லோக்சபா தேர்தலில், வெற்றி வாய்ப்பு மிக்க தொகுதியை தேர்வு செய்வதில், தலைவர்கள் கண்ணும் கருத்துமாக உள்ளனர். பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங், உ.பி., தலைநகர், லக்னோவில் நிற்க ஆசைப்பட்டார். ஆனால், பா.ஜ.,வின் முக்கியமான தலைவரான, லால்ஜி தண்டன், இந்த தொகுதியில், காலம் காலமாக போட்டியிடுகிறார். எனவே, 'சாகும் வரை, என் தொகுதியை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்' என, பிடிவாதமாக கூறிவிட்டார். இருப்பினும், பா.ஜ., தலைவர்கள், தொகுதியை ராஜ்நாத்திற்கு விட்டு கொடுக்கும் படி, தண்டனிடம் கெஞ்சுகின்றனர். இப்போது கெஞ்சுவோர், தேர்தல் முடிந்த பின் மிஞ்சுவார்கள் என்பது, தண்டனுக்கு தெரியாதா என்ன?
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE