''தி.மு.க., தலைவர் கருணாநிதி, என்னை, மாப்பிள்ளை போல் அலங்கரித்து, ஆலந்தூர் தொகுதியில் நிறுத்தி உள்ளார். என்னை வெற்றிபெறச் செய்யுங்கள்,'' என, ஆலந்தூர் தொகுதி வேட்பாளர், ஆர்.எஸ்.பாரதி, தொண்டர்களிடம், வேண்டுகோள் விடுத்தார்.
ஆலந்தூர் தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில், தி.மு.க., சார்பில், ஆர்.எஸ்.பாரதி வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். இதையொட்டி, தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம், ஆலந்தூர் பகுதியில் நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூர் லோக்சபா தொகுதி வேட்பாளர் ஜெகத்ரட்சகன், ஆலந்தூர் சட்டசபை தொகுதி வேட்பாளர் ஆர்.எஸ்.பாரதி, மாவட்ட செயலர் அன்பரசன் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், ''என்னை மாப்பிள்ளை போல அலங்கரித்து, ஆலந்தூர் தொகுதியில், கருணாநிதி நிறுத்தி உள்ளார். என்னை வெற்றி பெற செய்வது, உங்கள் கையில் தான் உள்ளது. நான் வெற்றி பெறுவேனா, இல்லையா என, உறவினர்கள், நண்பர்கள் என, யாரிடமும் பந்தயம் கட்டாதீர்கள்,'' என, கட்சித் தொண்டர்களை பார்த்து, கைகூப்பி வேண்டுகோள் விடுத்தார்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE