ஒடிசாவில், பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கண்ணில் விரல் விட்டு ஆட்டிக்கொண்டிருக்கும் முதல்வர் நவீன் பட்நாயக் தற்போது சற்றே தளர்ந்து விட்டார். தினசரி, நூற்றுக்கணக்கானோர், தங்களுக்கு தொகுதி கேட்டு, அவரது வீட்டு வாசலில் வரிசை கட்டி நிற்பதால் தான் இந்த தளர்ச்சி. கடந்த 14 ஆண்டுகளில், பட்நாயக் நேரடியாக வேட்பாளர்களை தேர்வு செய்வது இதுதான் முதன்முறை என்கின்றனர். கடந்த தேர்தல் வரை, தொகுதி ஒதுக்கீட்டை கவனித்துக் கொண்டிருந்த, பட்நாயக்கின் நெருங்கிய ஆலோசகர் பியாரி மகோபாத்ரா, கட்சியில் இருந்து விலகியதுதான் இதற்கு காரணம். இதற்கிடையே, ஒடிசாவில் மோடி அலை சற்றே பலமாக வீசத் துவங்கியிருப்பதால், பிஜூ ஜனதா தளத்தினர் பதற்றம் அடைந்திருக்கின்றனர். இதுவரை, 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருக்கின்றனர். மோடி அலைக்கிடையே அவர்களை சமாளிப்பது எப்படி என, பட்நாயக் மண்டையை குடைந்து கொண்டிருக்கிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE