திருவள்ளூரில் ரவிகுமார் போட்டி

Added : மார் 13, 2014
Advertisement
திருவள்ளூரில் ரவிகுமார் போட்டி

தி.மு.க., கூட்டணியில், திருவள்ளூர் லோக்சபா தொகுதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலர், ரவிகுமார் போட்டியிடுகிறார்.
திருவள்ளூர் லோக்சபா தொகுதி, தி.மு.க., கூட்டணி கட்சியான, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, ஒதுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, அக்கட்சியின் பொதுச் செயலரான, ரவிகுமார், போட்டியிடுவார் என, கட்சித் தலைவர், திருமாவளவன் அறிவித்துள்ளார். கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவில் தொகுதியின், முன்னாள் எம்.எல்.ஏ.,வான ரவிகுமார், பி.ஏ., - பி.எல்., படித்துள்ளார். எழுத்தாளர். வங்கியில் பணிபுரிந்த இவர், அப்பணியை ராஜினாமா செய்து விட்டு, எம்.எல்.ஏ., தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். இவரது சொந்த ஊர், நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி தாலுகா, மாங்கணாம்பட்டு கிராமம். இவர் தற்போது, புதுச்சேரியில் வசித்து வருகிறார். தி.மு.க., கூட்டணி சார்பில் போட்டியிடுவதால், அக்கட்சியினர் ஆதரவுடன், வெற்றி பெறுவது உறுதி, என, திருவள்ளூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், தெரிவித்தனர்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X