சிறப்பு பேட்டி, கார்ட்டூன், கிசு கிசு என, அரசியல் ஆர்வம் உள்ளவர்களுக்கு, தேர்தல் களம் இணைப்பு, காட்சி ஊடகங்கள் தர முடியாத சுவாரஸ்யத்தை தருகிறது; பாராட்டுகள்.
ஸ்யாமளா ரங்கநாதன், மந்தவெளி, சென்னை
அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டணிகளில், தே.மு.தி.க., இடம்பெறாதது நல்லது; ஏனென்றால், இவர்களுடன் சேர்ந்து வெற்றி பெற்ற பின், 2016 சட்டமன்ற தேர்தலின் போது, விஜயகாந்த, பேரம் பேசுவார். ஜனநாயகம் பணநாயகமாக மாறிவிட்டது என்பது, பகிரங்கமாகிவிடும்.
வே.சரவணன், சென்னை
மோடி அலை, தமிழகத்தில், பா.ஜ., போட்டியிடும் தொகுதிகளில் மட்டுமே எதிரொலிக்கும்; கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்களில், மோடி ஆதரவாளர்கள், அ.தி.மு.க.,விற்கே வாக்களிப்பர்.
சேகு மகதூம், முகப்பேர், சென்னை
காங்., கட்சி வேட்பாளர் தேர்விற்கு வருந்தி கூப்பிட்டாலும்... விருந்துண்டு செல்பவர்களே வருவார்கள். ஆடு, தானாகவா தலையை கொடுக்கும் ?
எஸ்.ராம்கோபால், மதுரை
இலவசங்களுக்கு அடித்துக்கொள்வது; பணம் பெற்றுக்கொண்டு ஓட்டு போடுவது இவற்றில் இருந்து தான், லஞ்சம், ஊழல் பெருகுகிறது. ஆகவே, நாம் சரியாக இருந்தால், ஊழல்வாதிகளை கேள்வி கேட்கலாம்; புறக்கணிக்கலாம்.
அ. ஜெயபாலன், மதுரை
சிவகங்கையில், ஐந்து முறை வெற்றிபெற்று, அமைச்சரானவர் ப.சிதம்பரம். அவரை, தொகுதியின் செல்லப்பிள்ளை என, நினைத்து வாக்களித்தோம். ஆனால், வரலாற்று சாதனை என்று, சொல்லிக்கொள்ளும்படி, அவர், தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை. இந்த தேர்தலில், அதற்கான பாடத்தை கற்பிக்க தயாராகி உள்ளோம்.
எஸ். செய்யது அலி, ஐக்கிய ஜமாத் தலைவர், தொண்டி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE