சென்னை:''நம்மை யாரும் அசைக்க முடியாது; வீழ்த்த முடியாது,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.
தி.மு.க., முதன்மை செயலர் ஆற்காடு வீராசாமியின், தம்பி இல்ல திருமண விழா, சென்னையில் நேற்று நடந்தது.
விழாவில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது:நெருக்கடி காலத்தில், சிறைச்சாலையில், ஸ்டாலின் பட்ட துன்ப, துயரங்களையெல்லாம், இங்கே பேசியவர்கள் எடுத்து கூறினர். வீராசாமி, மறைந்த சிட்டிபாபு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், நமக்கு சென்னை சிறைச் சாலையில் இருந்து, மீண்டும் ஸ்டாலின் கிடைத்திருக்க மாட்டார். அப்படிப்பட்ட தன்னைப் பற்றி கவலைப்படாமல், தன் கட்சியின் தொண்டர்கள் வாழ வேண்டும் என்பதில், எந்த அளவுக்கு, வீராசாமி போன்றவர்கள் கவனம் செலுத்தினரோ, அந்தக் கவனம் தான், இன்றைக்கும் தமிழகத்தில், குறிப்பாக, தி.மு.க.,வில் தொடருகிறது.இந்த காரணத்தினால் தான் நம்மை யாரும் அசைக்க முடியவில்லை. யாரும் வீழ்த்த முடியவில்லை. யாரும் அகற்ற முடியாமல், யாரும் பலவீனப்படுத்த முடியாமல், அவ்வளவு பலமாக இந்த கட்சி வளர்ந்துள்ளது.இவ்வாறு, கருணாநிதி பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE