'கனியான அம்மாவை நம்பி நாங்க இருந்தோம். எப்படியும் கூட்டணி வந்துடும்னு சொன்னாங்க. ஆனா, அவரோட ரஷ்ய தலைவர் பெயருடைய அண்ணன் விடாப்பிடியா இருந்து கூட்டணி ஏற்படாம செஞ்சிட்டாரு. இப்ப நாங்க நட்டாத்துல நிக்கறோம்' என, கை கட்சியினர், சூரிய கட்சி கூட்டணி அமையாதது குறித்து புலம்புகின்றனர்.
ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியை துடைப்ப சின்ன கட்சிக்காரர்கள் அணுகி, 'நீங்கள் தென் சென்னையில் போட்டியிட வேண்டும்' என, அழைக்க, மறுத்துவிட்டாராம் நிலா பெயருடைய அந்த நீதிபதி. 'கம்யூனிஸமே ஒத்து வராமல்தான், ஒதுங்கி இருக்கிறேன். தெரியாத உங்களை நம்பி வரமாட்டேன்' என, சொல்லிவிட்டாராம்.
'மாம்பழ கட்சி போனால் விட்டுடுங்க. நாம பார்த்துக்கலாம்' என, தாமரை கட்சி தலைவர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாராம் வேந்தர் தலைவர். இதன் பின்னணி குறித்து விசாரித்த போதுதான், பூனைக்குட்டி வெளியே வந்ததாம். மாம்பழ கட்சிக்காரர் வெளியே போனால், அவர் கட்சிக்கு கூடுதல் சீட் கிடைக்குமாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE