தி.மு.க.,விற்கும், காங்கிரசுக்கும் ஒருமித்த கருத்து உள்ளது. இது வரவேற்கத்தக்கது. - நாராயணசாமி
நாய்ஸ்: கதவை மூடினாலும், அய்யான்னு கூப்பிட்டுக்கிட்டே இருக்கீங்க. அது, காதுல விழலை போல, இன்னும் சவுண்டா கூப்பிடுங்க.
தி.மு.க., வேட்பாளர்களில், 30 சதவீதத்திற்கு மேலாகவே, இளைஞர் களுக்கு வாய்ப்பு தரப்பட்டு உள்ளது. - கருணாநிதி
நாய்ஸ்: இளைஞரணி செயலரா தாத்தாவான ஸ்டாலின் இன்னமும், தொடர்ந்துட்டு இருக்காரே... அந்த மாதிரி இளைஞர்களா?
'காமாலை கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்' எனும் பழமொழி போல், அ.திமு.க.,வை கண்டு அஞ்சும் தி.மு.க., வினருக்கு, எதைப் பார்த்தாலும் இரட்டை இலை போலவே தெரிகிறது. - ஜெயலலிதா
நாய்ஸ்: குதிரைக்கு இறக்கை முளைக்க வைக்க உங்களால தான் முடியும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE