பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடிக்கு ஆதரவாக, ஈரோட்டில், பிரசாரம் செய்து வருகிறார் காந்தி கெட்டப்பில் உள்ள, கோபியை சேர்ந்த சண்முகநாதன், 78, என்ற சண்முககாந்தி. இதுகுறித்து அவர் கூறியதாவது: காந்திய கொள்கைகளால் ஈர்க்கப்பட்டேன். மதுரை, மேலப்பாளையத்தில், அடித்தட்டு மக்களுக்காக, மேல் சட்டையை மகாத்மா காந்தி துறந்தார். அதனால், 2002 முதல் காந்தியடிகளின் கெட்டப்பில் உலா வருகிறேன். ஒரு பெண் முதல்வராக உள்ள தமிழகத்தில், மது குடிப்பதால், 40 சதவீத உயிரிழப்பு நடப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. மதுவிலக்கு அமலில் உள்ள, குஜராத் மாநிலம் சென்றிருந்தேன். கல்வி, பொருளாதாரம் என, அனைத்து துறைகளிலும், அங்கு மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறி இருப்பதை கண்டேன். எனவே, பா.ஜ., பிரதம வேட்பாளர் மோடிக்கு ஆதரவாக, காந்தி கெட்டப்பில் பிரசாரம் செய்கிறேன். இவ்வாறு, சண்முகநாதன் கூறினார். காந்தி கெட்டப்பில் பிரசாரம் செய்தாலும், ஓட்டுக்கு காந்தி படம் போட்ட நோட்டை எதிர்பார்ப்பவர்கள் நம் நாட்டில் இருக்கிறார்களே.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE