உ.பி.,யில், ஏப்., 30ம் தேதி, உன்னாவ் மற்றும் பதேபூர் தொகுதிகளிலும், மே, 7ம் தேதி, ராம்பூர் மற்றும் விஸ்வநாத்கஞ்ச் தொகுதிகளிலும், இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த தொகுதிகளில், காங்., மற்றும் சமாஜ்வாதி கட்சிகளே, இதுவரை மாறி மாறி வெற்றி பெற்றுள்ளன. இம்முறை, அவர்களின் கனவுகளுக்கு வேட்டு வைக்க, புதிய வெடிகள் தயாராகி விட்டன. கடந்த ஆறு மாதங்களில், ஆளும் சமாஜ்வாதி கட்சியினர் மீதான அதிருப்தி, உன்னாவ், பதேபூர், ராம்பூர் தொகுதிகளில், மாயாவதி யின், பகுஜன் சமாஜ் கட்சிக்கான ஆதரவு அலையாக மாறி விட்டதாம். அதேபோல், விஸ்வநாத்கஞ்ச் தொகுதியில், பா.ஜ., ஆதரவு பெருகியுள்ளதாம். இந்தத் தகவலை, உளவுத் துறை மூலம் அறிந்த, சமாஜ்வாதி கலக்கத்தில் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியினருக்கும், இது, வயிற்றில் புளி கரைத்து கொண்டிருக்கிறது.