சென்னை: தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியலில், இடம் பெறாதவர்களுக்கு, ஆறுதல் அளிக்கும் வகையில், தலைமை தேர்தல் பணி பொறுப்பாளர்களாக, ஆறு பேர் நியமிக்கப்பட்டுளளனர்.
தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியலில், தங்கள் பெயர் இடம் பெறும் என, துணைப் பொதுச் செயலர் வி.பி.துரைசாமி, வழக்கறிஞர், கே.எஸ்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட, சிலர் எதிர்பார்த்தனர். ஆனால், அவர்களுக்கு சீட் வழங்கவில்லை. இதனால், அதிருப்தியளர்களை திருப்திப்படுத்தும் வகையில், தலைமை தேர்தல் பணி பொறுப்பாளர்கள் பதவிக்கு அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து, தி.மு.க., பொதுச்செயலர் அன்பழகன் அறிக்கை: லோக்சபா தேர்தலையொட்டி, ஆங்காங்கு மாவட்டங்களில் எழும் பிரச்னைகள் குறித்து தலைமை நிலையத்துடன் தொடர்பு கொண்டு ஆவண செய்தி தரவும், தொகுதிகளில் நடைபெற வேண்டிய பணிகளை, தலைமை நிலையம் சார்பில் கவனிக்கவும், வி.பி.துரைசாமி, கல்யாணசுந்தரம், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், பரந்தாமன், சிவப்பிரகாசம், துறைமுகம் காஜா ஆகியோர், தலைமை கழக தேர்தல் பணி பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு, அன்பழகன் கூறியுள்ளார். தமிழகத்தில், லோக்சபா தேர்தல், அடுத்த மாதம், 24ம் தேதி நடக்கிறது. இதற்கான, தி.மு.க., வேட்பாளர் பட்டியல், 10ம் தேதி வெளியானது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE