அரசியல் செய்தி

தமிழ்நாடு

வேட்பாளர் பட்டியல் மாற வாய்ப்பு: கருணாநிதி அறிவிப்பு

Updated : மார் 12, 2014 | Added : மார் 11, 2014 | கருத்துகள் (9)
Share
Advertisement
'அழகிரி பற்றி, தேவையற்ற கேள்விகளையெல்லாம் கேட்டு என்னை புண்படுத்தாதீர்கள்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.அறிவாலயத்தில், அவரது பேட்டி:தி.மு.க., துவக்கத்தில் இருந்து இதுவரையில், ஒவ்வொரு அசைவும், ஜனநாயக ரீதியில் நடைபெறும் ஒரு இயக்கம். நான் இப்போது படிக்கும் இந்தப் பட்டியல், முற்றிலும் முழுமையானது என, நான் சொல்ல மாட்டேன்; ஒன்றிரண்டு திருத்தங்கள் வரக் கூடும்.
வேட்பாளர் பட்டியல் மாற வாய்ப்பு: கருணாநிதி அறிவிப்பு

'அழகிரி பற்றி, தேவையற்ற கேள்விகளையெல்லாம் கேட்டு என்னை புண்படுத்தாதீர்கள்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.

அறிவாலயத்தில், அவரது பேட்டி:
தி.மு.க., துவக்கத்தில் இருந்து இதுவரையில், ஒவ்வொரு அசைவும், ஜனநாயக ரீதியில் நடைபெறும் ஒரு இயக்கம். நான் இப்போது படிக்கும் இந்தப் பட்டியல், முற்றிலும் முழுமையானது என, நான் சொல்ல மாட்டேன்; ஒன்றிரண்டு திருத்தங்கள் வரக் கூடும். வந்தால், தலைமை நிலையத்தின் சார்பில், அந்தத் திருத்தங்களை வெளியிட்டு, அதுவும் இந்தப் பட்டியலில் இணையக் கூடும். கூட்டணிக் கட்சிகளுக்கு, ஐந்து தொகுதிகள் பங்கிடப்பட்டுள்ளது. மீதி, 35 தி.மு.க., வேட்பாளர்களில், 34 பேர் பட்டதாரிகள்; வழக்கறிஞர்கள் 13; டாக்டர்கள், மூன்று; பொறியாளர், ஒருவர்; முதுகலை பட்டதாரிகள், எட்டு பேர்; இளங்கலை பட்டதாரிகள், ஏழு பேர்.கடந்த முறை எம்.பி.,க்களாக இருந்தவர்கள், எட்டு பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். புதிதாக இந்தத் தேர்தலில் போட்டியிடுவோர், 27 பேர்; பெண்கள், இரண்டு பேர்.இவ்வாறு கருணாநிதி கூறினார்.

பின், நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:

தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ் இடம் பெற இருக்கிறதா?

கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற இருக்கிறதா என்பது பற்றி பத்திரிகைகளில் செய்தி வந்திருக்கலாம். ஆனால், நாங்கள் அது பற்றி எந்தச் செய்தியும் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறோம்.

வேட்பாளர்களில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதா?
வேட்பாளர்களை நீங்கள் சந்தித்தால், இளைஞரா, முதியவரா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இடதுசாரிகள் வருவார்களா?
இடதுசாரிகளுடன் இதுவரை தொடர்பு கொள்ளவில்லை. பத்திரிகைகள் வாயிலாக, அவர்கள் வரக்கூடிய செய்தி வந்து கொண்டிருப்பதை நான் அறிவேன்.

பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறதா; யாராவது தொடர்பு கொண்டார்களா?
இதுவரை, அவர்கள் தொடர்பு கொள்ளவில்லை.

அழகிரி தனிக்கட்சி ஆரம்பிக்கப் போவதாக பேசியிருக்கிறாரே?
இது, தி.மு.க., வேட்பாளர்களை அறிவிக்கும் கூட்டம். எனவே, தேவையற்ற கேள்விகளையெல்லாம் கேட்டு, என்னை புண்பட வைக்காதீர்கள்; அவ்வளவு தான் சொல்வேன்.

தேர்தல் அறிக்கை எப்போது வெளியிடப்படும்?
நாளை (இன்று)

பிரசாரம் எப்போது துவங்குகிறீர்கள்?
வாய்ப்பான தேதியும், வழிகளும், ஊர்களும் பட்டியலிட்ட பின், அறிவிக்கப்படும்.

பெங்களூரு சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு விரைவில் வெளி வர உள்ளது. வந்தால், அ.தி.மு.க.,வின் நிலை எவ்வாறு இருக்கும்?
அந்தத் தீர்ப்பைப் பற்றி நான் இப்போது சொல்வது, நீதி நெறிக்கு, சட்டமுறைக்கு ஏற்றதல்ல.

சுப்ரீம் கோர்ட், இன்றைக்கு அளித்துள்ள ஒரு தீர்ப்பில், 'எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள் மீதான வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்' என, சொல்லப்பட்டிருக்கிறது. அந்தத் தீர்ப்பு, ஜெயலலிதா மீதான இந்த வழக்கிற்கு பொருந்தும் என நினைக்கிறீர்களா?
இது ஏறத்தாழ, 15 ஆண்டுகளாக நடக்கும் வழக்கு. இப்போது,பெங்களூரில் நடக்கிறது. பெங்களூரு வந்த பின் தள்ளாடுகிறது. விரைவில், வழக்கு முடியும் என, நம்புகிறேன்.

இடதுசாரிகளின் பேச்சுவார்த்தைக்கு ஏதாவது காலக்கெடு வைத்திருக்கிறீர்களா?
ஒரு ஜனநாயகக் கட்சியில், அதுவும், தி.மு.க., போன்ற, நல்ல, நேர்மையான, நியாயமான அணுகுமுறையை நட்பு ரீதியில் கடைபிடிக்கும் ஒரு இயக்கத்தில், 'கண்டிப்பாக இந்த தேதிக்குள் நீங்கள் வர வேண்டும்' என, நான் யாரையும் வற்புறுத்த முடியாது.

தேர்தலில், எந்தெந்த பிரச்னைகளை முன் வைத்து, தி.மு.க., மக்களிடம் ஓட்டு கேட்கும்?
தேர்தல் அறிக்கை, தமிழ், ஆங்கிலத்தில் வெளியிடப்படுகிறது. அதை நீங்கள் படித்துப் பார்த்தால், தி.மு.க., எதை வைத்து, மக்களை இந்த தேர்தலில் அணுகப் போகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

தேர்தல் முடிவுக்கு பின், பா.ஜ.,வின் மோடி பிரதமராக வாய்ப்பு ஏற்பட்டால், நீங்கள் அதை ஆதரிப்பீர்களா?
மதச்சார்பற்ற ஒரு கட்சி, இந்தியாவின் ஆளுங்கட்சியாக வருவதைத் தான், நானும், என் தலைமையில் உள்ள, தி.மு.க.,வும் விரும்பும். தனிப்பட்ட ஒருவரைக் குறிப்பிட்டு, 'அவரை நீங்கள் ஆதரிப்பீர்களா, மாட்டீர்களா?' என்றெல்லாம், என்னிடம், பதில் பெறுவது சரியல்ல.

மோடி அலை வீசுவதாககூறப்படுகிறதே?
எனக்கு தெரிந்த வரையில், இங்கே வங்காள விரிகுடா அலையைத் தான் காண முடிகிறது.

மூன்றாவது அணிக்கான வாய்ப்பு எப்படி இருக்கிறது. அதில், தி.மு.க., வின் பங்கு என்னவாக இருக்கும்?
ஜனநாயக ரீதியில், மதச்சார்பற்ற வகையில், எந்த அணி அமைந்தாலும், அதில், தி.மு.க., பங்கு இருக்கும்.

இரண்டொரு வேட்பாளர்கள் மீது, ஊழல் வழக்குகள் இருக்கின்றன; அவர்களை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா?
உண்மையில் அவர்கள் மீது குற்றச்சாட்டு இருக்கிறது என, நீங்கள் எப்படி நம்புகிறீர்கள்? போடப்பட்ட வழக்குகள் எல்லாம், இப்போது ஆடிக் கொண்டிருக்கின்றன. அந்த வழக்குகளை நிரூபிக்கக் கூடிய சாட்சிகள் இல்லை என்ற சூழ்நிலை உருவாகியிருக்கிறது.

பெண்களுக்கு வேட்பாளர் பட்டியலில் மிகக் குறைந்த இடங்கள், அதாவது, இரண்டு இடங்கள் தான் கொடுக்கப்பட்டிருக்கிறதே?

ஒரு பெண் இருந்தே, நாட்டை ஆட்டுவிக்கிறார் என்றால்...

'முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வாங்கித் தந்தது அ.தி.மு.க., தான்; நீங்கள் வாங்கித் தரவில்லை' என, ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?
தேர்தல் பிரசாரத்தில், இப்படி பொய் சொல்வது அந்த அம்மையாருக்கு கைவந்த கலை.

'சேனல் - 4'ல் வெளியிடப்பட்ட படத்தில், பெண்கள் கற்பழித்து, கொலை செய்யப்பட்டு, அவர்களின் பிணங்களின் மீது, இலங்கை ராணுவம் செல்வதெல்லாம் காட்டப்பட்டிருக்கிறதே?
இது போன்ற ஆவணப் படங்கள் ஏற்கனவே வெளி வந்தன. அந்தப் படங்கள் குறித்து, இலங்கை அரசின் கவனத்திற்கும், குறிப்பாக, மத்திய அரசின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டிருக்கிறது.அது பற்றி, 'டெசோ' அமைப்பு சார்பில், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, வெளிநாட்டு தூதரகங்களிலும், ஐ.நா., சபையிலும் ஸ்டாலின், டி.ஆர்.பாலு எடுத்துச் சொல்லியுள்ளனர். நடவடிக்கை இன்னும் எடுக்கப்படவில்லை.இவ்வாறு கருணாநிதி கூறினார்.பேட்டியின் போது, பொதுச்செயலர் அன்பழகன், பொருளாளர் ஸ்டாலின், கனிமொழி எம்.பி., ஆகியோர் உடன் இருந்தனர்.


அழகிரி ஆதரவாளர்கள், குஷ்புக்கு 'சீட்' இல்லை:

கடந்த லோக்சபா தேர்தலில், நடிகர் நெப்போலியன், பெரம்பலூர் தொகுதியிலும்; நடிகர் ரித்தீஷ், ராமநாதபுரம் தொகுதியிலும் போட்டியிட்டனர். இருவரும், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ள, தென் மண்டல அமைப்பு செயலர் அழகிரியின் ஆதரவாளர்கள். இந்த தேர்தலில், அழகிரி ஓரங்கட்டி வைக்கப்பட்டுள்ளதால், அவரது ஆதரவாளர்கள் ஒருவர் கூட, பட்டியலில் இடம் பெறவில்லை. நடிகை குஷ்பு, சென்னையில் உள்ள ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் தொகுதி கேட்டு பணம் கட்டவில்லை. இருப்பினும், வி.ஐ.பி., பட்டியலில் அவர் இடம் பெறுவார் என, கூறப்பட்டது. ஆனால், அவருக்கும், 'சீட்' கிடைக்கவில்லை.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Selvam Palanisamy - Thiruthangal,இந்தியா
14-மார்-201409:57:42 IST Report Abuse
Selvam Palanisamy தமிழர் குல தங்கம், சீறிப்பாயும் சிங்கம் டி.ராஜேந்தருக்கு வாய்ப்பு கொடுங்க தலைவா
Rate this:
Cancel
Muthusamy Krishnan - salem,இந்தியா
11-மார்-201408:16:34 IST Report Abuse
Muthusamy Krishnan நக்கல் விக்கல் நாயகனே,அழகிரியை பற்றி கேட்டவுடன் 'விக்கல்'உங்களுக்கே வந்துவிட்டதா? குஷ் பூ, இட்லிக்கு செட் இல்லை என்றால்....நீங்கள் வெளியிட்டது 'பட்டி ''இலா? குருமா கட்சியினர் விழுப்புரத்தில் 'தங்கள்,சாலின்'நின் உருவ பொம்மையை எரித்து மரியாதையை செலுத்தினார்களே? மீண்டும் மரியாதை தேவையா?
Rate this:
Cancel
Tiruvannamalai Kulasekaran - AUSTRALIA  ( Posted via: Dinamalar Android App )
11-மார்-201407:24:31 IST Report Abuse
Tiruvannamalai  Kulasekaran தி்ருவண்ணாமலைக்கு அண்ணாதுரை எனும் இளைஞர் நல்ல வேட்பாளர். வெற்றி உறுதி்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X