பதிவு செய்த நாள் :
கருத்துகள் (274)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

'தமிழகத்தில் காங்கிரசுக்கு, ஐந்து 'சீட்' ஒதுக்குவோம்; அதை ஏற்றுக் கொண்டால், கூட்டணி கதவு திறக்கும்' என, தி.மு.க., கூறிய யோசனையை, காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் தீவிரமாக பரிசீலித்து வருவதாக தெரிகிறது.

'கூட்டணியில் இனி மேல் எந்த கட்சிக்கும் இடமில்லை; கதவு அடைக்கப்பட்டு விட்டது' என, கூறி வந்த, தி.மு.க., தலைமை, இப்போது, 'கம்யூனிஸ்ட் கட்சிகள் வந்தால் வரவேற்போம்' என, கூறி, கதவை திறந்து வைத்து உள்ளது.இது, அறிவாலய கதவை தொடர்ந்து தட்டிப் பார்த்து, திறக்காமல் போன தால், அலுத்து ஒதுங்கி நிற்கும் காங்கிரசுக்கு தெம்பை தந்துள்ளது.

உள்ளே அனுமதிக்க...:
இதை அடுத்து, மீண்டும், தி.மு.க.,வின் கதவுகளை தட்டத் துவங்கியுள்ளதாகவும், குறைந்த தொகுதிகளைக் கொடுத்து, காங்கிரசை உள்ளே அனுமதிக்க, தி.மு.க., முடிவு செய்து உள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன. தி.மு.க., கூட்டணியில் இடம் கிடைக்காத விரக்தியில் இருந்த, தமிழக காங்கிரஸ் கட்சி, சொந்த காலில் நிற்கும் முயற்சியில், 40 தொகுதி களுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்து, கட்சி மேலிடத்திற்கு பட்டியலை அனுப்பி வைத்துள்ளது. தற்போது காங்கிரசுக்கு, எட்டு லோக்சபா,

எம்.பி.,க்கள் உள்ளனர்.அவர்கள் அனைவரும் அவரவர் தொகுதியில் போட்டியிடும் வகையில், வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், தனித்துப் போட்டி என்ற நிலை ஏற்பட்டால், அதற்கேற்ப, 'பூத்' அளவில், காங்கிரஸ் தன் தொண்டர்களை ஒருங்கிணைக்க முடியுமா? என்ற கேள்வியும் உள்ளது. சிறிய கட்சிகளுடன் மட்டும், தி.மு.க., அணி சேர்ந்த சூழ்நிலையை, தி.மு.க.,வின் தென்மண்டல முன்னாள் அமைப்புச் செயலர் அழகிரியும் ஏற்கவில்லை என்பதை, அவர் பகிரங்கப்படுத்திஇருக்கிறார்.

வருவதாக இல்லை

இந்நிலையில், கூட்டணியில் இடம்பெற்றுள்ள முஸ்லிம் இயக்கத்தைச் சேர்ந்த ஒரு தலைவர், தி.மு.க., தலைவர் கருணாநிதியிடம், காங்கிரசை கூட்டணியில் சேர்ப்பது பற்றி பேசியுள்ளார். அப்போது, ஐந்து தொகுதிகளுக்கு ஒப்புக் கொள்வதாக இருந்தால், காங்கிரசை சேர்க்கலாம் என, அவர்கூறியுள்ளார். 'கம்யூனிஸ்ட் கட்சிகள் வருவதாக தெரியவில்லை. அதனால், ஐந்து தொகுதிகளை காங்கிரசுக்கு கொடுக்கலாம்' என, அவர் கூறியதாகவும் கூறப்படுகிறது.புதுச்சேரி தொகுதியையும் தர, தி.மு.க., முன்வரலாம். இந்த தகவலை, முஸ்லிம் கட்சித் தலைவர், தமிழக காங்கிரஸ் தலைவர்களிடம் தெரிவித்துள்ளார். அவர்கள், காங்கிரஸ் மேலிடத் தலைவர், குலாம் நபி ஆசாத்திடம் தெரிவித்துள்ளனர். அவர், காங்கிரஸ் தலைமையிடம் பேசி, இது பற்றி, தி.மு.க.,வுடன் கூட்டணி பேச்சைத் துவங்க அனுமதி வாங்கியிருப்பதாக, காங்கிரஸ் டில்லி வட்டாரம் தெரிவித்தது.அதற்கு முன், தமிழக காங்கிரசைச் சேர்ந்த முன்னணி தலைவர்கள், சிதம்பரம், வாசன், ஞானதேசிகன், இளங்கோவன், தங்கபாலு உள்ளிட்டவர்களுடன், தமிழக காங்., வேட்பாளர் தேர்வுக்குழு பொறுப்பாளர்களில் ஒருவரான,

Advertisement

ஆசாத் இது பற்றி விவாதித்துள்ளார்.

பச்சைக்கொடி
முதலில் கூட்டணிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதை ஏற்று, தி.மு.க.,வுடன் பேச்சைத் துவங்கலாம் என, தமிழக தலைவர்கள் பச்சைக் கொடி காட்டி உள்ளனர். அதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள ஆசாத், இது பற்றி, தி.மு.க., தலைவர் கருணாநிதியுடன் இன்று பேச உள்ளதாக, காங்கிரஸ் வட்டாரம் தெரிவித்தது.இது, இரு கட்சிகளுக்கும் இருந்தகசப்பை குறைப்பதுடன் , லோக்சபா தேர்தல் முடிவுகள் வரும் வரை பழைய உறவை நீட்டிக்க உதவிடும் என்று கூறப்படுகிறது.

இன்று வெளியாகிறது தி.மு.க., பட்டியல்:
'தனித்துப் போட்டியிடுவோம்' என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலர் பிரகாஷ் கராத் நேற்று அறிவித்துள்ளதால், அக்கட்சி தி.மு.க., கூட்டணியில் இடம்பெறவில்லை என்பது உறுதியாகியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு கூட்டம், இன்று காலை, 10:00 மணிக்கு கூடுகிறது. இந்நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின் முடிவு குழப்பத்தில் இருப்பதால், அக்கட்சியினர் கூட்டணிக்கு வந்தாலும், வராவிட்டாலும், இன்று மதியம், தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

- நமது சிறப்பு நிருபர் -
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (274)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raj - trichy,இந்தியா
01-ஏப்-201412:40:52 IST Report Abuse
raj இந்த மாதிரி ஆளுங்க தன் சுய நலத்து காக நாட்டை கூட வித்து சாப்பிடுவாங்க .
Rate this:
Share this comment
Cancel
shanmugarajkaruppiah - Aranthangi,இந்தியா
30-மார்-201400:34:59 IST Report Abuse
shanmugarajkaruppiah மக்களை முட்டாளாக்கும் மனங்கட்ட பொழப்புக்கு தூக்கு போட்டுக்கலாம்
Rate this:
Share this comment
Cancel
kuttisevaru - Chennai,இந்தியா
25-மார்-201400:39:29 IST Report Abuse
kuttisevaru இப்ப பிரச்சினை காங்கிரஸ் dmk கூட்டணியா இல்ல ஸ்ரீலங்கன் தமிழ் மக்கள் பிரச்சினையா?DMDK & PMK சேரலாம்??? கூடவே பிஜேபி-யும் ம்ட்ம்க்-யும் கூட்டணி வச்சிக்கலாம்???யார் இங்க கொள்கை,மானம்,ரோஷம் எல்லாம் பார்கிறது? அப்படிலாம் ஒரு வெங்காயமும் இன்னைக்கு தமிழ்நாடுல மட்டும் இல்ல இந்திய பூராவுமே கெடையாது .....இவ்வளவு ஏன் ???? மக்கள் நாமலே அப்படினா என்ன கிலோ என்ன விலைன்னு தான் கேப்போம்....அப்படி இருக்குறப நம்மல்ல ஒருத்தன இருக்குற அரசியல்வியாதி கிட்ட அதா நாம எதிர்பகுறது எவ்ளோ முட்டாள் தனம்??? ஆர்வ கோளாறுல ஈழ தமிழ் மக்கள் பத்தி பேசுற அறிவளின்களா போர் நடக்குறப எல்லாம் தூங்கிட்டு இருந்தீங்களா?நீங்களும் அங்க போயிடு சண்ட போடா வேண்டியது தான?அப்பா எல்லாம் வாய மூடிகிட்டு இருந்துட்டு இப்ப என்னமோ துடிகிறீங்க? ஈழ தமிழர் படுகொலைய நானும் தான் கண்டிக்கிறேன் அதுக்காக சம்பந்தமே இல்லாம இந்திய நாடாளுமன்ற தேர்தல்ல அத இழுக்காதிங்க.... அரசியல்வாதிங்க தான் முட்டாள் தனமா பேசுரங்கனா சாதாரண மக்களுக்கு புத்தி ஏன் இப்படி போகுது....எப்ப பார்த்தாலும் எதுக்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்பட்டு பேசறது செய்றது...இப்படியே இருங்கடா சீக்கிரம் உருப்புடுடுவீங்க...
Rate this:
Share this comment
Cancel
K.Balasubramanian - Reading RG5 1DG ,யுனைடெட் கிங்டம்
20-மார்-201408:08:32 IST Report Abuse
K.Balasubramanian கேடாக முடிந்த கூடா நட்பினர்கள் மீண்டும் டும் டும் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள் .யாரை யும் இனி ஏமாற்ற முயல வேண்டாம் .
Rate this:
Share this comment
Cancel
muthu - tirunelveli,இந்தியா
14-மார்-201405:37:06 IST Report Abuse
muthu அழகிரி நல்ல மனிதன் . பிரதமர் இடம் அப்படி போடு எண்டு சொல்லி காங்கிரஸ்க்கு .சீட் கிடைக்க -
Rate this:
Share this comment
Cancel
John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்
11-மார்-201403:15:25 IST Report Abuse
John Shiva   U.K நான் இரண்டு மாதத்துக்கு முன்பு சொன்னேன்,கருணாநிதி குத்துக்கரணம் அடிக்கடி அடிப்பார். கட்டாயம் காங்கிரசுடன் கூட்டணி வைப்பர் என்று.இன்று அது நடக்கிறது. காங்கிரசும் DMK உம் சேர்ந்துதான் ஈழத்தமிழரை அழித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஊழலில் இவர்கள் இரண்டுபேரும் முதலாம் இடம்.கனிமொழி ராசா தயாநிதி மாறன் எல்லோரும் ஊழல் குற்றவாளிகள். இவர்களை 40 தொகுதியிலும் மன்கவ்வப் பண்ணவேண்டும் .காங்கிரஸ் தமிழருக்கு செய்யும் துரோகம் மன்னிக்க முடியாதது .அவர்களுடன் இந்த ஊழல் வாதிகள் சேர்ந்து இன்னும் இனத்தை அழிக்கிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
Pudiyavan India - chennai,இந்தியா
10-மார்-201422:07:57 IST Report Abuse
Pudiyavan India எப்படியும் அவர்கள் 5% ஓட்டு திமுக கூட்டணிக்கு வந்தால் நல்லதுதானே. வர வேற்போம்
Rate this:
Share this comment
Cancel
Venkat - chennai,இந்தியா
10-மார்-201421:53:32 IST Report Abuse
 Venkat தலைவா தூக்கத்தில் இருந்து நம் சிங்கம் கார்த்திக்கை எழுப்பி அவருடன் கூட்டணி பற்றி பேச உங்கள் நண்பர் வீரமணியை அனுப்புங்கள். தென் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் உங்களுக்கே வெற்றி.......
Rate this:
Share this comment
Cancel
Biju - chennai,இந்தியா
10-மார்-201421:10:15 IST Report Abuse
Biju கருணாநிதி தலைமை ஏற்றுள்ள தி.மு.க., 1996-ஆம் ஆண்டிலிருந்து 2013-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நடுவில் ஓர் ஆண்டைத் தவிர தொடர்ந்து மத்திய ஆட்சியில் 17 ஆண்டு காலம் அங்கம் வகித்து வந்தது. இப்படி 17 வருடங்கள் சந்தர்பவாத கூட்டணி ஆட்சி செய்துவிட்டு மொத்த ஐஸ்யும் (நாட்டு சொத்து, பதவி) மொத்த குடும்பவும் சப்பி சாப்பிட்ட பிறகு குச்சியே (கூட்டணியே)மட்டும் கடைசி நேரத்தில் தூக்கி எறிந்தது . மேலும் மாணவர்கள் போட்ட அஸ்திரத்தால் காங்கிரஸ் கூட்டணி கப்பலில் மிகப் பெரிய ஓட்டை விழுந்து விட்டது. தப்பித்தால் போதும் என்று தருணம் பார்த்து தி.மு.க.வும், விடுதலை சிறுத்தையும் வெளியேறி விட்டன .மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியே வந்தாலும் காங்கிரசுடன் ஒட்டி உறவாடிக் கொண்டிருப்பவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி, ஏற்காடு இடைத் தேர்தலில் வெற்றி பெறவும் காங்கிரசிடம் ஆதரவு கேட்டதும், கடந்த ஜூன் மாதத்தில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தது. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. 17 ஆண்டு காலம் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த சந்தர்பவாத திமுக-வால் தமிழ் நாட்டிற்கு ஏதாவது நன்மை ஏற்பட்டு இருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை. மத்திய ஆட்சியின் மூலம் தன் குடும்பத்திற்கும், தனது கட்சிக்கும் என்ன நன்மை என்று தான் சுயநலமாகவே சிந்தித்து அதற்கேற்ப நடவடிக்கைகளை எடுத்தவர் கருணாநிதி. இது போதாது என்று 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் மூலம் நாட்டையே சுரண்டியவர்கள் தான் கருணாநிதியின் குடும்பமும், திமுக-வினரும். மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் அங்கம் வகித்து, தமிழகத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தட்டிக் கேட்காமல் தமிழக மக்களுக்கு எல்லா வகையிலும் துரோகம் இழைத்தவர் கருணாநிதி.காவேரி நதிநீர்ப் பிரச்சனை என்றாலும் வணிகர்களுக்கு எதிரான FDI சட்டத்தை பாரளுமந்த்ரத்தில் ஆதரித்து வாக்கு போட்டதும் ,முல்லைப் பெரியாறு பிரச்சனை என்றாலும் ஏழை, எளிய மக்கள் அன்றாடம் எரிபொருளாக பயன்படுத்தக் கூடிய மண்ணெண்ணெய் ஒதுக்கீடு பிரச்சனை என்றாலும் தமிழக மீனவர்கள் பிரச்சனை என்றாலும் தமிழகத்திற்கு மின்சாரம் ஒதுக்குவது குறித்த பிரச்சனை என்றாலும் கச்சத் தீவு பிரச்சனை என்றாலும் ஈழத் தமிழர்கள் பிரச்சனை என்றாலும் மத்திய காங்கிரஸ் அரசு தமிழக மக்களுக்கு எதிராகவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தனது தவறான பொருளாதாரக் கொள்கைகள் மூலம் பெட்ரோல், டீசல், விலை உயர்வு அனைத்துப் பொருட்களின் விலைவாசி உயர்வு பண வீக்கம் விவசாய விரோதக் கொள்கை சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு என ஏழை, எளிய மக்களை வாட்டி வதைத்து பெரும் தொழில் அதிபர்களுக்கு சாதகமாக செயல்படும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு தூக்கி எறியப்பட வேண்டும். பொதுமக்கள் விரும்பாத, ஏற்றுக்கொள்ள இயலாத அறிவிப்புகள், என்னென்ன உண்டோ அவற்றையெல்லாம், தொடர்ந்து சவால் விட்டுச் செய்து கொண்டிருக்கின்றனர்.... தமிழக மக்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைத்துக் கொண்டிருக்கின்ற காங்கிரஸ் மற்றும் எல்லாவற்றுக்கும் இதனை ஆண்டுகள் முட்டு கொடுத்து அதரவுகொடுதுவந்த தி.மு.க.-விற்கு, வருகின்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் ஒரு இடம் கூட கிடைக்காகூடாது. ஜெயா என்ற பெண் சிங்கத்தோடு மோத வெட்டி கெட்டிய ஒன்பது ஆண்கள் கட்சி தலைவர்கள் கூடம்,இதில வீர வசனங்கள் வீரஆகயால் இந்த பாராளுமன்ற தேர்தலில் ,தமிழகத்தில் நிர்வாக திறமை ,துணிச்சல், தனம்பிக்கை மற்றும் மன தெயிரியம் என்று எல்லாம் ஓன்று சேர்ந்த ஜெயலலலிதவின் கரங்களை மத்திய அரசில்யளிலும் பலபடுத்தி ,மக்களுக்கு எதிரான மத்திய அரசு திட்டங்களை முறியடிக்க மற்றும் மக்களுகாக உரக்க ஆணித்தரமாக தொடர்ந்து கொடுக்கும் குரலை ஆதரித்து பெருவாரியான மக்கள் அவர் பின்னல் அணிதிரண்டு நின்று நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைக்க துணை நிற்கவேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
Rajaram Ramkumar - CHENNAI,இந்தியா
10-மார்-201419:34:34 IST Report Abuse
Rajaram Ramkumar 5 ???? அதிகம், ஒன்றோ இரண்டோ கொடுங்கள் போதும், ஐயா தாயே என்னும் நிலையில் தான் தமிழகத்தில் காங்கிரஸ் உள்ளது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X