'ராசி இல்லாதவர் அ.தி.மு.க., வேட்பாளர்'

Added : மார் 13, 2014 | கருத்துகள் (1)
Share
Advertisement

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய, தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் தொகுதி வேட்பாளர், ஜகத்ரட்சகனை தொண்டர்களுக்கு அறிமுகப்படுத்தும் கூட்டம் நேற்று முன்தினம் மாலை, பேருந்து நிலையம் அருகே நடந்தது. கூட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்ட, தி.மு.க., செயலர், அன்பரசன் பேசியதாவது: அ.தி.மு.க., வேட்பாளர் ராமச்சந்திரன், ராசி இல்லாதவர். 2004ம் ஆண்டு தேர்தலில், செங்கல்பட்டு லோக்சபா தொகுதியில், போட்டியிட்டு தோல்வி அடைந்தவர். அதன்பின், 2011ல், செங்கல்பட்டு சட்டசபை தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, பின் அந்தத் தொகுதி கூட்டணி கட்சிக்கு சென்றதால், வாபஸ் பெறப்பட்டார். ராசி இல்லாத ராமச்சந்திரன், நமக்கு எதிராக போட்டியிடுகிறார். அதனால், ஒரு லட்சத்திற்கும் மேலான ஓட்டுகள் வித்தியாசத்தில், ஜெகத்ரட்சகன் வெற்றி பெறுவது நிச்சயம். இவ்வாறு, அன்பரசன் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vadivelu - chennai,இந்தியா
13-மார்-201402:46:12 IST Report Abuse
vadivelu இந்த ஒரு லட்சம் என்று சொல்வதை நிறுத்தி கொள்ளுங்களேன், அந்த 1.75 லட்சம் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X