விருதுநகரில் நடந்த, அ.தி.மு.க., வேட்பாளர் ராதாகிருஷ்ணன் அறிமுக கூட்டத்தில், சக்தி கோதண்டம் பேசியதாவது: மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதால், பா.ஜ., 200 தொகுதிகளில் வெற்றி பெறும். காங்., 50 இடங்களில் வெற்றி பெறும். மீதம், 272 எம்.பி.,க்கள் தேவை என்பதால், அக்கட்சிகளால், மத்தியில் ஆட்சியமைக்க முடியாது. மாநிலக் கட்சிகளின் சார்பில் வெற்றிபெறும் எம்.பி.,க்கள் அனைவரும், ஜெ.,க்கு ஆதரவு தெரிவிப்பர். அதனால், தமிழகம், புதுச்சேரியில், 40 தொகுதிகளிலும், அ.தி.மு.க., வெற்றிபெற்றால், ஜெ., பிரதமர் ஆவது உறுதி. இவ்வாறு, சக்தி கோதண்டம் பேசினார்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE