தனித்து போட்டியிட்டு, வெற்றி பெறும் வல்லமை பெற்றிருந்த கம்யூ., கட்சிகள், அதை வளர்த்தெடுக்க முயலாமல், மாறி மாறி கூட்டணிக்குள் போய் வந்ததின் பலனை இன்று அனுபவிக்கின்றனர்.
பேராசிரியர் எஸ்.குமார், கல்பாக்கம்
கோத்ரா கலவரத்தில், மோடிக்கு பங்கில்லை என, குஜராத் ஐகோர்ட் மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவு தீர்ப்பளித்த பின்னும், சோனியா உள்ளிட்ட தலைவர்கள், மோடி தான் காரணம் என, பேசி வருகின்றனர். இது கோர்ட் அவமதிப்பு அல்லவா? பா.ஜ., இதில் மவுனம் சாதிப்பது ஏன்? சுப்ரீம்கோர்ட்டில் இதுகுறித்து வழக்கு தொடர முடியாதா?
ராமச்சந்திரன், நீலாங்கரை, சென்னை
சிதம்பரம் கீழவீதியில் மார்ச் 11ம் தேதி முதல்வர் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். அதற்காக சாலையின் இருபுறமும் நிழல் தந்த புங்கை மரம், வேம்பு, அரசமரம் ஆகியவற்றை மொட்டை அடித்து விட்டனர். இது நியாயமா?
பி. பாலாஜிகணேஷ், கோவிலாம்பூண்டி, சிதம்பரம்
இந்திய தேர்தல்களில், வாக்குப் பதிவு 60 சதவீதத்தை தாண்டவில்லை. இதற்கு, தொழில் நிமித்தமாக இடம்விட்டு இடம் பெயர்வோர் வாக்களிக்க போதிய வசதி செய்து கொடுக்காததே காரணம். மதுரை கிழக்குத் தொகுதியில் வாக்குரிமை பெற்றுள்ள ஒருவர், பணி நிமித்தம் சென்னையில் வசிக்கிறார். அவர் தேர்தலில் வாக்களிக்க மதுரைக்கு சென்று திரும்ப வேண்டும். அதேபோல், தேர்தல் நாள்களில், தனியார் துறையில் பணியாற்று வோருக்கு, ஒன்று இரண்டு மணி நேரம் மட்டுமே வாக்களிக்க சென்று வரும் அனுமதி வழங்கப்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், ஒரு குடிமகன் நாட்டில் எங்கு இருந்தாலும், தனது பணி இடத்திற்கு அருகில் உள்ள வாக்குச் சாவடியில் இருந்து, தன் வாக்குஉரிமை உள்ள இடத்திற்கு வாக்களிக்கும் வசதியை தேர்தல் கமிஷன் செய்து கொடுக்க வேண்டும்.
சி.ஆர்.சாரநாத், அனுப்பானடி, மதுரை
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE