சமாஜ்வாதிக்கு தண்ணி காட்ட ஜாட் இன தலைவர்கள் தீவிரம்| Dinamalar

சமாஜ்வாதிக்கு தண்ணி காட்ட ஜாட் இன தலைவர்கள் தீவிரம்

Added : மார் 13, 2014

உத்தர பிரதேச மாநிலத்தில், ஏற்கனவே முசாபர்நகர் கலவரத்தை அடுத்து, பயங்கரவாத தாக்குதல் எதுவும் நடந்து விடக் கூடாது என்பதில், மாநில போலீசார் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். அவர்களுக்கு, குடைச்சல் கொடுக்கும் வகையில், வரும், ??ம் தேதி, பிரமாண்ட, 'காப்' மாநாட்டை நடத்த, ஜாட் இன தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். அந்த அதிருப்தி, 25ம் தேதி மாநாட்டின் போது, கலவரமாகி விடக் கூடாதே என, பீதி அடைந்துள்ள ஆளுங்கட்சி, மாநாட்டை எப்படியாவது தடுத்து நிறுத்துங்கள் என, மாவட்ட நிர்வாகத்தை தார் குச்சி வைத்து குத்தி வருகிறது. ஆனால், எப்படியாவது மாநாட்டை நடத்தியே தீருவது என, ஜாட் இன தலைவர்கள் உறுதியாக உள்ளனர். கடந்தாண்டில் நடந்த இரு மாநாடுகளும் கலவரங்களாக முடிந்ததும், அதில் பல தலைவர்களை போலீசார் தாக்கியதும், ஆளும் சமாஜ்வாதி அரசு மீது, ஜாட் இன தலைவர்களை அதிருப்தி அடைய வைத்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X