அன்று பாய்ந்தவர்கள் இன்று பம்முவது ஏன்?காங்., தலைகளுக்கு எதிராக தொண்டர்கள் ஆவேசம்

Updated : மார் 13, 2014 | Added : மார் 13, 2014 | கருத்துகள் (21)
Share
Advertisement
தமிழகத்தில், 'காமராஜர் ஆட்சி அமைப்போம்' என்ற கோஷத்தை, தேர்தலுக்கு தேர்தல் கூவி விட்டு, தேர்தல் வந்ததும், அந்த கோஷத்தை காற்றில் பறக்கவிட்டு, திராவிடக் கட்சிகளின் முதுகில் சவாரி செய்து வந்த, தமிழக காங்., இந்த லோக்சபா தேர்தலை, மாறுபட்ட கோணத்தில் சந்திக்கிறது. அதாவது, காங்கிரசை கூட்டணியிலிருந்து, தி.மு.க., கழற்றி விட்டது. அதேநேரத்தில், இலங்கை தமிழர்கள் பிரச்னை, தமிழக
அன்று பாய்ந்தவர்கள் இன்று பம்முவது ஏன்?காங்., தலைகளுக்கு எதிராக தொண்டர்கள் ஆவேசம்

தமிழகத்தில், 'காமராஜர் ஆட்சி அமைப்போம்' என்ற கோஷத்தை, தேர்தலுக்கு தேர்தல் கூவி விட்டு, தேர்தல் வந்ததும், அந்த கோஷத்தை காற்றில் பறக்கவிட்டு, திராவிடக் கட்சிகளின் முதுகில் சவாரி செய்து வந்த, தமிழக காங்., இந்த லோக்சபா தேர்தலை, மாறுபட்ட கோணத்தில் சந்திக்கிறது.

அதாவது, காங்கிரசை கூட்டணியிலிருந்து, தி.மு.க., கழற்றி விட்டது. அதேநேரத்தில், இலங்கை தமிழர்கள் பிரச்னை, தமிழக மீனவர்கள் பிரச்னை உட்பட, தமிழர்கள் நலன்சார்ந்த விஷயங்களுக்கு, காங்., மேலிடம் முக்கியத்துவம் அளிக்காததால், அக்கட்சியுடன் கூட்டணி சேர, அ.தி.மு.க.,வும் விரும்பவில்லை.


கூட்டணிக்கு வளைக்க...


அதனால், விஜயகாந்தின் தே.மு.தி.க.,வை, கூட்டணிக்கு வளைக்க, காங்., தலைவர்கள் முற்பட்டனர். அந்த முயற்சியும் தோல்வியில் தான் முடிந்தது.இருந்தாலும், தி.மு.க., - தே.மு.தி.க., - காங்., கூட்டணி அமையும். அந்த கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என, ஆசைப்பட்டு, லோக்சபா தேர்தலில், காங்., சார்பில் போட்டியிட, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்பமனு தாக்கல் செய்தனர்.ஆனால், எந்தக் கட்சியும் அணி சேராமல், காங்., தனித்துப் போட்டியிடும் நிலைமையில் உள்ளதால், விருப்பமனு தாக்கல் செய்தவர்கள் எல்லாம், தற்போது, தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து, விலகத் துவங்கி உள்ளனர். இதில் முந்திக் கொண்டவர்கள், மத்திய அமைச்சர், வாசன் மற்றும் முன்னாள் அமைச்சர், ஜெயந்தி நடராஜன்.

இவர்களை போல, கடந்த 10 ஆண்டு கால, மத்திய ஆட்சியில் அங்கம் வகித்த, எம்.பி., பதவி சுகத்தை அனுபவித்த, தமிழக காங்., மூத்த தலைவர்கள் பலரும், தேர்தலில் போட்டியிலிருந்து விலக தீர்மானித்து உள்ளனர். அதற்கு சாக்குப் போக்காக, தங்களின் அப்பாவி ஆதரவாளர்களை நிறுத்தும்படி, பரிந்துரை செய்து வருகின்றனர்.அவர்களின் இந்தச் செயல், காங்., தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக, அவர்கள் கூறியதாவது:காங்., தனித்துப் போட்டியிடுவதால், 'டெபாசிட்' வாங்குவது, பெரும் கஷ்டம் என்பதால், தமிழக காங்., தலைவர் ஞானதேசிகன், மத்திய அமைச்சர்கள் வாசன், சிதம்பரம், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் மற்றும் சில கோஷ்டி தலைவர்கள் போட்டியிட விரும்பவில்லை.


களமிறக்க வேண்டும்


அதேபோல், முந்தைய இரண்டு தேர்தல்களில், நல்ல கூட்டணி அமைந்த போது, போட்டி போட்டு, 'சீட்' வாங்கியவர்கள் எல்லாம், இந்த முறை தோல்வி நிச்சயம் என, நினைத்து, பணம் செலவழிக்கவும், தேர்தல் களம் இறங்கவும் தயங்குகின்றனர். அதற்கு பதிலாக, அப்பாவிகள் சிலரை களமிறக்கி, அவர்களின் பணத்தை கரைக்க, சதித் திட்டம் தீட்டுகின்றனர்.இப்படிப்பட்ட நபர்களின் செயலை, காங்., மேலிடம் அனுமதிக்கக் கூடாது. தற்போதைய எம்.பி.,க்கள் அனைவரையும், மீண்டும் தேர்தல் களத்தில் இறக்க வேண்டும். அதேபோல், காங்கிரசால், ஆதாயம் பெற்றவர்களையும் களமிறக்க வேண்டும். அப்போது தான், தமிழகத்தில், காங்., வலுபெறும். இதுதொடர்பாக, கட்சியின் துணைத் தலைவர், ராகுலுக்கு, பேக்ஸ் மூலம் கடிதங்கள் அனுப்பி, கோரிக்கைகள் விடுத்து வருகிறோம்.இவ்வாறு, காங்., தொண்டர்கள் தெரிவித்தனர்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gilbert karunagaran - Istres ,பிரான்ஸ்
14-மார்-201401:30:44 IST Report Abuse
Gilbert karunagaran திராவிட கட்சிகள், "ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்" என்று காமராஜர் கூறினார். அவர்களுடன் கூட்டணி வைத்தே காங்கிரஸ் தமிழகத்தில் பலவீனமாகிவிட்டது. இனி காங்கிரஸ் தனித்து நிற்பதால் பலம் கூடும்...
Rate this:
Cancel
எவர்கிங் ஏகாம்பரம் - திருச்சிராப்பள்ளி ,இந்தியா
13-மார்-201408:22:18 IST Report Abuse
எவர்கிங் ஏகாம்பரம்  தமிழகத்தில் காங்கிரஸ் பம்மவில்லை. ஒரு நல்ல அணித் தலைவருக்காக அதாவது கேப்டன் னுக்காக காத்து கொண்டு இருகிறார்கள். அதனால்தான் அங்கே கமலாலய பேச்சு வார்த்தை தொடர்ந்து இழுத்தடிக்க படுகிறது.
Rate this:
Cancel
Appan - London,யுனைடெட் கிங்டம்
13-மார்-201407:43:12 IST Report Abuse
Appan இந்த பற்றி இப்படி செய்தி போடுவதே வேஸ்ட். திமுகவும் ஒரு நாள் இப்படி ஆகும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X