மாணவர்களுக்கு 'தேர்வு' காலம் போல், அரசியல்வாதிகளுக்கு, 'தேர்தல்' காலம் மிகவும் முக்கியம். இடைவிடாது பிரசாரத்தில் ஈடுபடும் அவர்கள் உடல்நலத்தில் அக்கறை செலுத்த வேண்டாமா? திண்டுக்கல் அருகே உள்ள செம்பட்டியை சேர்ந்த ராமு என்ற வாசகர் தெரிவித்த யோசனைகள்:
* மூன்று வேளையும் குளிக்க வேண்டும்
* 'குடிக்க' வேண்டும். கண்ட, கண்ட பழச்சாறுகளைக் குடித்து உடலைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது. இளநீரை மட்டும் அறவே தொடக்கூடாது. 'டாஸ்மாக் தண்ணி'யை மட்டுமே, ராவாக சாப்பிடவேண்டும்
* காலையில் எழுந்ததும், குளிர்ந்த பீரில் முகம் கழுவ வேண்டும்
* கண்ட, கண்ட சரக்குகளை உள்ளே தள்ளாமல், ஒரே, 'பிராண்ட்'டை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இல்லையேல், 'தொண்டை' பிரச்னை ஏற்படும்; பேசமுடியாது. வாக்குகளை அள்ள முடியாது
* இளநீர், ஐஸ்கட்டியைப் பயன்படுத்தி மட்டுமே, 'தண்ணி'யை உள்ளே தள்ள வேண்டும். புட்டிகளில் அடைக்கப்பட்ட குளிர் பானங்களை கலக்கக்கூடாது
* கோடைக்காலம் என்பதால், எங்கும், 'ஏசி' இருப்பதுபோல் பார்த்துக் கொள்ளுங்கள்
* சைவ உணவை அறவே தொடக்கூடாது. நொறுக்கு தீனிகளில், அசைவ கலப்பு அவசியம் இருக்க வேண்டும்
* தினமும் குறைந்தது 3 லிட்டர் 'பீரா'வது குடிக்க வேண்டும்
* தேர்தல் முடியும் வரை பதற்றம், பயம் போக்க, 'யோகா' அவசியம்
* தேர்தல் முடியும் வரை, தனியாகப் படுக்கக்கூடாது
* 'ஆவி' வேக்காடு அயிட்டங்கள் பக்கம் போகவே கூடாது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE