மோடி அலையை பயன்படுத்தி, தமிழகத்தில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என, தமிழக பா.ஜ., பலமான கூட்டணிக்கு முயற்சி செய்தது. இருப்பினும், தே.மு.தி.க., - ம.தி.மு.க., - பா.ம.க., போன்றவை, பா.ஜ., கூட்டணியில் இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில், மதுரை வந்த, பா.ஜ., மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு, அகில இந்திய பார்வர்டு பிளாக் (வல்லரசு) நிர்வாகிகள் வரவேற்று ஆதரவு தெரிவித்தனர். வடமாநிலங்களில், பார்வர்டு பிளாக், பா.ஜ.,வை எதிர்க்கும் நிலையில், தமிழகத்தில், அ.தி.மு.க., கூட்டணியில், பார்வர்டு பிளாக் (பி.வி.கதிரவன் பிரிவு), தி.மு.க., கூட்டணியில் பார்வர்டு பிளாக் (சந்தானம் பிரிவு) இடம் பெற்ற நிலையில், வல்லரசு பிரிவு பா.ஜ., கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தது குறித்து நிருபர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. பதிலளித்த பொன்.ராதாகிருஷ்ணன், ''தேர்தல் கூட்டணி என்பது தமிழகத்தில் மட்டும் அல்ல, இந்தியளவில் கொள்கை அளவில் கூட்டணி என, எந்த கட்சியையும் சொல்லி விட முடியாது. தற்போது அகில இந்திய பார்வர்டு பிளாக்(வல்லரசு) கட்சி நட்பு கூட்டணியாக எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்,'' என்றார். ஆதாயம் இல்லாமல், வல்லரசு பிரிவு ஆதரவு தெரிவிக்குமா?
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE