தமிழகத்தில், பிரதான மாநில கட்சியுடன், காங்கிரஸ் கூட்டணி சேர்ந்தால், லோக்சபா தேர்தல் நேரத்தில், டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லங்களில் கூட்டம் நிரம்பி வழியும். தேர்தலில் போட்டியிட, 'சீட்' கேட்போர், அவரின் ஆதரவாளர்கள், கோஷ்டி தலைவர்கள் மற்றும் 'சிட்டிங்' எம்.பி.,க்கள் என, தமிழக காங்., பிரமுகர்கள் முகாமிட்டு, ஆளாளுக்கு சீட் பெறும் வேலைகளில் மும்முரம் காட்டுவர். ஆனால், வரும் தேர்தலுக்கு, தமிழகத்தில், காங்கிரசுடன் எந்தக் கட்சியும் கூட்டணி சேராமல், ஒதுங்கி நிற்பதால், தேர்தலில் போட்டி இட விருப்ப மனு தாக்கல் செய்தவர்கள் உட்பட, யாரும் டில்லிக்கு வரவில்லை. அதனால், டில்லியில் புதிய மற்றும் பழைய தமிழ்நாடு இல்லங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. 'கூட்டணி என்ற சோறு இருந்தால்தானே, 'சீட்' கேட்கும், 'காக்கை'கள் குவியும். அது, இல்லாததால், இந்த நிலைமை என்கின்றனர், தமிழ்நாடு இல்ல பொறுப்பாளர்கள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE