'டிவி' செய்தி வாசிப்பாளர்களில், பிரபல மானவர் பாத்திமா பாபு, டிவி தொடர்கள் மற்றும் சினிமாவில் நடித்து வருகிறார். அ.தி.மு.க.,வின், நட்சத்திர பேச்சாளர்களில் ஒருவரான இவர், 40 தொகுதிகளிலும், நாளை முதல் தேர்தல் பிரசாரம் துவங்க உள்ளார்.
தன் அரசியல் அனுபவம் மற்றும் லோக்சபா தேர்தல் குறித்து, பாத்திமா பாபு கூறியதாவது: நான் மனதளவில், அ.திமு.க., வில் சேர்ந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. கட்சியில் சேர் வதற்காக கடந்தாண்டு போயஸ் கார்டன் சென்றபோது, கோவி லுக்குள் நுழைந்தது போல இருந்தது. ஜெயலலிதாவின் துணிச்சலும், உறுதியான முடிவும் பாராட்டத்தக்கது. தமிழக மக்களுக்கு, அவர் செய்யும் நன்மைகளைப் போல, இனி யாராலும் செய்ய முடியாது. மத்திய அரசில், தி.மு.க., அங்கம் வகித்தும், இலங்கை தமிழர்கள் பிரச்னையில், எந்த உதவியும் செய்யவில்லை. இலங்கை பிரச்னையிலும், குடும்பத்தினர் செய்த ஊழலை மறைக்கவும், கருணாநிதி நடத்திய நாடகங்கள் மக்களுக்கு தெரியாமல் இல்லை. எதை பேசினாலும், கட்சிக்காரர்களும், பொதுமக்களும் நம்பிவிடுவார்கள் என்ற, நம்பிக்கையுடன் கருணாநிதி உள்ளார். அவரது நினைப்பு தவறானது என்பதை, லோக்சபா தேர்தல் முடிவுகள் உணர்த்தி விடும். ஊழல் செய்தவர்களுக்கும், சிறை சென்றவர்களுக்கும் தி.மு.க.,வில் தேர்தல், 'சீட்' வழங்குவது சாதாரணம். '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழலில், சிறை சென்றுவந்த ராசாவுக்கு, மீண்டும் நீலகிரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்து உள்ளார்.
வேட்பாளர்கள் நல்லவர்களா, தொகுதி மக்களுக்கு நல்லது செய்வார்களா என, கருணாநிதி பார்ப்பதில்லை. பண பலம் உள்ளவர்களா, எந்த வழியிலாவது தேர்தலில் வெற்றி பெற்று விடுவார் களா என்பதை பார்த்தே, வேட் பாளர்களை கருணாநிதி தேர்வு செய்துள்ளார். தி.மு.க., வேட் பாளர்கள் தாராளமாக செலவு செய்வார்கள். அதனால், அவர்கள் விஷயத்தில், தேர்தல் கமிஷன் உஷாராக இருக்க வேண்டும். பதவியில் நீடிக்கவும், குடும் பத்திற்கு நிதி திரட்டவுமே, கருணாநிதி அரசியல் நடத்துகிறார். தேர்தல் பிரசார கூட்டங்களில், அ.திமு.க., வின் திட்டங்களை எதிர்க்கட்சியினர் விமர்சித்தால், அவர்களுக்கு, நான் சரியான பதிலடி கொடுப்பேன். அ.தி.மு.க., கூட்டணி யில், கம்யூனிஸ்ட்களை ஜெயலலிதா சேர்த்துக் கொள்ளாததற்கு, சரியான காரணம் இருக்கும். அவரின் முடிவு சரியாகவே இருக்கும். ஏழைகளுக்கு, 'அம்மா' உணவகங்கள் மூலம், ஒரு ரூபாய்க்கு இட்லி வழங்குவது, மாணவ, மாணவியர் மற்றும் விவசாயிகளுக்கு, அ.தி.மு.க., அரசு செய்துள்ள உதவிகளை மேடைக்கு மேடை முழங்கினால் போதும், அ.தி.மு.க., வெற்றி பெற்று விடும். இவ்வாறு, பாத்திமா பாபு கூறினார்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE