'அம்மா சென்னையில் கொசுத் தொல்லை தாங்க முடியலைம்மா. இப்படி இருந்துதுன்னா, லோக்சபா தேர்தலில் நமக்கு ரொம்ப பாதிக்கும்மா' என, அதிகாரி ஒருவர், இலை கட்சி தலைவியிடம் சொல்ல, மாநகராட்சியை நிர்வகிக்கும் பொறுப்பில் இருக்கும் கபூரான அதிகாரியை அழைத்து, கடிந்து கொண்டாராம்.
'நான் சொல்றதை கேட்காதது மட்டுமில்ல... ஏற்கனவே, நாம் போட்டியிட தீர்மானித்திருந்த தொகுதிகளையும் விட்டுக் கொடுத்துட்டு, தன்மானத்தையும் விட்டுக் கொடுத்துட்டீங்க. அதனால், தேர்தல் நேரத்தில் நான் அமைதியாகி விடுவேன்' என, மாம்பழக் கட்சித் தலைவரிடம், எரிந்து விழுந்தாராம், தலைவரின் குருவான உறவுக்காரர்.
சூரிய கட்சியில் காவிரி டெல்டா தொகுதிக்கு நடந்த மோதலில், மாணிக்கமான பழநி பிரமுகர், தலைமை துணைவியிடம் மட்டும் ஆதரவு பெற்றிருந்தாராம். ஆனால், பாலுவானவருக்கு, ரஷ்ய தலைவரின் ஆதரவு பலமாக இருந்ததால், சீட் கிடைத்ததாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE