ஆவேசமாக பேசும் தலைவர்கள் கட்சி அங்கீகாரம் ரத்து?

Updated : மார் 13, 2014 | Added : மார் 13, 2014 | கருத்துகள் (13)
Advertisement
ஆவேசமாக பேசும் தலைவர்கள் கட்சி அங்கீகாரம் ரத்து?

புதுடில்லி: 'தேர்தல் பொதுக்கூட்டங்கள் மற்றும் பிரசார கூட்டங்களில், தரக்குறைவாகவும், பிறருக்கு, வெறுப்பை தூண்டும் வகையிலும் பேசும், அரசியல் தலைவர்களின் கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்யலாமா' என, மத்திய சட்ட கமிஷனுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோர்ட் தலையிட முடியாது: அரசியல் கட்சி தலைவர்களின், தரக்குறைவான பேச்சை தடைசெய்யக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு, கடந்த, 3ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், 'அரசியல்வாதிகளின் பேச்சில், கோர்ட் தலையிட முடியாது. இது, மிகப் பெரிய ஜனநாயக நாடு. சர்ச்சைக்குரிய பேச்சை, மக்கள் தான் முடிவு செய்யவேண்டும்' என, தெரிவித்திருந்தனர். இந்நிலையில், 'பிரவாசி பாலய் சங்கதன்' என்ற, தன்னார்வ அமைப்பு, சுப்ரீம் கோர்ட்டில், பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தது.

அதில் கூறப்பட்டு இருந்ததாவது: பொதுக் கூட்டங்களிலும், பிரசார கூட்டங்களிலும், சில அரசியல் கட்சி தலைவர்களும், மத அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், தரக்குறைவாகவும், வெறுப்பை தூண்டும் வகையிலும் பேசுகின்றனர். குறிப்பாக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, முதல்வர், பிருத்விராஜ் சவான் தலைமையிலான மகாராஷ்டிராவில், 'மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா' கட்சி தலைவர் ராஜ் தாக்கரே, பீகார், உ.பி., போன்ற, வட மாநிலத்தவரை, தரக்குறைவாக பேசுகிறார். அவருக்கு எதிராக, வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆந்திராவில், 'அகில இந்திய மஜ்லிஸ் - இ - முஸ்லிமின்' என்ற கட்சியின் தலைவர், அக்பருதீன் ஓவாய்சியும், இது போல் பேசுகிறார். இதற்காக, அவர், கைதும் செய்யப்பட்டார். ஆனாலும், தொடர்ந்து, அவதூறாகவே, அவர் பேசுகிறார்.

ஆலோசனை: இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, இவர்கள் சார்ந்த அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் அங்கீகாரத்தையும் ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு, நீதிபதி, பி.எஸ்.சவுகான் தலைமையிலான, 'பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: வெறுப்பை தூண்டும் வகையிலும், தரக்குறைவாகவும் பேசும், அரசியல் தலைவர்கள், மத அமைப்புகளின் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, அவர்கள் சார்ந்த கட்சி மற்றும் அமைப்புகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாமா என்பது பற்றி, மத்திய சட்ட ஆணையம், மத்திய அரசுக்கு ஆலோசனை மற்றும் பரிந்துரை அளிக்கலாம். மேலும், எத்தகைய பேச்சு, தரக்குறைவான பேச்சு என்பதை, வரையறை செய்வதற்கான வழிகாட்டும் குறிப்புகளை, மத்திய சட்ட ஆணையம் உருவாக்கி, அதன் பரிந்துரையை மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். மத்திய சட்டம் மற்றும் நீதித் துறைக்கு, சட்டம் குறித்த ஆலோசனைகளை வழங்குவதற்காக, சட்டக் கமிஷன் உள்ளது. இதன் தலைவராக, அஜித் பிரகாஷ் ஷா உள்ளார்; இவர், டில்லி, ஐகோர்ட்டின் முன்னாள், தலைமை நீதிபதி.

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Panneer - Puduchery,இந்தியா
14-மார்-201407:21:20 IST Report Abuse
Panneer அறிஞர்கள் ,நன்கு படிதவர்வர்கள் ,தொண்டுள்ளம்மக்கள் பணியில் தன்னலமற்ற சேவை புரிபவர்கள் பண்பாளர்கள் எத்தனையோ பேர் இருந்தும் கட்சி அரசியலில் கண்டுகொள்ளபடுவதில்லை. .கிரிமினல்களும், ஆள் /பன பலம் உள்ளவர்களும் தான் எம்.பி பதவிக்கு கோடிகணக்கில் செலவு செய்து வெற்றி பெறுகிறார்கள். நூறு கோடி கொடுத்தல் மாநிலங்களவைய்ல் எம்.பி கிடைக்கிறது... ஜனாதிபதி நியமனத்தில் ஏன் ஒரு நபரையாவது கட்சி சார்பில்லாத நல்லவர்களை தேர்ந்த்டுக்கக்கொடது?. மக்களுக்கு நல்லது செய்யவும் அதற்கான சட்டதிட்டங்களை வகுக்கவும் தான் பாராளுமன்றங்கள் .இதில் எத்தனைபேர் கொள்ளைக்காரர்கள் கிரிமினல்கள் உள்ளார்கள் எனபது மக்கள் அறிந்ததே . தற்போது கிடைத்திருக்கும் வாய்ப்பு சரியாக பயன்படுதபடவில்லைஎன்றல் ஜனநாயகம் அஸ்தமித்துவிடும் என்பதை மக்கள் உணரவேண்டும் .அணைத்து அரசியல் கட்சிகளும் பதவிக்கவும் பணத்துக்காவும் தான் அடித்துகொள்ளுகின்றனவே தவிர மக்கள்னநலனுக்காக அல்ல. (.தன மக்கள் நலனுக்கு தான் ).
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
13-மார்-201416:12:49 IST Report Abuse
Endrum Indian வெறுப்பை - இதை முடிவு செய்வது யார். இவர்கள் மூஞ்சியை டெலிவிசனில், மற்றும் இவர்கள் பேசும் பேச்சின் அர்த்தம் எல்லாவற்றையும் பார்க்கும் போது (எனக்கு) மக்களுக்கு வெறுப்பாக இருக்கின்றது. ஆகவே நான் இப்பொழுது இருக்கும் எல்லாக் கட்சிகளையும் ban செய்யவேண்டும் என்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
13-மார்-201415:20:00 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> அப்போ அம்மா எவனோ எழுதி தந்ததை மூக்குவிடைக்க ஆவேசமா படிச்சுன்னே இருக்காக. ஜெயா tv ல தினம் இதே ராவுசுதான். பொழுது போக்கவே டிவி ன்னு நெனெச்சு வாங்கினோம். எலெக்ஷன் வந்தது முதலே எல்லா சானல்களிலும் இந்த அக்கப்போர்தான். பொழுதுபோக்கே இல்லே. தவிர அம்புட்டு விளம்பரங்கள் , இந்தம்மா பேசறதெல்லாம் எலக்ஷன் கமிஷன் கண்டுக்கறதே இல்லியா? தான் தானம் தந்ததையே பேசின்னு இருக்காக 1. அல்லது முக ,ஸ்டாலின் என்று எல்லோரையும் வாரிட்டுருக்காக. வெறும் சுயப்ரதாபமே இருக்கு. நான் டிவி பார்ப்பதையே நிறுத்திட்டேன். சன் டிவிலே சீரியல்லே பிரதானம். அதுவும் கொடுமை, வயசிலே வெறும் ரிபீட்டுதான். போட்டதையே போட்டு அறுவை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X