திண்டுக்கல் தொகுதி தி.மு.க., வேட்பாளராக காந்திராஜன் அறிவிக்கப்பட்டுள்ளார். காந்திராஜன், அ.தி.மு.க., வில் இருந்தபோது மாவட்ட பேரவை செயலராக இருந்தார். அதனால், அ.தி.மு.க., தொண்டர்கள், நிர்வாகிகள் ஆகியோரிடம் இவருக்கு நேரடி அறிமுகம் உண்டு. அப்போது, அ.தி.மு.க., மாவட்ட செயலராக இருந்த சீனிவாசன் உடன் ஏற்பட்ட கோஷ்டிப்பிரச்னையால், அக்கட்சியிலிருந்து விலகி, தி.மு.க., வில் இணைந்தார். இப்போது காந்திராஜனுக்கு, தி.மு.க., சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க., வினருக்கு மட்டுமின்றி, அ.தி.மு.க., வினரிடமும் நன்கு அறிமுகமானவர் என்பதால், பழைய பாசத்தில், அ.தி.மு.க., வினரை வளைக்க தயாராகி வருகிறார். அ.தி.மு.க., வேட்பாளர் உதயகுமார் கட்சியினருக்கே அறிமுகமில்லாத நிலையில், காந்திராஜனின் பழைய பாசம் தேர்தலில் எடுபடுமா என்பது, அ.தி.மு.க., தொண்டர்களிடம், அக்கட்சி நிர்வாகிகள் நடந்துகொள்ளும் முறையை பொறுத்தே உள்ளது. 'பழைய பாசம் ஓட்டாகுமா அல்லது ஆப்பாகுமா' என்பது, தேர்தலுக்கு பிறகுதானே தெரியும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE