சிரிப்பு வருது... சிரிப்பு வருது...

Added : மார் 11, 2014
Advertisement

லோக்சபா தேர்தலை ஒட்டி, ஒவ்வொரு கட்சியும், அதன் தலைவர்களும், நடந்து கொள்ளும் முறையை கவனித்தால், கீழ்கண்ட சினிமா பாடல்கள்தான் ஞாபகத்திற்கு வருகின்றன என, விழுப்புரத்தை சேர்ந்த வாசகர் சிவ அண்ணாமலை தேசிகன் தெரிவித்துள்ளார். அவரின் ஞானத்தில் உதித்த பாடல்கள் இதோ:
ஞானதேசிகன்: 'யாரை நம்பி நான் பொறந்தேன்; போங்கடா போங்க, என் காலம் ஒரு நாள் வென்ற பின் வாங்கடா... வாங்க!'


பொன் ராதாகிருஷ்ணன்: 'உலகம் பிறந்தது எனக்காக... ஓடும் நதிகளும் எனக்காக... மலர்கள் மலர்வதும் நமக்காக... முரசு கொட்டியதும் நமக்காக...!'


வைகோ: 'தாமரை கன்னங்கள், தேன் சுவை கிண்ணங்கள்... எத்தனை இன்பங்கள்... தேர்தலுக்கு பின் விலகப் போகுது துன்பங்கள்!'


சரத்குமார்: 'தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா.. இன்று நீ தராத பிச்சையிலே தவிக்கிறேனம்மா!'


ஜி.ராமகிருஷ்ணன்: 'மனிதன் நினைப்பதுண்டு... 'சீட்' கிடைக்குமென்று... இறைவன் நினைப்பதுண்டு... பாவம் தோழர்கள் என்று...!'


தா.பாண்டியன்: 'நடக்குமென்பார் நடக்காது... நடக்காது என்பார் நடந்து விடும்... கிடைக்கும் என்பார் கிடைக்காது... கிடைக்காது என்பார் கிடைத்து விடும்...!'


மு.க.அழகிரி: ''அண்ணன் என்னடா... தம்பி என்னடா... அரசியலான உலகத்திலே...!''


மு.க.ஸ்டாலின்: ''வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்; அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம், அண்ணனை சாரும்!''


ஜெயலலிதா: ''நான் உங்கள் வீட்டு பிள்ளை... இது ஊரறிந்த உண்மை... நான் செல்லுகின்ற பாதை... டில்லி செல்லும் பாதை!''


கருணாநிதி: ''எங்களுக்கும் காலம் வரும்... காலம் வந்தால் வாழ்வு வரும்... வாழ்வு வந்தால் தமிழகத்தை வாழவைப்போமே!''


ராமதாஸ்: ''சிலர் சிரிப்பார்... சிலர் அழுவார்... நான் அழுது கொண்டே சிரிக்கின்றேன்!''


திருமாவளவன்: ''கறைமேல் பிறக்க வைத்தான்... எங்களை கூட்டணி கண்ணீரில் மிதக்க வைத்தான்...!''


வாசன்: ''காகிதத்தில் கப்பல் செய்து, கடல் நடுவே ஓட விட்டேன்...''

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X