட்டுமல்லாமல் தமிழக அரசுக்கும், மத்திய அரசு துரோகம் செய்துள்ளது.

அ.தி.மு.க., அங்கம் வகிக்கும் ஆட்சி, மத்தியில் அமைந்தால், மக்களை பாதிக்கும் அனைத்து கொள்கைகளும் மாற்றி அமைக்கப்படும். பெட்ரோலிய பொருட்கள் விலை, ஒரு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மாற்றப்படும். நாட்டின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, கூடுதல் நிதி ஒதுக்கப்படும். முப்படை வீரர்களுக்கு அதிக சலுகைகள் வழங்க படும். மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படும். சுரண்டப்பட்ட அரசுப் பணம், மீண்டும் அரசு நிதிக்கு கொண்டு வரப்படும்.சென்னை ஐகோர்ட்டில், தமிழ் மொழி வழக்காடு மொழியாக மாற்றப்படும். வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். தனிநபர் வருமான உச்சவரம்பு, 5 லட்ச ரூபாயாக அதிகரிக்கப்படும். அமைதி, வளம், வளர்ச்சி என்ற பாதையில் இந்தியாவை அழைத்து செல்ல, ஒரு வாய்ப்பு தாருங்கள். ஊழலற்ற ஆட்சி, நீடித்த வளர்ச்சி, மக்கள் வாழ்வில் மலர்ச்சி என்ற நிலையை இந்தியாவில் ஏற்படுத்துவோம்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vanavaasam - Dallas,Fort Worth,யூ.எஸ்.ஏ
10-மார்-201406:32:50 IST Report Abuse
Vanavaasam குஜராத் சம்பவ பாவக்கரை திமுக மீதும் இருக்கிறது .... BJP யுடன் கூட்டணியில் இருந்து பதவி சுகத்தில் திளைத்திருந்த நேரம் அது ... இதை மமக போன்ற கட்சிகள் எப்படி மறந்தன என்று தெரியவில்லை ... சோனியாவிடும் சேர்ந்து இலங்கையில் பாவக்கரையையும் பூசிக்கொண்டது ...
Rate this:
Cancel
Vanavaasam - Dallas,Fort Worth,யூ.எஸ்.ஏ
10-மார்-201406:28:34 IST Report Abuse
Vanavaasam பிஜேபி ஒரு மதவாத கட்சி இல்லாமல் வேறென்ன ?? காங்கிரஸ்சும் BJP யும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ... அவர்களுக்கு அதிமுக ஆதரவு தர கூடாது ... அதுவும் மோடிக்கு கூடவே கூடாது ....முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டை கூட்ட வேண்டும் அதிமுக ...எனக்கு இருக்கு சந்தேகம் எல்லாம் ... குஜராத்தில் கலவரம் நடக்கும் போது பாஜக கூட்டணியில் ஆட்சி கட்டிலில் வசதியாக அமர்ந்து வேடிக்கை பார்த்த திமுகவை மமக கட்சி எவ்வாறு ஆதரிக்கிறது என்பது தான் ...பின்னர் அரசு செலவில் சிகிச்சை பார்த்த மாறன் இறந்து அரசு செலவில் அடக்கம் செய்த பின் அடுத்த 24 மணி நேரத்தில் மதவாத கட்சி என்று சொல்லிவிட்டு திமுக வெளியே வந்தது ...
Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
10-மார்-201406:46:38 IST Report Abuse
Kasimani Baskaranசூடான பாலைவனத்தில் ஞாயிறு இரவு கூட நிதானம் இல்லையா? This is too much.....
Rate this:
Cancel
Ravi Varadarajan - chennai,இந்தியா
10-மார்-201405:32:01 IST Report Abuse
Ravi Varadarajan திரும்ப திரும்ப அதே ரெகார்ட். பேசுகிறார் வெறுத்து போச்சு. இவரெல்லாம் பிரதம மந்திரி ஆகிவிட்டால் இந்தியா உருப்பட்டு விடும். கொடுமை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X