தேனி மாவட்ட, அ.தி.மு.க.,வில், அண்ணா தொழிற்சங்க செயலராக பதவி வகிக்கும், ஆர்.பார்த்திபன், யாரும் எதிர்பாராத வகையில், லோக்சபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். வேட்பாளர் தேர்வுக்கு சென்று முதல்வரை சந்தித்த போது, அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். தற்போது, பார்ப்பவர் காலில் எல்லாம் விழுகிறார். அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் காலில் விழுந்து வணங்கியதோடு, அவரது மகன் ரவீந்திரநாத் குமார் காலில் விழுந்தும் ஆசிர்வாதம் வாங்கினார். அ.தி.மு.க.,வில் முதல்வரைத் தவிர, வேறு யாருடைய காலிலும் விழக்கூடாது. அப்படி விழுந்தால், அவர்களை முதல்வருக்கு இணையாக, மதிப்பதற்கு ஈடாகி விடும். இதன் மூலம் காலில் விழுந்தவருக்கும், ஆசிர்வாதம் கொடுத்தவருக்கும் பிரச்னை ஏற்படலாம். தேவையில்லாமல் கட்சி நிர்வாகிகளை, சிக்கலில் மாட்டி விடாதீர்கள். உங்கள் வெற்றிக்கு கட்சியினர் எல்லோரும் உணர்வு பூர்வமாக பாடுபடுவார்கள்' என, கட்சி நிர்வாகிகள், பார்த்திபனுக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE