அ.தி.மு.க., - பா.ஜ., கட்சிகள், இப்போது, தனித்து நின்றாலும், பின், இரண்டு கட்சிகளும், ஒன்று சேரும் என, நினைப்பது தவறில்லை. தீவிரவாதம் வேர் அறுக்கப்பட வேண்டும் என்பதில், இரு கட்சிகளும் ஒத்த நிலைபாடு உடையவை.
எஸ்.ராம்கோபால், மதுரை
'தேர்தல் களம்' வந்த பிறகு, லோக்சபா தேர்தல் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது என, கூறும்படி இருந்தது. நன்றியும்; பாராட்டுகளும். எஸ். செல்லம் நடராஜன், சென்னை
பல கட்டங்களுக்கு பிறகு, தமிழகத்தில், ஐந்து முனை போட்டி என்பது, ஏறக்குறைய உறுதியாகி உள்ளது. நாட்டு நலனை சிந்தித்து, கட்சியை தேர்ந்தெடுக்க வேண்டியது, நம் கடமை. துரை. தங்கவேல், பொள்ளாச்சி
நாடாளுமன்ற மாண்பை காக்க வேண்டுமானால், மத்தியில், பெரும் மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க வேண்டும்.
து.மாரியப்பன், கீழக்கரணை, காஞ்சிபுரம்
தலித் தலைவர்கள், ஒன்றுக்கும், இரண்டுக்கும் மன்றாடுவதை விடுத்து, தனித்து போட்டியிட்டு, தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டும்; பின், அவர்களே, தகுதியான அளவு சீட் தருவார்கள். ஜெ. கெஜேந்திரன், மணிமங்கலம்
அரவிந்த் கெஜ்ரிவாலின், குஜராத் சுற்றுப்பயணம் விளம்பரத்திற்காக செய்யப்பட்டதாகும். தேவை இல்லாத விஷயங்களில், ஆதாயம் தேடுவது, அரசியல் பண்பல்ல. சாஸ்தா சுப்ரமணியம், திருப்பூர்
முதலில், அரசுகள் மக்களை எப்படி காப்பது என்பதற்கான முடிவினை எடுத்து, அதனை மக்களுக்கு அறி வித்து விட்டு, தேர்தலை சந்தித்தால் மக்களுக்கு மட்டுமல்ல, அமையும் அரசிற்கும் நல்லதாக இருக்கும். வீ.சக்திவேல், தே.கல்லுப்பட்டி, மதுரை மாவட்டம்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE