லோக்சபா தேர்தலுக்கான பிரசாரத்தில், ஒவ்வொரு புதுமையாக நிகழ்த்தி வரும், பா.ஜ., அடுத்த கட்டமாக, பிரதமர் வேட்பாளர், மோடியின் வாழ்க்கை வரலாற்றை, 'காமிக்ஸ்' ஆக அச்சிட முடிவு செய்துள்ளது. குஜராத், பாத்மீர் கிராமத்தில் பிறந்து வளர்ந்தது, டீக்கடை நடத்தியது, பா.ஜ.,வில் பிரபலமானவராக மாறியது, குஜராத் முதல்வராக பொறுப்பேற்று, மாநிலத்தை முன்னேற்றியது வரையிலான விவரங்கள், அந்த காமிக்ஸ் புத்தகத்தில் இடம் பெறுகின்றன. டில்லியில் உள்ள ஒரு பிரபல பதிப்பகம், அந்த காமிக்சை அச்சிட முன்வந்துள்ளது. ஒரு புத்தகத்தின் விலை, 50 ரூபாய் என, முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மோடி பிரபலமானதை சாதகமாக்கி, கட்சிக்கு நிதி சேர்க்க, இப்படி ஒரு தந்திரத்தை, பா.ஜ., கடைப்பிடிப்பதாக சிலர் விமர்சிக்கின்றனர். காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் அல்லவா!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE