அபூர்வ ஆமைக்குஞ்சுகள் கடலில் விடும் பணி தீவிரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அபூர்வ ஆமைக்குஞ்சுகள் கடலில் விடும் பணி தீவிரம்

Added : மார் 11, 2014
அபூர்வ ஆமைக்குஞ்சுகள் கடலில் விடும் பணி தீவிரம்

வேதாரண்யம்: அழியும் நிலையில் உள்ள அபூர்வ இன, 'ஆலிவ்ரெட்லி' ஆமைக்குஞ்சுகளை, கோடியக்கரை கடலில், வனத்துறையினர் பாதுகாப்பாக விடத்துவங்கி உள்ளனர்.

நாகை மாவட்டம், கோடியக்கரையில், வனத்துறை சார்பில், ஆமைக்குஞ்சு பொரிப்பகம் இயங்கி வருகிறது. ஜனவரி முதல் மார்ச் வரை, ஆழ்கடல் பகுதியில் இருந்து, நாகை மாவட்ட கடற்கரை பகுதிக்கு வரும், ஆலிவ்ரெட்லி ஆமைகள், முட்டை இடுகின்றன. இவற்றை, இந்த மையம் சேமித்து பாதுகாக்கிறது. இந்த ஆண்டு, இதுவரை, 8,000 ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவை, 45 முதல் 55 நாட்களுக்குள் குஞ்சாக பொரித்ததும், கடலுக்குள் பாதுகாப்பாக விட்டு, இனவிருத்தி செய்யப்படுகின்றன. பொரிப்பகத்தில் இருந்து, 250 ஆமைக்குஞ்சுகளை, கோடியக்கரை கடலில், நேற்று காலை, 9:30 மணிக்கு, வனத்துறையினர் விட்டனர். வனத்துறையினர் கூறுகையில், 'கோடியக்கரையில் ஆமைக்குஞ்சு பொரிப்பகம் மூலம், இதுவரை, 1,000 ஆமைக்குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன. மீதமுள்ள, 7,000 முட்டைகளில் குஞ்சு பொரித்தவுடன், கடலில் பத்திரமாக விடப்படும்' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X