வாசகர் கடிதம்

Added : மார் 12, 2014 | கருத்துகள் (1)
Share
Advertisement
சிறப்பு பேட்டி, கார்ட்டூன், கிசு கிசு என, அரசியல் ஆர்வம் உள்ளவர்களுக்கு, தேர்தல் களம் இணைப்பு, காட்சி ஊடகங்கள் தர முடியாத சுவாரஸ்யத்தை தருகிறது; பாராட்டுகள்.ஸ்யாமளா ரங்கநாதன், மந்தவெளி, சென்னைஅ.தி.மு.க., - தி.மு.க., கூட்டணிகளில், தே.மு.தி.க., இடம்பெறாதது நல்லது; ஏனென்றால், இவர்களுடன் சேர்ந்து வெற்றி பெற்ற பின், 2016 சட்டமன்ற தேர்தலின் போது, விஜயகாந்த, பேரம் பேசுவார். ஜனநாயகம்

சிறப்பு பேட்டி, கார்ட்டூன், கிசு கிசு என, அரசியல் ஆர்வம் உள்ளவர்களுக்கு, தேர்தல் களம் இணைப்பு, காட்சி ஊடகங்கள் தர முடியாத சுவாரஸ்யத்தை தருகிறது; பாராட்டுகள்.
ஸ்யாமளா ரங்கநாதன், மந்தவெளி, சென்னை

அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டணிகளில், தே.மு.தி.க., இடம்பெறாதது நல்லது; ஏனென்றால், இவர்களுடன் சேர்ந்து வெற்றி பெற்ற பின், 2016 சட்டமன்ற தேர்தலின் போது, விஜயகாந்த, பேரம் பேசுவார். ஜனநாயகம் பணநாயகமாக மாறிவிட்டது என்பது, பகிரங்கமாகிவிடும்.

வே.சரவணன், சென்னை

மோடி அலை, தமிழகத்தில், பா.ஜ., போட்டியிடும் தொகுதிகளில் மட்டுமே எதிரொலிக்கும்; கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்களில், மோடி ஆதரவாளர்கள், அ.தி.மு.க.,விற்கே வாக்களிப்பர்.

சேகு மகதூம், முகப்பேர், சென்னை

காங்., கட்சி வேட்பாளர் தேர்விற்கு வருந்தி கூப்பிட்டாலும்... விருந்துண்டு செல்பவர்களே வருவார்கள். ஆடு, தானாகவா தலையை கொடுக்கும் ?


எஸ்.ராம்கோபால், மதுரை

இலவசங்களுக்கு அடித்துக்கொள்வது; பணம் பெற்றுக்கொண்டு ஓட்டு போடுவது இவற்றில் இருந்து தான், லஞ்சம், ஊழல் பெருகுகிறது. ஆகவே, நாம் சரியாக இருந்தால், ஊழல்வாதிகளை கேள்வி கேட்கலாம்; புறக்கணிக்கலாம்.

அ. ஜெயபாலன், மதுரை

சிவகங்கையில், ஐந்து முறை வெற்றிபெற்று, அமைச்சரானவர் ப.சிதம்பரம். அவரை, தொகுதியின் செல்லப்பிள்ளை என, நினைத்து வாக்களித்தோம். ஆனால், வரலாற்று சாதனை என்று, சொல்லிக்கொள்ளும்படி, அவர், தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை. இந்த தேர்தலில், அதற்கான பாடத்தை கற்பிக்க தயாராகி உள்ளோம்.

எஸ். செய்யது அலி, ஐக்கிய ஜமாத் தலைவர், தொண்டி.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thirumalai Kumar - tenkasi,இந்தியா
13-மார்-201401:48:56 IST Report Abuse
Thirumalai Kumar இன்றைய நிலைமையில் புதிய கட்சிகள் ஆட்சிக்கு வருவதன் மூலமே நாட்டில் ஏதேனும் மாற்றம் காணமுடியும்.தற்போதுள்ள கட்சிகள் ஓன்று மற்றொன்றை குறைகூறியே மாறிமாறி ஆட்சிக்கு வருகிறதே தவிர புதிய மாற்றம் ஏதும் இல்லை. மதம்,சாதி என்று கூறிக்கொண்டே,மதம்,சாதி கட்சிகளுக்கு தமது கட்சியில் இடம் கொடுத்து மக்களை ஏமாற்றுகின்றன.மக்களின் அடிப்படை தேவை களை பூர்த்திசெய்யும் எந்த கட்சியானாலும் வரவேற்கபடவேண்டும்.ம்ம் மக்களின் மனநிலை என்னவோ கடவுளுக்கே வெளிச்சம்..காத்திருப்போம் இரண்டு மாதம்........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X